இந்தியாவில் நாளை முதல் புதிய Kia Syros காரின் விற்பனை தொடங்கவுள்ளது
கியா தனது இந்திய வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே விற்பனை செய்யப்படும் ஒரு பிரீமியம் சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இதன் மூலம் கியா நிறுவனம் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது.
-
ரூ.25,000 -க்கு முன்பதிவு தொடங்கியுள்ளது, டெலிவரி பிப்ரவரி மத்தியில் தொடங்கும்.
-
ஆல் LED லைட்ஸ், 17-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் ஆகியவை சிரோஸில் உள்ளன.
-
டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் மற்றும் பின் சீட்கள் போன்ற வசதிகள் உள்ளன.
-
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
-
சோனெட்டில் இருந்து 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது.
-
விலை ரூ.9.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா சிரோஸ் 2024 டிசம்பரில் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தியாவில் இதன் விற்பனை நாளை முதல் தொடங்கவுள்ளது. இது கியாவின் புதிய எஸ்யூவி ஆகும். இது கியாவின் இந்திய போர்ட்ஃபோலியோவில் சோனெட் மற்றும் செல்டோஸுக்கு இடையில் இருக்கும். கியா சிரோஸ் HTK, HTK (O), HTK Plus, HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என ஆறு வேரியன்ட்களில் கிடைக்கும். முன்பதிவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. டெலிவரி பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து தொடங்கும். சிரோஸ் பற்றிய விரைவான பார்வை இங்கே:
கியா சிரோஸ் வெளிப்புறம்
சிரோஸ்க்கு ஒரு வழக்கமான பாக்ஸி வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரு ஒரு எஸ்யூவி -க்கு இணையாக இதை வைத்து பார்க்கலாம். கியா EV9 காரில் இருந்து வடிவமைப்புக்காக நிறைய விஷயங்களை இது பெற்றுள்ளது. வெர்டிகலான 3-பாட் LED ஹெட்லைட்கள் மற்றும் LED DRL -கள் உள்ளன.
பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது பெரிய ஜன்னல் பேனல்கள், சி-பில்லருக்கு அருகில் ஒரு கிங்க், மற்றும் 17-இன்ச் அலாய் வீல்களுக்கான ஸ்கொயர்-ஆஃப் வீல் ஆர்ச் -கள் மற்றும் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. பின்புறத்தில் சிரோஸ் நேர்த்தியான எல்-வடிவ எல்இடி லைட்ஸ், சில்வர் ஃபினிஷ்ட் ஸ்கிட் பிளேட் உடன் ஒரு பெரிய பம்பர் மற்றும் ஒரு ஃபிளாட் டெயில்கேட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
கியா சிரோஸ் இன்டீரியர் மற்றும் வசதிகள்
டூயல்-டோன் கேபின் தீம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட் அடிப்படையில் இது மாறுபடும். லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவையும் உள்ளன.
வசதிகளைப் பொறுத்தவரை சிரோஸ் இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் மற்றும் பின்புற இருக்கைகளுடன் வருகிறது. இது கிளைமேட் கன்ட்ரோல்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் 5 இன்ச் ஸ்கிரீன் உடன் வருகிறது. 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, முன், பக்க மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன.
தொடர்புடையது: Skoda Kylaq காரை விட Kia Syros இந்த 10 வசதிகளை வழங்குகிறது
கியா சிரோஸ் பவர்டிரெய்ன் விவரங்கள்
கியா சிரோஸ் -க்கு சோனெட் காரில் உள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை கொடுத்துள்ளது. அதன் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் உள்ளன:
விவரங்கள் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
120 PS |
116 PS |
டார்க் |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
கியா சிரோஸ் காரின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சிரோஸின் விலை ரூ.9.7 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற பிற சப்-4m எஸ்யூவி களான ஸ்கோடா கைலாக், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV 3XO, மற்றும் டாடா நெக்ஸான் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.