Mahindra Scorpio N பிளாக் எடிஷன் அறிமுகத்துக்கு முன்னதாகவே டீலர்ஷிப்களுக்கு வந்தடைந்துள்ளது
பிளாக் எடிஷனில் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன. அதே நேரத்தில் ஆல் பிளாக் கேபின் தீம் மற்றும் பிளாக் லெதரெட் சீட்களும் உள்ளன.
சமீபத்தில் ஸ்கார்பியோ என் காரின் பிளாக் எடிஷனின் டீஸரை மஹிந்திரா வெளியிட்டிருந்தது. இப்போது அறிமுகத்துக்கு முன்னரே சில டீலர்ஷிப்களை அடைந்துள்ளது. ஆகவே இது பிளாக் எடிஷன் விரைவில் வெளியிடப்படும் என்பதை காட்டுகிறது. இந்த பதிப்பு ஹையர்-எண்ட் வேரியன்ட்களுக்கு மட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் கொடுக்கப்படலாம்.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிளாக் எடிஷனின் சில பிரத்யேக படங்கள் எங்களுக்கு டீலர்ஷிப் மூலம் கிடைத்துள்ளன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இங்கே உள்ளன:
என்ன பார்க்க முடிகிறது ?
காட்சிப்படுத்தப்பட்ட பிளாக் எடிஷன் மாடல் வழக்கமான மாடலை போலவே ஒரே மாதிரியான வெளிப்புற வடிவமைப்பை கொண்டுள்ளதை படங்கள் மூலமாக பார்க்க முடிகிறது. ஹெட்லைட்கள், டெயில் லைட்டுகள், LED DRL -கள் மற்றும் LED ஃபாக் லைட்ஸ் ஆகியவை இரண்டு எஸ்யூவி பதிப்புகளிலும் ஒரே மாதிரியாக உள்ளன.
இருப்பினும் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்ஸ், வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVM -கள்) மற்றும் விண்டோ கிளாடிங் ஆகியவை கறுப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வழக்கமான ஸ்கார்பியோ N-ல் சில்வர் ஃபினிஷ் கொண்ட முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் டோர் கிளாடிங்குக்கு இப்போது டார்க் கிரே ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்ஜிங், கிரில் மற்றும் வெளிப்புற டோர் ஹேண்டில்களில் உள்ள குரோம் ஸ்லேட்டுகள் அடர் குரோம் ஃபினிஷிங்கை கொண்டுள்ளன.
வெளிப்புறத்தில் மாற்றங்கள் நுட்பமானதாக இருந்தாலும், வழக்கமான மாடலை போலவே வடிவமைப்பு இருந்தாலும், ஆல் பிளாக் கருப்பு தீம் கொடுக்கப்பட்டுள்ளதால் உட்புறம் முற்றிலும் புதுமையாக தெரிகிறது. ஸ்டாண்டர்ட் மஹிந்திரா ஸ்கார்பியோ N கார் ஆனது பிளாக்/பிரெளவுன் கலர் கேபின் தீம் உடன் வருகிறது.
இப்போது பிளாக் எடிஷனில் கறுப்பு நிற லெதரெட் இருக்கைகள் மற்றும் ஏசி வென்ட்கள் மற்றும் டச் ஸ்கிரீன் ஆனது பேனலை சுற்றி பிரஷ்டு அலுமினிய டிரிம் உடன் வருகிறது.
8-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட அனலாக் டயல்கள், ஆட்டோ ஏசி மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளையும் இந்த மாடலில் பார்க்க முடிகிறது. வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ரியர்வியூ மிரர் (IRVM) மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளை இது தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:Tata Harrier மற்றும் Tata Safari ஸ்டீல்த் எடிஷன் விலை ரூ. 25.09 லட்சமாக நிர்ணயம்
மற்ற வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்
மேற்கூறிய வசதிகளுடன் கூடுதலாக, 12-ஸ்பீக்கர் சோனி சவுண்ட் சிஸ்டம், 6-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை, ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் வைப்பர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு தொகுப்பில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் கேமரா, ஹில் ஹோல்ட் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் டிரைவர் டிரெளவுஸினெஸ் டிடெக்ஷன் போன்ற வசதிகளை உள்ளடக்கியது. இது ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ N உடன் ADAS வசதிகள் எதுவும் கிடைக்காது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ N பிளாக் பதிப்பு வழக்கமான மாடலில் உள்ள அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
2.2 லிட்டர் டீசல் இன்ஜின் |
பவர் |
203 PS |
175 PS |
டார்க் |
370 Nm (MT) / 380 Nm (AT) |
370 Nm (MT) / 400 Nm (AT) |
டிரான்ஸ்மிஷன்* |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன்^ |
RWD |
RWD / 4WD |
*AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்; எம்டி = மேனுவல் டிரான்ஸ்மிஷன்
^RWD = ரியர் வீல் டிரைவ்; 4WD = ஃபோர் வீல் டிரைவ்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஸ்கார்பியோ N பிளாக் எடிஷன் ஆனது வழக்கமான மாடலின் விலையை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது ரூ.13.99 லட்சம் முதல் ரூ.24.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை விற்பனை செய்யப்படுகிறது. இது டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார் போன்ற போன்ற நடுத்தர அளவிலான எஸ்யூவி -களுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.