• English
    • Login / Register

    மேட்-இன்-இந்தியா Maruti Suzuki Jimny நோமாட் பதிப்பு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    மாருதி ஜிம்னி க்காக ஜனவரி 30, 2025 06:34 pm அன்று dipan ஆல் திருத்தம் செய்யப்பட்டது

    • 63 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஜப்பான்-ஸ்பெக் 5-டோர் ஜிம்னி வித்தியாசமான இருக்கை அமைப்போடு வருகிறது. இந்தியா-ஸ்பெக் மாடலுடன் வழங்கப்படாத ஹீட்டட் முன் இருக்கைகள் மற்றும் ADAS போன்ற சில புதிய வசதிகளுடன் வருகிறது.

    • ஜப்பான்-ஸ்பெக் 5-டோர் ஜிம்னியின் விலை 2,651,000 யென் மற்றும் 2,750,000 யென் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 14.86 லட்சத்தில் இருந்து ரூ. 15.41 லட்சம் ஆக இருக்கும். தோராயமாக ஜப்பானிய யெனில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

    • புதிய எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களான சிஃப்பான் ஐவரி மெட்டாலிக் மற்றும் ஜங்கிள் கிரீன் ஆப்ஷன்களும் அடங்கும்.

    • இது டூயல்-டோன் ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி, புதிய டச்ஸ்கிரீன், ஹீட்டட் ORVM -கள் மற்றும் ADAS உடன் வருகிறது.

    • இந்தியா-ஸ்பெக் மாடலை போலவே மீதமுள்ள வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பானது மட்டுமல்ல வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொகுப்பு ஆகியவையும் உள்ளன.

    • இது அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது. ஆனால் இந்தியா-ஸ்பெக் ஜிம்னியை விட 3 PS மற்றும் 4 Nm குறைவான அவுட்புட்டை கொடுக்கிறது.

    • இந்தியாவில் 5-டோர் ஜிம்னியின் விலை ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.

    5-டோர் சுஸூகி ஜிம்னி ஜப்பானில் அறிமுகப்படுத்தப்படும் என்று நீண்ட நாள்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. தற்போது மேட்-இன்-இந்தியா 5-டோர் மாருதி ஜிம்னி ஜப்பானில் சுஸூகி ஜிம்னி நோமாட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது ஒரு சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களுடன் ஒரே மாதிரியான வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்புடன் வருகிறது. இந்தியா-ஸ்பெக் மாருதி ஜிம்னியுடனான அதன் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை விரிவாகப் பார்ப்போம்:

    விலை விவரங்கள்

    ஜிம்னி நோமாட் அறிமுகத்துடன், SUV 5-டோர் மற்றும் 3-டோர் கட்டமைப்புகளுடன் வழங்கப்படுகிறது. இந்தியா-ஸ்பெக் மாருதி ஜிம்னியுடன் ஒப்பிடுகையில் ஜிம்னி நோமாடின் விலை விவரங்கள் இங்கே: 

    வேரியன்ட்

    ஜிம்னி நோமாட் (5 இருக்கைகள்)

    இந்தியா-ஸ்பெக் மாருதி ஜிம்னி

    வேறுபாடு

    ஜப்பானிய யெனில் விலை

    2,651,000 யென் முதல் 2,750,000 யென் வரை

    இந்திய ரூபாய்க்கு தோராயமான மாற்றம்

    ரூ.14.86 லட்சம் முதல் ரூ.15.41 லட்சம்

    ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம்

    + 2.12 லட்சம் வரை

    அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

    இந்தியா-ஸ்பெக் மாடலின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டை விட ஜப்பானிய-ஸ்பெக் ஜிம்னி நோமாட் ரூ.2.12 லட்சம் விலை அதிகம் என்று அட்டவணை மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. மறுபுறம் இந்தியா-ஸ்பெக் மற்றும் ஜப்பான்-ஸ்பெக் 5-டோர் ஜிம்னி ஆகிய இரண்டின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கு இடையேயான விலை வித்தியாசம் வெறும் ரூ.46,000 ஆக மட்டுமே உள்ளது.

    என்ன வித்தியாசங்கள் உள்ளன ?

    Japan-spec Jimny Nomade gets ADAS

    ஜப்பான்-ஸ்பெக் ஜிம்னி நோமேடில் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ட்ராஃபிக் சைன் ரெகக்னிஷன் மற்றும் கொலிஷன் மிட்டிகேஷன் அசிஸ்ட் போன்ற வசதிளுடன் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களுடன் (ADAS) வருகிறது.

    Japan-spec Jimny Nomade gets dual-tone fabric seat upholstery

    இந்தியா-ஸ்பெக் மாடலில் கிடைக்கும் ஆல் பிளாக் சீட்களுடன் ஒப்பிடுகையில், ஜிம்னி நோமாட் கிரே கலர் மற்றும் பிளாக் ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகிறது. ஜப்பானிய ஜிம்னி -யில் ஹீட்டட் முன் இருக்கைகளும் உள்ளன.

    Japan-spec Jimny Nomade ORVM

    இந்தியா-ஸ்பெக் மாடலின் 9-இன்ச் யூனிட்டுடன் ஒப்பிடுகையில் இதிலுள்ள டச் ஸ்கிரீன் வித்தியாசமாக உள்ளது. வெளியே உள்ள ரியர்வியூ மிரர்ஸ் (ORVMs) ஹீட்டட் வசதியை கொண்டுள்ளன. அதன் அடிப்பகுதியில் உள்ள இரண்டு சிறிய கண்ணாடிகள் பிளைன்ட் ஸ்பாட்களையும் குறைக்கவும், குறுகலான இடங்களிலும் உதவுகின்றன.

    Japan-spec Jimny Nomade Chiffon Ivory Metallic colour option
    Japan-spec Jimny Nomade Jungle Green colour option

    வெளிப்புற வடிவமைப்பில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஜப்பான்-ஸ்பெக் ஜிம்னி -யில் சிஃப்பான் ஐவரி மெட்டாலிக் (பிளாக் ரூஃப் உடன்) மற்றும் ஜங்கிள் கிரீன் ஆப்ஷன் ஆகியவை இரண்டு புதிய வண்ண ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜப்பான்-ஸ்பெக் 5-டோர் ஜிம்னியில் இந்தியா-ஸ்பெக் மாடலின் சிக்னேச்சர் கைனெடிக் யெல்லோ ஷேடை சுஸூகி வழங்கவில்லை.

    மேலும் படிக்க: மாருதி ஜிம்னி கான்குவரர் கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த 4 பட கேலரியில் விரிவாக பார்க்கலாம்

    ஒற்றுமை என்ன?

    Japan-spec Jimny Nomade

    ஜிம்னி நோமாட்டின் வெளிப்புற வடிவமைப்பு இந்தியா-ஸ்பெக் மாடலை போலவே உள்ளது. எனவே, இது LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், ஹெட்லைட் வாஷர்கள், புல் டைப் டோர் ஹேண்டில்கள், பிளாக் பம்பர்கள் மற்றும் LED டெயில் லைட்டுகள் உள்ளன.

    Japan-spec Jimny Nomade gets a different touchscreen

    புதிய டச் ஸ்கிரீன் மற்றும் புதிய ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை தவிர உட்புறமும், இந்தியா-ஸ்பெக் மாடலை போலவே உள்ளது. இது ஆல்-பிளாக் கேபின், மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (எம்ஐடி) கொண்ட டூயல்-பாட் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்பில்ட் டிஸ்ப்ளே கொண்ட ரோட்டரி ஏசி கண்ட்ரோல் நாப்கள் மற்றும் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் வருகிறது.

    ஹீட்டட் ORVMகள் மற்றும் முன் இருக்கைகள் மற்றும் ADAS ஆகியவற்றுடன், ஜிம்னி நோமாட் நான்கு ஸ்பீக்கர்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவற்றைப் பெறுகிறது. இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ஹில்-ஹோல்ட் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமராவுடன் இந்தியா-ஸ்பெக் மாடலை போலவே உள்ளது.

    பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    மாருதி சுஸூகி ஜிம்னி நோமாட் இந்தியா-ஸ்பெக் மாடலில் கிடைக்கும் அதே 1.5-லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இருப்பினும் ஜப்பான்-ஸ்பெக் மாடலில் பயன்படுத்தப்படும் இன்ஜினின் செயல்திறன் அவுட்புட்டை குறைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் இங்கே:

    விவரங்கள்

    ஜப்பான்-ஸ்பெக் ஜிம்னி நோமாட்

    இந்தியா-ஸ்பெக் மாருதி ஜிம்னி

    இன்ஜின்

    1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

    பவர்

    102 PS

    105 PS

    டார்க்

    130 Nm

    134 Nm

    டிரான்ஸ்மிஷன்

    5-ஸ்பீடு MT / 4-ஸ்பீடு AT*

    டிரைவ்டிரெய்ன்

    4-வீல் டிரைவ் (4WD)

    *AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

    அட்டவணை குறிப்பிடுவது போல ஜிம்னி நோமாட் இந்தியா-ஸ்பெக் மாடலை விட 3 PS மற்றும் 4 Nm குறைவான அவுட்புட்டை கொடுக்கிறது. இது செயல்திறன் என்று வரும் போது நிஜ வாழ்க்கையில் மிகப்பெரிய வேறுபாட்டை காட்டாது. ஜிம்னியின் இரண்டு பதிப்புகளும் 4WD ஆப்ஷன் உடன் வருகின்றன.

    இந்தியாவில் மாருதி ஜிம்னி போட்டியாளர்கள்

    மாருதி ஜிம்னி மஹிந்திரா தார் ராக்ஸ் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் போன்ற ஆஃப்-ரோடு எஸ்யூவி -களுடன் போட்டியிடுகிறது.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Maruti ஜிம்னி

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience