Kia Syros காரின் மேலும் ஒரு டீசர் வெளியானது
published on டிசம்பர் 16, 2024 08:32 pm by shreyash for க்யா syros
- 12 Views
- ஒரு கருத்தை எழுதுக
சைரோஸ் எஸ்யூவி பாக்ஸி எனப்படும் பெட்டி போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். மேலும் கியா சோனெட் மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றுக்கு இடையே விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
-
வரும் டிசம்பர் 19 -ம் தேதியன்று சைரோஸ் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.
-
கியா சைரோஸை ஃப்ளஷ் வகை டோர் ஹேண்டில்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வரும்.
-
காரில் டூயல் டிஜிட்டல் டிஸ்பிளேக்கள், வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை கிடைக்கும்.
-
கியா சோனெட்டின் உள்ளதை போலவே அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரலாம்.
-
விலை ரூ9 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா சைரோஸ் இந்தியாவில் கொரிய வாகன உற்பத்தியாளரின் அனைத்து புதிய எஸ்யூவி -யாக இருக்கும். மேலும் இதனால் இந்தியாவில் கியா -வின் விற்பனை வரிசையில் சோனெட் மற்றும் கியா செல்டோஸ் இடையே உள்ள வெற்றிடம் நிரப்பப்படும். கியா நிறுவனம் ஏற்கனவே சைரோஸின் டீஸரை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அதன் பெயர் உறுதி செய்யப்பட்டு விட்டது. வடிவமைப்பு விவரங்களும் காட்டுகிறது. இப்போது சைரோஸ் காரின் மேலும் ஒரு டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
டீசரில் என்ன பார்க்க முடிகிறது?
சமீபத்தில் வெளியான சைரோஸின் டீஸர் இப்போது அதன் பாக்ஸி சில்ஹவுட்டை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது. பக்கவாட்டில் இது ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் டோர்களில் முக்கிய சில்வர் கிளாடிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சைரோஸ் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளது என்பதையும் டீஸர் வெளிப்படுத்துகிறது. தற்போது வரையில் கியா இந்தியா இந்த பாப்-அவுட் ஸ்டைல் டோர் ஹேண்டில்களை அதன் பிரீமியம் மற்றும் அனைத்து எலக்ட்ரிக் மாடல்களான கியா EV6 மற்றும் கியா EV9 போன்றவற்றில் மட்டுமே இப்போது கிடைக்கிறது.
சமீபத்திய டீஸர்களின் அடிப்படையில் பார்க்கையில் சைரோஸ் வெர்டிகலாக 3-பாட் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் LED DRL -கள் மற்றும் L வடிவ LED டெயில் லைட்களுடன் வருகிறது.. இது நீளமான ரூஃப் ரெயில்ஸ், பெரிய ஜன்னல் பேனல்கள், ஒரு ஃபிளாட் ரூஃப் மற்றும் சி-பில்லரின் ஜன்னல் பெல்ட்லைனில் ஒரு கிங்க் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மேலும் பார்க்க: 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 10 எஸ்யூவி -களை நீங்கள் வீட்டிற்கு ஓட்டலாம்
கேபின் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
கியா இன்னும் சைரோஸின் உட்புறத்தை காட்டவில்லை என்றாலும் இது சோனெட் மற்றும் செல்டோஸ் எஸ்யூவி -களுடன் ஒற்றுமையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சைரோஸின் சமீபத்திய டீஸர்கள் ஒன்று போர்-ஜெட் போன்ற கியர் லீவர்களையும், பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் பெறும் என்று தெரியவந்துள்ளது. சைரோஸ் டூயல் டிஸ்பிளே செட்டப், ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்களுடன் வரலாம்.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், ரிவர்சிங் கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை அடங்கும். லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளையும் சைரோஸ் பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின்கள்
சைரோஸ் ஆனது சோனெட் போன்ற பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2-லிட்டர் N/A பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
83 PS |
120 PS |
116 PS |
டார்க் |
115 Nm |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு iMT, 6-ஸ்பீடு AT |
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சைரோஸ் ரூ.9 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் நேரடி போட்டியாளர்களைக் கொண்டிருக்காது, ஆனால் இது போன்ற ஆனது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, மற்றும் கியா செல்டோஸ் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கும் மாற்றாக இருக்கும். மட்டுமில்லாமல் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV 3XO, மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற சப்காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கும் போட்டியாகவும் இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful