Kia Syros காரின் வெளியீடு மற்றும் டெலிவரி விவரங்கள்
published on ஜனவரி 02, 2025 10:12 pm by dipan for க்யா syros
- 62 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா சைரோஸ் காரின் வெளியீட்டு தேதியுடன், டெலிவரி விவரங்களையும் கியா வெளியிட்டுள்ளது.
-
பிப்ரவரி 1, 2025 அன்று விலை விவரங்கள் வெளியிடப்படும். பிப்ரவரி நடுப்பகுதியில் டெலிவரி தொடங்கும், .
-
இது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது:
-
3-பாட் LED ஹெட்லைட்கள், L வடிவ LED டெயில் லைட்ஸ் மற்றும் ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
-
டூயல்-டோன் பிளாக் மற்றும் கிரே கேபின் தீம் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் உடன் வருகிறது.
-
டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள் ஆகியவை அடங்கும்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை அடங்கும்.
-
கியா சோனெட்டிலிருந்து பெறப்பட்ட 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் அல்லது 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் வருகிறது.
-
இதன் விலை ரூ.9.70 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 டிசம்பரில் பிரீமியம் சப்-4எம் எஸ்யூவி -யான கியா சைரோஸ் வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஹூண்டாயின் சோனெட் மற்றும் செல்டோஸ் ஆகிய எஸ்யூவிகள் விற்பனையில் உள்ளன. சைரோஸ் பிப்ரவரி 1, 2025 அன்று விற்பனைக்கு வரும் என்றும், பிப்ரவரி மத்தியில் டெலிவரிகள் தொடங்கும் என்றும் கியா அறிவித்துள்ளது. சைரோஸ் காரை பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே.
கியா சைரோஸ்: ஒரு பார்வை
கியா சைரோஸ் ஆனது EV9 போன்ற ஒரு பாக்ஸி எஸ்யூவி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 3-பாட் LED ஹெட்லைட்கள், L-வடிவ LED டெயில் லைட்ஸ், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது முன்பக்கம், பின்பக்கம் மற்றும் சைடு பார்க்கிங் சென்சார்களும் உள்ளன.
அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் வென்டிலேட்டட் கொண்ட முன் மற்றும் பின்புற இருக்கைகளுடன் டூயல்-டோன் பிளாக் மற்றும் கிரே கேபின் உடன் வருகிறது. இது டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், 2-ஸ்போக் ஸ்டீயரிங், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றுடன் வருகிறது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும். இது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கொலிஷன் மிட்டிகேஷன் சிஸ்டம் போன்ற லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்புடன் வருகிறது.
மேலும் படிக்க: எங்கள் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களிடன் கியா சைரோஸில் அவர்கள் எதைப் பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தார்கள் என்று கேட்டோம்
கியா சைரோஸ்: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
கியா சைரோஸ் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
120 PS |
116 PS |
டார்க் |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன்* |
6-வேக MT, 7-வேக DCT |
6-வேக MT, 6-வேக AT |
* MT = மேனுவல் டிரான்ஸ்மிஷன்; AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்; DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
கியா சைரோஸ்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சைரோஸ் காரின் விலை ரூ.9.70 லட்சம் முதல் ரூ.16.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற சிறிய எஸ்யூவி களுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும். மேலும் டாடா நெக்ஸான், சோனெட் மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்ற சப் காம்பாக்ட் எஸ்யூவி -களுடன் போட்டியிடுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.