லிமிடெட் எடிஷன் ஃபியட் புண்ட்டோ EVO ஆக்டிவ் ஸ்போர்டிவோ அடுத்த மாதத்தில் வெளிவருமா?
ஃபியட் கிராண்டி புண்டோ க்காக அக்டோபர் 29, 2015 01:44 pm அன்று அபிஜித் ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
அபார்த் புண்ட்டோ EVO ஆக்டிவ் மாடலை மேம்படுத்தி, குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில், லிமிடெட் எடிஷனாக, ஸ்போர்டிவோ என்ற பெயரில் வெளியிட ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாக ஃபியட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாடலில், ஃபியட் புண்ட்டோவின் அடிப்படை அம்சங்களை அப்படியே வைத்து கொண்டு, ஒரு சில தோற்ற அலங்காரங்களை மட்டுமே மாற்றி அமைக்கவுள்ளது. பண்டிகை காலத்தில் கார் வாங்குபவர்களை கவர்வதற்காக இன்னும் பத்தே நாட்களில் இந்த காரை ஃபியட் நிறுவனம் அதிரடியாக அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது, அதிகாரபூர்வமாகமின்றி வெளியாகி உள்ள இதன் படத்தில், வெளிப்புறம் போஸ்ட் சிகப்பு வண்ணம்; வெள்ளை நிறத்தில் சற்றே உயரமாக்கப்பட்ட மேற்கூரை; 15 அங்குல சில்வர் அலாய் சக்கரங்கள்; முன், பின், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர்கள்; குரோமியத்தால் மெருகூட்டப்பட்ட வெளிப்புற ரியர் வியூ கண்ணாடி ஆகிய சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்டு பளீரென்று உள்ளது. இதன் உட்புறத்தில் உள்ள, புளு டூத் வசதி மற்றும் நேவிகேஷன் அமைப்பு இணைக்கப்பட்ட 6.5 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் வசதியை, இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி மகிழலாம். மேலும் புதிய சீட் கவர்கள், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஏறும் இடங்களிலும் (டோர் சில்) மற்றும் ஃபுளோர் மேட்டிலும் பொறிக்கப்பட்ட ஃபியட் சின்னம் ஆகிய பல மாற்றங்களுடன், இதன் உட்புறம் அமைந்துள்ளது. விலையில் எந்த ஒரு மாற்றத்தையும் தற்போது அறிவிக்கவில்லை என்றாலும், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நல்ல ஆதாயமான விலையிலேயே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபார்த் புண்ட்டோ அறிமுகம் :
ஃபியட் அபார்த் புண்ட்டோ: சிறப்பம்சங்கள் மற்றும் புகைபடங்கள்
ரூ.9.95 லட்சம் முதல் என்ற ஆச்சர்யமூட்டும் அறிமுக விலையில் அபார்த் புண்ட்டோ வெளிவந்தது முதல், நாட்டில் உள்ள எட்டுத் திக்குகளிலும் ஃபியட் பற்றிய பேச்சாக இருக்கிறது. இந்த குறைந்த விலையில், 145 bhp சக்தியை முன்புற சக்கரங்களுக்கு பகிர்ந்தளிக்க 5 ஸ்பீட் மனுயல் வசதியை ஃபியட் வழங்கியுள்ளது என்பது, மற்றும் ஒரு ஆனந்தமான செய்தி. ஓட்ட ஆரம்பித்த 8.8 வினாடிகளில் 100 kmph வேகத்தை அடையும் ஆற்றலை ஸ்போர்டிவோ பெற்றுள்ளது. இதன் தோற்றத்தை அழகாக அலங்கரிக்க முன்புற கிரில், முன்புற பம்பர் மற்றும் பின்புற பம்பர், ஆகியவற்றில் சிவப்பு வண்ணம் பளீரென்று தீட்டப்பட்டுள்ளது. பான்னெட், ரூஃப் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் முழுவதும் சிவப்பு நிற ரேஸ் பட்டைகள் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அபார்த் சின்னத்தை சுற்றி அழகிய வேலைபாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க :
ஒப்பீடு: ஃபியட் அபார்த் புண்ட்டோ EVO vs. இதனுடன் போட்டியிடவுள்ள ஹாட் ஹாட்ச் கார்கள்
சோர்ஸ்: ஃபியட் மோட்டோ கிளப் பேஸ்புக்
மேலும் வாசிக்க : புண்டோ EVO 2015