Mahindra Thar Roxx -ன் அறிமுகத்திற்கு முன்னதாக டீசர் மீண்டும் ஒரு முறை வெளியிடப்பட்டுள்ளது
மஹிந்திரா தார் ரோக்ஸ், ரியர் டோர் ஹாண்டில்கள் C-பில்லர்களுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மற்றும் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களின் ஸ்டைலான தொகுப்பை வெளிப்படுத்துகிறது.
-
இது LED ஹெட்லைட்கள், சில்வர் கான்ட்ராஸ்ட் பம்பர்கள், டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் LED டெயில் லைட்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.
-
கேபினில் பீஜ் கலர் ஸ்கீம் மற்றும் 3-டோர் மாடலைப் போன்ற அதே டேஷ்போர்டு லேஅவுட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இதில் இரண்டு 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷனிங், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
-
தற்போதைய தாரில் உள்ள தார் ரோக்ஸ் 2.2-லிட்டர் டீசல் மற்றும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் இதிலும் கொடுக்கப்படும். என்றாலும் மீண்டும் ட்யூன் செய்யப்பட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விலை ரூ.15 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா தார் ரோக்ஸ் அதன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. மேலும் கார் தயாரிப்பாளர் வெளிப்புறத்தை காண்பிக்கும் மற்றொரு டீசரை வெளியிட்டுள்ளது. சமீபத்திய டீசர் புதிதாக எதையும் வெளியிடவில்லை என்றாலும் வட இந்தியாவின் உயரமான மலைகளை கடந்து செல்லும் நீளமான தார் அதன் ப்ரொபைலின் தெளிவான பார்வையை வழங்குகிறது.
டீசர் வீடியோவில் நாம் கண்ட அனைத்தும் இங்கே:
டீசர்கள் மூலம் தெரியவருவது என்ன?
பழைய டீசருடன் ஒப்பிடும்போது புதிய டீசரில் மாற்றங்கள் குறித்து புதிதாக எதுவும் காட்டப்படவில்லை, முன்புறத்தில் காரின் கலரில் ஸ்லேட்டட் கிரில், C-வடிவ LED DLR-களுடன் புதிய LED ஹெட்லைட்கள் மற்றும் மாறுபட்ட சில்வர் பூச்சு கொண்ட பம்பர்களும் உள்ளன.
டீசர் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களுக்கான புதிய டிசைனை வெளிப்படுத்துகிறது. 3-டோர் தாரிலிருந்து மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடு நீளமான வீல்பேஸ் மற்றும் இரண்டு கூடுதல் டோர்கள், ரியர் சீட்களை எளிதாக அணுக அனுமதிக்கிறது. கூடுதலாக, முந்தைய ஜென் மாருதி ஸ்விஃப்ட்டை நினைவூட்டும் வகையில், C-பில்லர்களில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேண்டில்களை ரோக்ஸ் கொண்டுள்ளது என்பதை டீசர் சுட்டிக்காட்டுகிறது. பின்புறத்தில், தார் ரோக்ஸ் C-வடிவ இன்டர்னல் லைட் எலமென்ட்களுடன் புதிய LED டெயில் லைட்களை பெறுகிறது.
மேலும் படிக்க: Mahindra Thar Roxx பெயர் தொடர்பான கார்தேக்கோவின் இன்ஸ்டாகிராம் கருத்துக்கணிப்பில் சுவாரஸ்யமான முடிவுகள் கிடைத்துள்ளன
பாதுகாப்பு மற்றும் வசதிகள்
தார் ரோக்ஸ் 3-டோர் தார் போன்ற கேபின் அமைப்பைக் கொண்டிருக்கும். ஆனால் அதிக பிரீமியம் உணர்விற்காக பீஜ் கலர் அப்ஹோல்ஸ்டரியுடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோக்ஸில், எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், புஷ்-பட்டன் ஸ்டார்ட் உடன் கீலெஸ் என்ட்ரி மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும்.
பயணிகளின் பாதுகாப்பிற்காக தார் ரோக்ஸ் காரில் 6 ஏர்பேக்குகள், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்றவற்றுடன் வருகிறது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
2.2-லிட்டர் டீசல் மற்றும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் உட்பட 3-டோர் மாடலில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் தார் ரோக்ஸை மஹிந்திரா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த இன்ஜின்கள் ரோக்ஸில் இன்னும் அதிக சக்திக்காக டியூன் செய்யப்படலாம். இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஃபோர்-வீல்-டிரைவ் (4WD) ஆப்ஷன்களுடன் வர வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் ரோக்ஸ் காரின் ஆரம்ப விலை சுமார் ரூ.15 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் உடன் நேரடியாக போட்டியிடும். மற்றும் மாருதி ஜிம்னிக்கு ஒரு பெரிய அளவு மாற்றாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: தார் ஆட்டோமேட்டிக்