ஆட்டோ எக்ஸ்போ 2016: அவென்ச்சுரா அர்பன் கிராஸை, ஃபியட் வெளியிடுகிறது
published on பிப்ரவரி 04, 2016 07:26 pm by saad
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் புதிய அவென்ச்சுரா அர்பன் கிராஸை வெளியிட்டுள்ள இத்தாலி நாட்டு வாகனத் தயாரிப்பாளரான ஃபியட் நிறுவனம், இந்த கண்காட்சியில் தனது அறிமுக தேரோட்டத்தை தொடர்கிறது. ஒரு ஹேட்ச்பேக் மற்றும் ஒரு கிராஸ்ஓவர் ஆகியவற்றின் சிறப்பான கலவையாக இருப்பதால், இது முற்றிலும் அற்புதமான தோற்றத்தை கொண்டுள்ளது. ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸின் சக்திவாய்ந்த இயல்பை மேலும் அதிகரிக்கும் வகையில் DRL மற்றும் LED-கள் சேர்க்கப்பட்டு, அவ்வாகனத்தின் முன்பக்க அழகியலில் ஒரு மகிழ்விக்கும் தோற்றத்தை பெறுகிறது. இந்த காரை சுற்றிலும் உள்ள சில்வர் வரிகள் மூலம் வாகனத்தின் நேர்த்தி அதிகரிக்கிறது. மேலும் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றின் சேர்ப்பு, மற்ற வியக்க வைக்கும் மாற்றங்களாக இருந்து, இந்த வாகனத்தின் வெளிப்புறத்தில் இருந்து ஒரு அற்புதமான தீம்மை அளிக்கிறது.
மாற்றத்திற்குட்பட்ட உள்புற தீம்களுடன் கூடுதல் நிறத் தேர்வான க்ரே நிறத்தின் சேர்ப்பு, காரின் உட்புறத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது. என்ஜினில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் அழகியல் தொடர்பான காரியங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மட்டுமே வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரிகிறது என்பதால், இந்த ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் நிச்சயம் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதில் ஒரு பெட்ரோல் மற்றும் டீசல் மில் உட்பட இரு என்ஜின் வகைகள் காணப்படுகிறது. 1.4-லிட்டர் பெட்ரோல் ட்ரிம் என்பது ஒரு 1368cc என்ஜின் என்பதால் 88.8bhp ஆற்றலை அளிக்கிறது. அதே நேரத்தில் 1.3 லிட்டர் 16V மல்டிஜெட் என்ஜின் என்ற இடப்பெயர்ச்சியுடன் கூடிய 1248cc மூலம் 91.72bhp ஆற்றல் பெறப்படுகிறது. முடுக்குவிசையை பொறுத்த வரை, ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸில் மல்டிஎன்ஜின் மூலம் 209Nm-மும், ஃபையர் பெட்ரோல் மோட்டார் மூலம் 115Nm-மும் கிடைக்கிறது.
ஏற்கனவே சந்தையில் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த காருக்கான போட்டி மிக கடினமாக உள்ளது. இந்திய அறிமுகத்தை பொறுத்த வரை, இந்தாண்டின் (2016) 3வது காலாண்டில் இந்த புதிய கிராஸ்ஓவர் வெளியிடப்பட உள்ளது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful