• English
  • Login / Register

Kia Sonet மற்றும் Seltos GTX வேரியன்ட்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் X-Line டிரிம் இப்போது புதிய நிறத்தில் கிடைக்கிறது

published on ஜூலை 03, 2024 07:45 pm by samarth for க்யா Seltos

  • 29 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேரியன்ட் ஃபுல்லி லோடட் GTX+ டிரிமிற்கு கீழே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மற்றும் இது ஆட்டோமெட்டிக்ட் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

Kia Sonet And Seltos GTX Variant Launched

  • கியா சோனெட் மற்றும் செல்டோஸ் ஆனது GTX என்ற புதிய வேரியன்ட்டை பெற்றுள்ளது. இது சோனெட் -க்கான HTX+ மற்றும் GTX+ டிரிம்கள் மற்றும் செல்டோஸிற்கான HTX+ மற்றும் GTX+(S) ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது.

  • சோனெட் GTX ஆனது 4-வே பவர்டு டிரைவர் சீட், ஏர் ஃபியூரிபையர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளைப் பெறுகிறது.

  • செல்டோஸ் GTX லெவல் 2 ADAS, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் முன்பக்க வென்டிலேட்டட் இருக்கைகளுடன் வருகிறது. 

  • இரண்டு எஸ்யூவி -களின் எக்ஸ்-லைன் டிரிம் தற்போதுள்ள மேட் கிராஃபைட்டுடன் கூடுதலாக புதிய அரோரா பிளாக் பேர்ல் கலர் ஆப்ஷன்களை வழங்குகிறது.

  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேரியன்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் கிடைக்கிறது. ஆனால் ஆட்டோமெட்டிக்ட் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கிறது. 

  • சோனெட் GTX -ன் விலை ரூ.13.71 லட்சத்தில் தொடங்குகிறது. செல்டோஸ் GTX ரூ.19 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) வழங்கப்படுகிறது.

கியா மோட்டார் இந்தியா அதன் பிரபலமான எஸ்யூவி -களின் வேரியன்ட் வரிசையில் சில மாற்றங்களை செய்துள்ளது.  சோனெட் மற்றும் செல்டாஸ், சோனெட்டிற்கான HTX+ மற்றும் GTX+ டிரிம்களுக்கும், செல்டோஸிற்கான HTX+ மற்றும் GTX+(S) டிரிம்களுக்கும் இடையில் அமைந்திருக்கும் புதிதாக ஹையர்-ஸ்பெக் வேரியன்ட் GTX இப்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.இதனுடன் இரண்டு மாடல்களின் எக்ஸ்-லைன் வேரியன்ட்களும் புதிய கலர் ஆப்ஷனை பெற்றுள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேரியன்ட் பற்றிய அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்: 

எக்ஸ்-லைனில் புதிய நிறம்

Kia Seltos X-Line Pearl Black Colour

வாடிக்கையாளர்கள் இப்போது இரண்டு எஸ்யூவி -களின் X-லைன் வேரியன்ட்டை இரண்டு கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்: மேட் கிராபைஃட் மற்றும் அரோரா பிளாக் பேர்ல் பேர்ல் (புதியது). 

சோனெட் GTX காரின் முக்கிய வசதிகள்

Kia Sonet GTX Front
Kia Sonet GTX Interiors

சோனெட் காரின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட GTX வேரியன்ட்டின் முக்கிய வசதிகள் இங்கே:

வெளிப்புறம்

  • ஃபாலோ மீ ஹோம் ஃபங்ஷனுடன் LED ஹெட்லைட்கள்

  • LED DRL -கள்

  • கனெக்டட் LED டெயில் லைட்ஸ்

  • LED ஃபாக் லைட்ஸ்

  • 16-இன்ச் அலாய் வீல்கள்

உட்புறங்கள்

  • வொயிட் கலர் இன்செர்ட்களுடன் கூடிய பிளாக் கலர் இன்ட்டீரியர்ஸ்

  • வொயிட் கலர் இன்செர்ட்களுடன் கூடிய பிளாக் லெதரெட் இருக்கைகள்

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

  • உயரத்தை சரி செய்து கொள்ளக்கூடிய ஓட்டுநர் இருக்கை (மேனுவல்)

  • முன்பக்க வென்டிலேட்டட் இருக்கைகள்

  • 4-வே எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை

  • ஸ்டீயரிங் வீலுக்கான டில்ட் அட்ஜஸ்ட்மென்ட் 

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி

  • ஏர் பியூரிபையர்

இன்ஃபோடெயின்மென்ட்


  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே

  • கனெக்டட் கார் டெக்னாலஜி

  • 6 ட்வீட்டர்ஸ்

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்குகள்

  • பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா

  • ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்

மேலும் படிக்க: இனிமேல் கேந்திரிய போலீஸ் கல்யாண் பந்தரிலும் கியா கார்கள் கிடைக்கும்: முழுமையான விலை பட்டியலை இங்கே பார்க்கவும்

செல்டோஸ் GTX -ல் உள்ள முக்கிய வசதிகள்

Kia Seltos GTX Front
Kia Seltos GTX Interiors

செல்டோஸ் GTX பின்வரும் முக்கிய வசதிகளுடன் வருகிறது:

வெளிப்புறம்

  • LED ஹெட்லைட்கள்

  • LED DRLகள்

  • கனெக்டட் LED டெயில் லைட்ஸ்

  • LED ஃபாக் லைட்ஸ்

  • 18-இன்ச் அலாய் வீல்கள்

இன்ட்டீரியர்ஸ்

  • வொயிட் கலர் இன்செர்ட்களுடன் கூடிய பிளாக் கலர் இன்ட்டீரியர்ஸ்

  • வொயிட் கலர் இன்செர்ட்களுடன் கூடிய பிளாக் லெதரெட் இருக்கைகள்

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

  • பனோரமிக் சன்ரூஃப்

  • முன்பக்க வென்டிலேட்டட் சீட்கள்

  • டூயல் ஜோன் ஃபுல் ஆட்டோமெட்டிக்ட் ஏர் கண்டிஷனர்

  • டில்ட் & டெலஸ்கோபிக் ஸ்டீயரிங்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

இன்ஃபோடெயின்மென்ட்

  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே

  • கனெக்டட் கார் டெக்னாலஜி

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்குகள்

  • லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS)

  • பிளைண்ட் ஸ்பாட் மானிட்டருடன் 360 டிகிரி கேமரா

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்

பவர்டிரெய்ன் 

சோனெட் மற்றும் செல்டோஸ் -ன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட GTX டிரிம் இரண்டு பவர்டிரெய்ன்களில் வழங்கப்படுகிறது: 

மாடல்

பவர்டிரெய்ன்

சோனெட் GTX

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (120 PS/172 Nm)

  • 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS/250 Nm)

செல்டோஸ் GTX

  • 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS/253 Nm)

  • 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS/250Nm)

  • டிரான்ஸ்மிஷன்களை பொறுத்தவரையில் இரண்டு எஸ்யூவி -களின் GTX வேரியன்ட் ஒரு ஆட்டோமெட்டிக்ட் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

  • சோனெட் GTX மற்றும் செல்டோஸ் GTX இரண்டும் அந்தந்த டர்போ-பெட்ரோல் இன்ஜினுக்கான 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) மற்றும் ஷேர்டு டீசல் இன்ஜினுக்கான 6-ஸ்பீடு  AT -யுடன் வருகிறது.

  • கியா நிறுவனம் சோனெட் மற்றும் செல்டோஸ் -ன் லோவர்-ஸ்பெக் வேரியன்ட்களில் 1.2-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பவர்டிரெய்ன் ஆப்ஷனை வழங்குகிறது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

Kia Sonet GTX Front
Kia Seltos GTX Front

புதிய வேரியன்ட்டின் விலை விவரங்களை இங்கே பார்க்கலாம்:

 

டர்போ-பெட்ரோல் DCT

டீசல் AT

சோனெட் GTX

ரூ.13.71 லட்சம்

ரூ.14.56 லட்சம்

செல்டோஸ் GTX

ரூ.19 லட்சம்

ரூ.19 லட்சம்

கியா செல்டோஸ் ஆனது ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மாருதி கிராண்ட் விட்டாரா, சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. சோனெட் ஆனது ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர், மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி ஆகியவற்றுடன் போட்டியிடும்.

லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்களுக்கு கார்தேகோ வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

மேலும் படிக்க: கியா செல்டோஸ் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Kia Seltos

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience