• English
  • Login / Register

சோதனையின் போது தென்பட்ட Kia Sonet Facelift ;2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படலாம்

published on ஆகஸ்ட் 22, 2023 09:53 pm by tarun for க்யா சோனெட்

  • 37 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட உட்புறங்கள் மற்றும் பல அம்சங்களுடன், சோனெட் அறிமுகமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அப்டேட்களை பெறும்.

Kia Sonet Facelift

  • ஃபேஸ்லிஃப்டட் சோனெட் புதுப்பிக்கப்பட்ட முன்புற தோற்றம், புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய டெயில்லைட்களுடன் மீண்டும் தென்பட்டது.

  • கேபினிலும் நுட்பமான ஸ்டைலிங் மேம்பாடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிளஸ்டருக்காக இரட்டை 10.25-இன்ச் இன்டெகிரேட்டட் டிஸ்பிளேக்களைப் பெறலாம்.

  • 360 டிகிரி கேமரா மற்றும் ADAS மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்படலாம்.

  • அதே பெட்ரோல், டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடர வாய்ப்புள்ளது.

  • 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் மீண்டும்  பார்க்கப்பட்டது மற்றும் இன்னும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், சோதனை வேறுபட்ட காருக்குரியதாக தெரிகிறது. சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆனது 2020 -ல் அறிமுகமானதிலிருந்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் முதல் பெரிய அப்டேட்டை பெறவுள்ளது.

இதில் என்ன புதிதாக உள்ளது ?

Kia Sonet Facelift
முன்பக்கத்தில், சோனெட் ஃபேஸ்லிஃப்ட் புதுப்பிக்கப்பட்ட LED ஹெட்லைட்கள் மற்றும் DRLகளுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில் மற்றும் பம்பருடன் கிடைக்கும். முன்புற பார்க்கிங் சென்சார்களும் பம்பரில் காணப்படுகின்றன, இது எஸ்யூவி -க்கு ஒரு புதிய கூடுதல் அம்சமாக இருக்கும்.

 இது 16-இன்ச் அலாய் வீல்களின் புதிய தொகுப்பை பெறும், இது முன்பு காணப்பட்ட GT லைன் சோதனையில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சோனெட்டின் HTX அல்லது HTX+ காராக இருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது.

 செல்டோஸை போலவே பின்புற தோற்றமும் கனெக்டட் LED டெயில்லைட்களை சேர்க்கும். பம்பர் மற்றும் பூட் லிட் -டிலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

உட்புறத்தில் உள்ள மாற்றங்கள்

இந்த ஸ்பை படங்கள் உட்புறத்தைக் காட்டவில்லை என்றாலும், கேபின் ஸ்டைலிங்கிலும் சில புதுப்பிப்புகளை எதிர்பார்க்கலாம். சென்டர் கன்சோல், சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் இன்டீரியர் தீம் அனைத்தும் கவர்ச்சிக்காக புதுப்பிக்கப்படலாம்.

Kia Sonet cabin

சேர்க்கப்பட்ட புதிய அம்சங்கள்

புதிய சோனெட் ஆனது செல்டோஸில் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) போன்றவற்றில் காணப்படுவது போல் டூயல் டிஸ்பிளே ஸ்கிரீன் அமைப்பை பெறலாம்.

மின்சார சன்ரூஃப், வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பேடில்  ஷிஃப்டர்கள், ஆறு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் தற்போது இருக்கின்றன.

மேலும் படிக்க: சப் காம்பேக்ட் SUVயில் அகலமான சன்ரூஃப் கிடைக்குமா?

ஏதேனும் பவர்டிரெய்ன் புதுப்பிப்புகள் உள்ளதா?

83PS 1.2-லிட்டர் பெட்ரோல், 120PS 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 115PS 1.5-லிட்டர் டீசல் ஆப்ஷன்களை உள்ளடக்கிய 2024 சோனெட் இன்ஜின்களின் தற்போதைய தொகுப்பைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் iMT (கிளட்ச் மிதி இல்லாமல் மேனுவல்) ஸ்டாண்டர்டாக பெறுகின்றன.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

Kia Sonet Facelift

ஃபேஸ்லிஃப்டட் சோனெட்  தற்போதைய விலையான ரூ. 7.79 இலட்சத்திலிருந்து ரூ.14.89 இலட்சம் வரை (எக்ஸ் ஷோ ரூம் ) விட கூடுதல் ஃப்ரீமியத்திற்கான  தகுதியைப் பெறும். ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் மாருதி சுஸூகி பிரெஸ்ஸா  ஆகியவற்றுக்கு தொடர்ந்து போட்டியாக இது இருக்கும்.

படங்களின் ஆதாரம்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Kia சோனெட்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience