உற்பத்திக்கு தயாராக உள்ள Mahindra Thar 5-டோர் படம் பிடிக்கப்பட்டுள்ளது
published on செப் 14, 2023 05:14 pm by rohit for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
சோதனை கார் முழுமையாக மூடப்பட்டிருந்தது, ஆனால் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட LED டெயில்லைட் அமைப்புடன் இருந்தது.
-
மஹிந்திரா 2024 -ல் தார் 5-டோர் காரை அறிமுகப்படுத்த உள்ளது.
-
புதிய ஸ்பை ஷாட்கள் டெயில்லைட் அமைப்பில் நேர்த்தியான லைட்டிங் இருப்பதை காட்டுகின்றன.
-
வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்களை பொறுத்தவரையில் புதிய கிரில் வடிவமைப்பு மற்றும் வட்ட புரொஜெக்டர் ஹெட்லைட்களை உள்ளடக்கியதாகும்.
-
கேபின் புதிய தீம் மற்றும் பெரிய டச் ஸ்க்ரீன் சிஸ்டமை பெறக் கூடும்.
-
டூயல்-ஜோன் ஏசி, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
3-டோர் தார் போன்ற அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களால் இயக்கப்படும்; ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் 4 வீல் டிரைவ் (4WD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் கிடைக்கலாம்
-
விலை ரூ. 15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சோதனையில் இருக்கும் மஹிந்திரா 5-டோர் காரின் சில படங்களை நமக்கு கிடைத்துள்ளன. சமீபத்தில் சாலையில் பார்க்கப்பட்ட மாடலில், நீண்ட சக்கரத்தளம் உடைய தார் கார் இன்னும் மூடப்பட்டிருப்பதைக் காட்டுகிறது, அதே நேரத்தில் உற்பத்திக்குத் தயாராக இருக்கும் விவரங்களை வெளிப்படுத்துகிறது.
குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மேம்படுத்தல்கள்
5-டோர் தார் அலாய் வீல்கள் மற்றும் LED டெயில்லைட்கள் போன்ற பல உற்பத்திக்கு தயாராக உள்ளவற்றை படங்கள் காட்டுகின்றன. பின்புறத்தில் உள்ள லைட்டிங் அமைப்பை பற்றி பேசுகையில், 3-டோர் மாடலுடன் ஒப்பிடும்போது, பிரேக் லைட் வடிவமைப்பு கூட மாற்றப்பட்டிருப்பதால், உள்ளே நேர்த்தியான LED எலமென்ட்களை பெறுவது போல் தெரிகிறது.
சமீபத்தில் சாலையில் தென்படா சோதனை வாகனமான தார் 5-டோர் பல புதிய வடிவமைப்பு விவரங்களை நமக்கு காட்டியுள்ளது, இதில் பீஃபியர் 6-ஸ்லாட் கிரில் மற்றும் வட்ட புரொஜெக்டர் முகப்பு விளக்குகள் ( LED விளக்குகளாக இருக்கலாம்) ஆகியவை அடங்கும். மற்றும் இதுவரை தெரிந்த அப்டேட்களில் ஃபிக்ஸ்டு மெட்டல் டாப் வசதியும் அடங்கும்.
உட்புற மாற்றங்கள்
மஹிந்திரா தார் அதன் சிறிய மறு வடிவமைப்பு மற்றும் பெரிய டச் ஸ்க்ரீன் அமைப்பை விட வித்தியாசமான கேபின் தீம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சன்ரூஃப் தவிர, 5-டோர் எஸ்யூவி டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்டீயரிங்-மவுண்டட் கண்ட்ரோல்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, 5-டோர் தார் ஆறு ஏர்பேக்குகள், ஒரு டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ESC) மற்றும் ஒரு ரிவர்ஸிங் கேமரா ஆகியவற்றை பெறலாம்.
மேலும் பார்க்க: மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் மீண்டும் சோதனையில் சிக்கியது, ஒரு பெரிய டச் ஸ்க்ரீன் இருக்கும் என்பது தெரியவருகிறது
ஹூட்டின் கீழ் என்ன இருக்கும்?
மஹிந்திரா 5-டோர் தாரை அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களை அதன் சிறிய வீல்பேஸ் பதிப்பாக வழங்கும், இருப்பினும் அது அதிகமாக டியூன் செய்யப்பட்டு இருக்கும். தார் 5-டோர் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களும் 6-ஸ்பீடு மேலுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வரும் என்று நாங்கள் நம்புகிறோம். 3-டோர் மாடலுடன் பார்க்கப்படுவது போல, நீண்ட வீல்பேஸ் எஸ்யூவி ஆனது பின்புற சக்கரம் மற்றும் 4-சக்கர டிரைவ்டிரெய்ன் (4WD) ஆப்ஷன்களையும் பெற வாய்ப்புள்ளது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா 5-டோர் தார் விலையை ரூ.15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கிறோம். இது காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கு மாற்றாக இருப்பதுடன், மாருதி ஜிம்னி மற்றும் வரவிருக்கும் ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் காரை விட பெரிதான மற்றும் பீரிமியமான ஆப்ஷனாக இருக்கும்.
தொடர்புடையது: காணவும்: பிரதாப் போஸ் வடிவமைப்பு தலைவர் மஹிந்திரா தார் EV கான்செப்ட் விளக்குகிறார்
மேலும் படிக்க: தார் ஆட்டோமேடிக்