இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் பியட் டிபோ காட்சிக்கு வைக்கப்படுகிறது.
published on ஜனவரி 18, 2016 01:02 pm by konark
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
லீனியாவிற்கு மாற்றாக பியட் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள டிபோ ( சில சந்தைகளில் ஏஜியா என்று அழைக்கப்படுகிறது) கடந்த வருட இஸ்தான்புல் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அடுத்த மாதம் நடக்க உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த இத்தாலி நாட்டு கார் தயாரிப்பாளர்கள் இந்த டிபோ கார்களை காட்சிக்கு வைக்க உள்ளனர். 1988 ஆம் ஆண்டு பியட் நிறுவனம், "டிபோ" என்ற பெயரில் சிறிய ஹேட்ச்பேக் கார்களை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார்கள் அமோக வெற்றி பெற்று 1989 ஆம் வருடம் " யூரோபியன் கார் ஆப் தி இயர் " விருதினை வென்றது. அந்த வெற்றி மாடலின் நினைவாக தான் பியட் இந்த புதிய அறிமுகமாக உள்ள கார்களுக்கு டிபோ என்று பெயரிட்டுள்ளது.
இந்த புதிய டிபோ கார்கள் இரண்டு பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு டீசல் மோட்டார் ஆப்ஷன்களுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இவை 90PS-120PS அளவு சக்தியை வெளியிடும் ஆற்றல் பெற்றிருக்கும் என்றும் யூகிக்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் மாடல்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரேன்ஸ்மிஷன் வசதி கொண்டவையாகவும் , டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் (கியர் அமைப்பு )வசதியுடன் மட்டும் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காரின் அளவுகளைப் பொறுத்தவரை , 4.5 மீட்டர் நீளமும் , 1.78 மீட்டர் அகலமும் , 1.48 மீட்டர் உயரமும் , 510 -லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டவையாக இருக்கும் என்று தெரிய வருகிறது. இந்த புதிய டிபோ லீனியாவை விட சற்று பெரியதாக இருந்தாலும் , லீனாவை விட குறைவான எடையையே கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு அம்சங்களான ABS மற்றும் ஏயர்பேக்ஸ் ( காற்றுப்பைகள்) இந்த டிபோவில் பொருத்தப்பட்டுள்ளது.இவைகளைத் தவிர, ஆடோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் , பியட் நிறுவனத்தின் தனித்துவமான யுகனெக்ட் டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் அமைப்பு மற்றும் டாம் - டாம் மேப்ஸ் போன்ற சிறப்பம்சங்களும் இந்த புதிய டிபோ கார்களில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த டிபோ கார்கள், நமது இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி , வோல்க்ஸ்வேகன் வெண்டோ மற்றும் மாருதி சியஸ் கார்களுடன் போட்டியிடும் என்று தெரிகிறது. மேலும் இந்த டிபோ கார்கள் எதிர்காலத்தில் பியட் நிறுவனத்தின் பிரத்தியேகமான அபர்த் மூலம் சக்தியூட்டபட்டு புது வடிவம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful