2024 அப்டேட்டின் ஒரு பகுதியாக Mahindra Scorpio N Z6 காரில் சில அம்சங்கள் இனிமேல் கிடைக்காது
published on ஜனவரி 29, 2024 01:17 pm by sonny for mahindra scorpio n
- 130 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்கார்பியோ N காரின் மிட்-ஸ்பெக் வேரியன்ட் இப்போது ஒரு சிறிய டச் ஸ்கிரீனை பெறுகிறது . ஆனால் AdrenoX கனெக்டட் கார் டெக்னாலஜி வசதி இனிமேல் கிடைக்காது
-
மஹிந்திரா ஸ்கார்பியோ N உள்ள வசதிகள் 2024 ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
-
மிட்-ஸ்பெக் Z6 வேரியன்டில் பெரும்பாலான மாற்றங்கள் உள்ளன, டீசல் இன்ஜினுடன் மட்டுமே இது கிடைக்கும்.
-
சிறிய 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் இப்போது குறைவான டெக்னாலஜியுடன் கிடைக்கும்.
-
கூல்டு க்ளோவ் பெட்டி மற்றும் 7-இன்ச் TFT மல்டி-இன்ஃபார்மேஷன் டிஸ்பிளே ஆகியவை இனிமேல் கிடைக்காது.
-
2024 தொடக்கத்திலேயே காரின் விலை உயர்த்தப்பட்டது. குறிப்பாக Z6 ரூ.31,000 வரை விலை உயர்ந்துள்ளது.
2024 ஆண்டில் விலை உயர்ந்துள்ள மஹிந்திராவின் முக்கிய மாடல்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ N. இருப்பினும், IMCR (இன்டெகிரேட்டட் மெட்டீரியல் காஸ்ட் ரிடக்ஷன்) மாற்றங்களின் ஒரு பகுதியாக, ஸ்கார்பியோ N -ன் லோவர் வேரியன்ட்களில் சில வசதிகள் தவிர்க்கப்பட்டுள்ளன, குறிப்பாக மிட்-ஸ்பெக் Z6 வேரியன்ட். 2024 தொடக்கத்தில் இருந்து எஸ்யூவி -க்கான அனைத்து ஆர்டர்களுக்கும் இவை பொருந்தும்.
ஸ்கார்பியோ N Z6 -ல் என்ன மாற்றப்பட்டுள்ளது?
2024 அப்டேட்டுக்கு முன், Z6 வேரியன்ட் மஹிந்திராவின் AdrenoX இன்டர்ஃபேஸ் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைக் கொண்ட 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டிற்கான என்ட்ரி-லெவல் ஆக இருந்தது. இதில் கனெக்ட்டட் கார் ஃபியூச்சர்ஸ் மற்றும் வாய்ஸ்-எனேபில்டு ரெக்வெஸ்ட்களுக்கான அலெக்ஸா ஆகியவை அடங்கும். மிட்-ஸ்பெக் ஸ்கார்பியோ N ஆனது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் 7-இன்ச் TFT மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளேவுடன் வந்தது.
இப்போது, Z6 வேரியன்ட்களின் விலை ரூ. 31,000 வரை உயரந்துள்ளது. மேலும் மேலே கூறப்பட்ட அம்சங்கள் இனிமேல் இவை கிடைக்காது. அதற்கு பதிலாக, இது இப்போது 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டுடன் வருகிறது, இது வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை மட்டுமே சப்போர்ட் செய்கிறது மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி இல்லை. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இப்போது 4.2-இன்ச் மோனோக்ரோம் டிஸ்ப்ளே பெறுகிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ N கூல்டு க்ளோவ் பாக்ஸை ஸ்டாண்டர்டாக வழங்கியது, ஆனால் இப்போது அதை டாப்-ஸ்பெக் Z8 மற்றும் Z8L வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.
ஸ்கார்பியோ N பவர்டிரெய்ன்ஸ்
மஹிந்திரா ஸ்கார்பியோ N 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (203 PS/ 380 Nm) மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் (132 PS/ 300 Nm முதல் 175 PS/ 400 Nm) ஆப்ஷன்களை பெறுகிறது. இரண்டுமே 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களின் தேர்வில் வழங்கப்படுகின்றன. சில வேரியன்ட்களில் அதிக சக்திவாய்ந்த டீசல் இன்ஜினுடன் 4WD பவர்டிரெய்ன் ஆப்ஷனும் உள்ளது.
ஸ்கார்பியோ N Z6 டீசல்-மட்டும் வேரியன்ட் ஆகும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ N காரின் விலை தற்போது ரூ.13.26 லட்சம் முதல் ரூ.24.54 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) உள்ளது. இது மஹிந்திரா XUV700, டாடா ஹாரியர்/ சஃபாரி, மற்றும் எம்ஜி ஹெக்டர்/ ஹெக்டர் பிளஸ் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.
தொடர்புடையது: மஹிந்திரா ஸ்கார்பியோ N vs மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்
மேலும் படிக்க: மஹிந்திரா ஸ்கார்பியோ N ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful