• English
  • Login / Register

Kia Syros காரின் இன்ட்டீரியர் டீஸர் வெளியாகியுள்ளது

க்யா syros க்காக டிசம்பர் 10, 2024 08:07 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 100 Views
  • ஒரு கருத்தை எழுதுக

சைரோஸ் காரின் இன்ட்டீரியரில் பிளாக் மற்றும் கிரே கேபின் தீம் மற்றும் கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பெரிய டச் ஸ்கிரீன் ஆகியவை இருக்கும் என்பதை லேட்டஸ்ட் டீஸர் காட்டுகிறது.

Kia Syros interior teased

  • இந்தியாவில் கியா -வின் கார் வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸ் எஸ்யூவி -களுக்கு இடையில் சைரோஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் புதிய கியர் ஷிஃப்டர் ஆகியவை கேபினில் இருக்கும்.

  • வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பல ஏர்பேக்குகள் மற்றும் முன் பார்க்கிங் சென்சார்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • சோனெட் போன்ற அதே கியர்பாக்ஸ் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் உடன் வரலாம்.

  • டிசம்பர் 19 அன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது; விலை ரூ. 9 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள கியா நிறுவனத்தின் புதிய காரான கியா சைரோஸ் காரின் புதிய டீஸர் ஒன்று வெளியாகியுள்ளது. இப்போது அதன் சமீபத்திய டீஸர் காரின் கேபினை பற்றிய ஒரு பார்வையை கொடுக்கிறது, அதே நேரத்தில் காரில் கிடைக்கவுள்ள சில புதிய வசதிகளையும் டீஸர் உறுதிப்படுத்துகிறது. சோனெட் மற்றும் செல்டோஸ் கார்களுக்கு இடையே விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ள டிசம்பர் 19 அன்று உலக அளவில் அறிமுகமாக உள்ளது.

என்ன பார்க்க முடிகிறது ?

புதிய டீசரின் அடிப்படையில் கியர் ஷிஃப்டர், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், டிரைவ் மற்றும் டெரெய்ன் மோட்களுக்கான கன்ட்ரோல்களுடன் கூடிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் பல டைப்-சி யூ.எஸ்.பி போர்ட்கள் ஆகியவை விமானங்களில் உள்ளதை போல் கன்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளதை நாம் கவனிக்கலாம். பார்க்கிங் சென்சார்களுக்கான இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் கன்ட்ரோலருக்குக் கீழே இரண்டு பட்டன்கள் மற்றும் முறையே 360 டிகிரி கேமராவுடன் வருகிறது என்பதையும் குறுகிய வீடியோ கிளிப் வெளிப்படுத்துகிறது. டீசரின் அடிப்படையில் பார்க்கையில் சைரோஸின் கேபினில் பிளாக் மற்றும் கிரே கலர் தீம் இடம் பெறும் என்று தெரிகிறது.

போர்டில் உள்ள வசதிகள்

Kia Syros wireless phone charger
Kia Syros big touchscreen

வீடியோவில் இருந்து சைரோஸ் காரில் ஆம்பியன்ட் லைட்ஸ், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் (சோனெட்டில் இருந்து அதே 10.25-இன்ச் யூனிட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) அடிக்கடி இயக்கப்படும் செயல்பாடுகளுக்கான பாடி கன்ட்ரோல்களுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. எதிர்பார்க்கப்படும் பிற உபகரணங்களில் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோ ஏசி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை அடங்கும்.

சைரோஸ் காரில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதிகளில் ஒன்றாக ஸ்டீயரிங் வீலில் உள்ள லேன்-கீப் அசிஸ்ட்டின் பட்டன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பு கிடைக்கும் என தெரிகிறது. பாதுகாப்பை பொறுத்தவரையில் மல்டி ஏர்பேக்ஸ் , ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் முன் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் பாருங்கள்: 2024 நவம்பரில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்கள்

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், சைரோஸ் ஆனது சோனெட் போன்ற இன்ஜின் ஆப்ஷன்களை பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவற்றின் தொழில்நுட்ப விவரங்கள் பின்வருமாறு:

விவரங்கள்

1.2-லிட்டர் N/A பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

83 PS

120 PS

116 PS

டார்க்

115 Nm

172 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT

6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு iMT, 6-ஸ்பீடு AT

ஐஎம்டி (கிளட்ச்லெஸ் மேனுவல்) மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) உட்பட, சோனெட்டின் அதே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறும் என எதிர்பார்க்கிறோம்.

சமீபத்திய வீடியோவில் இருந்து பார்க்கையில் உயர்தரமான கார்களில் உள்ளதை போல் இது மல்டி டெர்ரெயின் மற்றும் டிரைவ் மோடுகளை பெறும் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

Kia Syros rear

கியா சைரோஸ் காரின் விலை சுமார் ரூ.9 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் சந்தையில் எந்த நேரடி போட்டியாளர்களையும் கொண்டிருக்காது. ஆனால் இது டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் கிரெட்டா, மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற சப்காம்பாக்ட் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Kia syros

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 57 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience