போட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI
published on பிப்ரவரி 08, 2016 10:13 am by sumit for மாருதி பாலினோ 2015-2022
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது பலேனோ RS காரை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பலேனோ கார்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் கூடுதல் செயல்திறனை (பெர்பார்மன்ஸ்) விரும்பும் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் விதத்தில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த பலேனோ RS கார்கள் நிச்சயம் கூடுதல் சக்தியை உற்பத்தி செய்யும் என்று தெரிகிறது.
சிலர் இந்த காரை அழைப்பதைப் போல , கூடுதல் சக்தி கொண்ட இந்த பலேனோ கார்கள் வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI மற்றும் அபர்த் புன்டோ ஈவோ கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் நீங்கள் கார் வாங்க முடிவு செய்துள்ளீர்கள் என்றால், இந்த மூன்று கார்களில் சிறந்ததை நீங்களே எளிதில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதியாக , குறிப்பிட்ட முக்கியமான அம்சங்களை ஒப்பிட்டு ஒரு தெளிவான ஒப்பீட்டை உங்களுக்கென வழங்குகிறோம். படித்து பயன் பெறுங்கள்
இந்த பலேனோ RS கார்கள் இன்னும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வராத நிலையில் , அறிமுகமாகும் போது இந்த பிரிவில் உள்ள மற்ற தயாரிப்பளர்களின் கார்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கப்போவது உறுதி என்றே தோன்றுகிறது. மாருதி சுசுகி வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனத்தின் மீது உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையே இந்த பலேனோ RS கார்களை சந்தைப் படுத்துவதிலும் மூலதனமாக மாருதி நிறுவனம் பயன்படுத்தும் என்று உறுதியாக சொல்லலாம்.
0 out of 0 found this helpful