சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Kia Syros பேஸ்-ஸ்பெக் HTK வேரியன்ட்டில் கிடைக்கும் பிரீமியம் வசதிகள் என்ன தெரியுமா ?

க்யா சிரோஸ் க்காக டிசம்பர் 23, 2024 06:37 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

வேறு எந்த சப்-4m எஸ்யூவி -களிலும் இல்லாத வகையில் சைரோஸ் கார் ஆனது ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் போன்ற பல பிரீமியம் வசதிகளுடன் வருகிறது.

சமீபத்தில் கியா நிறுவனம் இந்தியாவில் கியா சைரோஸ் காரை அறிமுகம் செய்தது. நாங்கள் ஏற்கெனவே வேரியன்ட் வாரியான வசதிகளை விவரித்துள்ளோம். ஸ்பெக் ஷீட்டை பார்த்தால் பேஸ்-ஸ்பெக் HTK வேரியன்ட்டிலிருந்தே சைரோஸ் நிறைவான வசதிகளுடன் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். HTK வேரியன்ட்டில் கிடைக்கும் அனைத்து விஷயங்களும் இங்கே:

கியா சைரோஸ் HTK: வெளிப்புறத்தில் உள்ள விஷயங்கள்

பேஸ்-ஸ்பெக் HTK வேரியன்ட்டில் ஆட்டோமேட்டிக் ஹாலஜன்-ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், ஹாலஜன் டெயில் லைட்டுகள் மற்றும் கவர்களுடன் கூடிய 15-இன்ச் ஸ்டீல் வீல்கள் போன்ற விஷயங்கள் வெளிப்புறத்தில் உள்ளன. மிக முக்கியமாக இது ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்கள், முன் மற்றும் பின்புற பம்பரில் சில்வர் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், ரூஃபில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் ஷார்க்-ஃபின் ஆண்டெனாவுடன் வருகிறது. இந்த வசதிகள் இந்த சப்-4m எஸ்யூவி -யின் பிரீமியத்தை அதிகரிக்கின்றன.

கியா சைரோஸ் HTK: உட்புறத்தில் உள்ள விஷயங்கள்

சைரோஸின் HTK வேரியன்ட்டின் உட்புறமும் அதன் வெளிப்புறத்தைப் போலவே பிரீமியமாக உள்ளது. பேஸ் வேரியன்ட்டிலிருந்தே சைரோஸ் டூயல்-டோன் பிளாக் மற்றும் கிரே கேபின் மற்றும் கேபின் தீமுடன் பொருந்தக்கூடிய செமி-லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் வழங்கப்படுகிறது. இது ஆடியோ கன்ட்ரோலுக்கான பட்டன்களுடன் டில்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், முன்பக்க சென்டர் ஆர்ம்ரெஸ்ட், அட்ஜெஸ்ட்டபிள் முன் ஹெட்ரெஸ்ட்கள், சன் கிளாஸ் ஹோல்டர் மற்றும் பின்புற ஜன்னல்களுக்கான சன்ஷேட்கள் போன்ற ஆப்ஷனலான சேர்த்தல்களையும் பெறுகிறது.

மேலும் படிக்க: கியா சைரோஸ் மற்றும் கியா சோனெட் மற்றும் கியா செல்டோஸ்: விவரங்கள் ஒப்பீடு

கியா சைரோஸ் HTK: கம்ஃபோர்ட் மற்றும் வசதிகள்

பேஸ்-ஸ்பெக் சைரோஸ் உள்ளேயும் வெளியேயும் நன்றாக இருப்பது மட்டுமல்லாமல் முன்பு குறிப்பிட்டது போல் பல விஷயங்களையும் கொண்டுள்ளது. 4.2-இன்ச் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (MID) கொண்ட அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இல்லுமினேட்டட் பட்டன்கள் கொண்ட நான்கு பவர் விண்டோஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் எக்ஸ்ட்டீரியர் ரியர்வியூ கண்ணாடிகள் (ORVM -கள்) ஆகியவை இதில் உள்ளன. இது ஒரு டே/நைட் உள்ளே ரியர்வியூ மிரர் (IRVM), ரியர் வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி, முன் மற்றும் பின் பயணிகளுக்கான டைப்-சி USB சார்ஜிங் போர்ட்கள் மற்றும் முன் பயணிகளுக்கான 12V பவர் அவுட்லெட் ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது.

கியா சைரோஸ் HTK: இன்ஃபோடெயின்மென்ட்

பொதுவாக என்ட்ரி-லெவல் வேரியன்ட்களில் டச் ஸ்கிரீன் அல்லது ஆடியோ சிஸ்டம் வழங்கப்படுவதில்லை. ஆனால் கியா சைரோஸ் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கனெக்டிவிட்டியை பெறுகிறது. 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டமும் கியாவால் பேஸ்-ஸ்பெக் HTK வேரியன்ட்டுடன் வழங்கப்படுகிறது.

கியா சைரோஸ் HTK: பாதுகாப்பு வசதிகள்

6 ஏர்பேக்குகள், டைனமிக் வழிகாட்டுதல்களுடன் கூடிய ரியர்வியூ கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளையும் சைரோஸ் ஸ்டாண்டர்டாக பெறுகிறது. இது முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட் பெல்ட்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.

மேலும் படிக்க: பாரத் NCAP -ல் விரைவில் கிராஷ் டெஸ்ட் செய்யப்படவுள்ள கியா சைரோஸ், 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுமா ?

கியா சைரோஸ் HTK: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

HTK வேரியன்ட் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டுமே வருகிறது. இது 120 PS மற்றும் 172 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டுடன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் எதுவும் கிடைக்கவில்லை.

சைரோஸின் மற்ற டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களும் 7-ஸ்பீடு DCT உடன் வருகின்றன. மேலும் சப்-4m எஸ்யூவி 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS/250 Nm) மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது.

கியா சைரோஸ்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

கியா சைரோஸ் ஆனது 2025, ஜனவரி -யில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இதன் விலை ரூ. 9 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). கியாவின் புதிய சப்-4எம் எஸ்யூவி -க்கு நேரடி போட்டியாளர்கள் எதுவும் இல்லை. ஆனால் இது மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், சோனெட், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, மற்றும் கியா செல்டோஸ் போன்ற சப்காம்பாக்ட் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு மாற்றாக இருக்கும்.

குறிப்பு: டாப்-ஸ்பெக் HTX பிளஸ் O வேரியன்ட்டின் படங்கள் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Kia சிரோஸ்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை