ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாகவே பியட் தனது மூன்று - கதவு கொண்ட புண்டோவின் டீஸரை வெளியிட்டுள்ளது.
nabeel ஆல் ஜனவரி 29, 2016 11:52 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
பியட் சொல்கிறது , “ நீங்கள் எந்த பியட் - ஐ பார்க்க ஆசை படுகிறீர்கள்?” எங்களிடம் அதற்கு பதில் உள்ளது . உங்களிடம் ?
“ ஆட்டோ எக்ஸ்போ 2016 ல், எங்கள் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள புத்தம் புதிய தயாரிப்புக்களை கண்டு களியுங்கள் " இவ்வாறு தான் பியட் இந்தியாவின் முகநூல் போஸ்ட் நமக்கு செய்தி சொல்லி இதயத்தில் பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் பதிவு செய்து உள்ளதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் விடை தேடி குழம்ப வேண்டிய தேவையே இல்லை.படத்தில் நீங்கள் பார்க்கும் பியட் நிறுவனத்தின் பிரபலமான புன்டோ கார்களின் மூன்று கதவுகளைக் கொண்ட மாடலைப் பற்றி தான் இந்நிறுவனம் இவ்வாறு சூசகமாக சொல்லுகிறது . இந்த புதிய புன்டோ முந்தைய ஐந்து கதவு ஹேட்ச்பேக் போன்ற வடிவமைப்பையே கொண்டிருந்தாலும் முந்தைய மாடலைக் காட்டிலும் நல்ல ஸ்போர்டியான தோற்றத்தை இந்த புதிய மூன்று கதவு புன்டோ கொண்டுள்ளது. இந்த காரின் ஸ்போர்ட்டியான தோற்றத்தை மேலும் எடுப்பாக்கி காட்டும் விதத்தில் , மல்டிஸ்போக் அல்லாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 14 ஸ்போக் அல்லாய்கள் அசத்தலாக காட்சியளிக்கிறது. மேலும் , காரின் பூட் பகுதி அமைப்பும் சற்று மாற்றப்பட்டுள்ளது. புன்டோ என்ற பெயர், நடுவில் பியட் சின்னத்திற்கு சற்று கீழே பொறிக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற மூன்று கதவுகள் கொண்ட போலோ GTI கார்களை இந்தியாவில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் , பியட் நிறுவனம் புன்டோ பற்றிய இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற கட்டமைப்புடன் 2003 ஆண்டு பிரபல ஜென் ஹேட்ச்பேக் கார்களின் வெர்ஷன்களாக ஜென் ஸ்டீல் மற்றும் ஜென் கார்பன் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நடைமுறை பயன்பாட்டில் இருந்த சிக்கல்களின் காரணமாக எதிர்பார்த்த வெற்றியை இந்த கார்கள் பெறவில்லை.
இந்த மூன்று கதவு கொண்ட புன்டோ கார்கள் நாம் முன்பு சொன்னது போல நல்ல ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொண்டுள்ளது. ஏற்கனவே 5 கதவு கொண்ட புன்டோ ஹேட்ச்பேக் கார்களில் புழக்கத்தில் உள்ள என்ஜின் தான் இந்த புதிய கார்களிலும் பொருத்தப்படும் என்று தெரிகிறது. மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் இந்த கார் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 75bhp அளவு சக்தி மற்றும் 197Nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் ஆப்ஷன் ஒன்றும், முறையே 68bhp அளவு சக்தி , 96Nm அளவு டார்க் மற்றும் 90bhp அளவு சக்தி , 115Nm அளவு டார்க் முதலியவற்றை வெளியிடும் 1.2- லிட்டர் மற்றும் 1.4-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடனும் இந்த புதிய புன்டோ களம் இறக்கப்படும் என்று தெரிய வருகிறது. அதே சமயம் இந்த மூன்று கதவு புன்டோ மாடல்களில் அபர்த் மூலம் சக்தியூட்டப்படும் வெர்ஷன் ஒன்றும் வெளியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவ்வாறு நடந்தால் 145bhp அளவு சக்தியை வெளியிடும் 1.4 லிட்டர் T - ஜெட் என்ஜினுடன் கூடிய வெர்ஷன் ஒன்றும் நமக்கு கிடைக்கும்.
மேலும் வாசிக்க