சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

360 டிகிரி கேமராவுடன் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ள Kia Carens ஃபேஸ்லிஃப்ட் கார்

published on ஜூன் 10, 2024 06:33 pm by dipan for க்யா கேர்ஸ் 2025

வரவிருக்கும் கியா கேரன்ஸ் தற்போது கிடைக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஃபேஸ்லிப்டட் கியா கேரன்ஸ் காரில் கனெக்டட் LED பார் மற்றும் அலாய் வீல்களுடன் புதிய டெயில்லைட்கள் மற்றும் ஹெட்லைட்கள் ஆகியவையும் கொடுக்கப்படலாம்.

  • பிளாக்-அவுட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் தற்போதைய மாடலின் அதே டேஷ்போர்டு அமைப்புடன் ஒரே மாதிரியான இன்ட்டீரியரையே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகிய வசதிகள் புதிதாக சேர்க்கப்படலாம்.

  • தற்போதைய மாடலில் உள்ளதை போல அதே டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • 2025 ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே ஆண்டின் இரண்டாம் பாதியில் EV எடிஷன் வரும்.

இந்தியாவில் கடந்த 2022 -ம் ஆண்டில் இருந்து கியா கேரன்ஸ் MPV விற்பனையில் உள்ளது. இன்றுவரை சில வேரியன்ட்கள் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளன, சில வசதிகளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன, ஆனால் இதுவரை விரிவான அப்டேட் கொடுக்கப்படவில்லை. எனினும் இந்த MPV விரைவில் ஒரு ஃபேஸ்லிப்டட் அப்டேட்டை பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றும் இப்போது இந்திய சாலைகளில் புதிய கார் சோதனை செய்யப்பட்டு வருகிறது. காரில் இதுவரை செய்யப்பட்டுள்ள மாற்றங்களை இன்னும் விரிவாகப் பார்ப்போம்:

தெரிய வரும் மாற்றங்கள்

கேரன்ஸின் முன் பகுதி -யை பற்றி ஓரளவு தெரிய வந்துள்ளது. மற்றும் DRL ஆக செயல்படும் LED லைட் பார் மூலம் கனெக்டட் மாற்றப்பட்ட ஹெட்லைட் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

கேரன்ஸின் பின்பகுதியும் அதிகமாக மறைக்கப்பட்டிருந்தாலும் கூட டெயில் லைட்ஸ், புதிய LED எலமென்ட் உடன் வரவிருக்கும் கியா EV9 காரின் வடிவமைப்பில் உள்ளதைப் போன்றே மாற்றியமைக்கப்பட்டதை போல தெரிகிறது. ஒரு புதிய அலாய் வீல் வடிவமைப்பும் கொடுக்கப்படலாம், ஆனால் அளவு பெரும்பாலும் முன்பு இருந்ததை போல இருக்கலாம்.

வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகளில் (ORVMs) கேமராக்களும் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இது MPV -யில் முதல் முறையாக 360-டிகிரி செட்டப் இருப்பதைக் குறிக்கிறது.

உட்புறத்தை பற்றிய விவரங்கள் அதிகம் தெரியவில்லை என்றாலும் கூட இப்போது படம்பிடிக்கப்பட்டுள்ளா டெஸ்ட் கார் ஆனது இருக்கைகளில் பிளாக் லெதர் செட்டப்பை கொண்டுள்ளது. இது தற்போதைய மாடலை போலவே இருக்கை வென்டிலேஷன் ஆப்ஷனை கொண்டிருக்கும். மேலும் இப்போதுள்ள மாடலில் உள்ள அதே சிங்கிள்-பேன் சன்ரூஃப் கொடுக்கப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் உட்புறங்கள் மற்றும் வசதிகள்

இந்த புதிய MPV -யில் புதிய வடிவிலான AC பேனல் மற்றும் வெவ்வேறு சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் தற்போதைய 6 மற்றும் 7 சீட் அமைப்பை அப்படியே வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரன்ஸ் ஒரு அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) யூனிட்டை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது தற்போது இந்தியாவில் கியா கார் இல்லாமல் உள்ளது.

கேரன்ஸ் ஏற்கனவே இரண்டு 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்க்காக மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்க்காக), வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. பாதுகாப்பை பொறுத்தவரையில் 6 ஏர்பேக்குகள் (அனைத்து வேரியன்ட்களிலும்), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

இந்த நேரத்தில் அதன் பவர்டிரெய்ன் ஆப்ஷகள் பற்றி இன்னும் பெரிதாக தெரியவில்லை என்றாலும் கூட, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கேரன்ஸ் தற்போதைய இந்தியா-ஸ்பெக் மாடலில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்களை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பின்வரும் ஆப்ஷன்களை பெறுகிறது:

விவரங்கள்

1.5 லிட்டர் N/A பெட்ரோல்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

115 PS

160 PS

116 PS

டார்க்

144 Nm

253 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT

7-ஸ்பீடு DCT/6-ஸ்பீடு iMT

6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு iMT/6-ஸ்பீடு AT

* DCT - டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்

^ iMT - இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (கிளட்ச்-லெஸ் மேனுவல் கியர்பாக்ஸ்)

கியா நிறுவனம் 400 கி.மீ தூரம் செல்லும் வகையில் கேரன்ஸ் இவி -யையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2025 ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் தற்போதைய மாடலை விட விலை அதிகமாக இருக்கும். தற்போது கியா கேரன்ஸ் விலை ரூ. 10.52 லட்சம் முதல் ரூ. 19.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆக உள்ளது. இது மாருதி எர்டிகா, டொயோட்டா ரூமியான், மற்றும் மாருதி XL6 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மற்றும் மாருதி இன்விக்டோ ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: கேரன்ஸ் டீசல்

d
வெளியிட்டவர்

dipan

  • 41 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது க்யா கேர்ஸ் 2025

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை