மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட Jeep Meridian X கார், விலை ரூ.34.27 லட்சமாக நிர்ணயம்
published on ஜூன் 06, 2024 02:19 pm by shreyash for ஜீப் meridian
- 34 Views
- ஒரு கருத்தை எழுதுக
மெரிடியன் எக்ஸ் காரில் டூயல் கேமரா டேஷ்கேம் மற்றும் பின்புற பயணிகளுக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
-
ஜீப் மெரிடியன் எக்ஸ் என்ட்ரி-லெவல் லிமிடெட் (O) வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது.
-
பக்கவாட்டு படிகள் மற்றும் வொயிட் அண்டர் பாடி லைட்டிங் ஆகியவை வெளிப்புறத்தில் உள்ள சிறப்பம்சமாக உள்ளன.
-
உள்ளே இது ஃபுட்வெல் லைட், நான்கு ஜன்னல்களுக்கும் சன் ஷேட்கள் மற்றும் ஏர் ஃபியூரிபையர் ஆகியவற்றைப் பெறுகிறது.
-
10.1-இன்ச் டச் ஸ்கிரீன், டூயல் ஜோன் ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகள் அடங்கும்.
-
6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன.
-
அதே 2-லிட்டர் டீசல் இன்ஜின் (170 PS/350 Nm) பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜீப் காம்பஸின் நீளமான மற்றும் 3-வரிசை பதிப்பாக ஜீப் மெரிடியன் 2022 ஆண்டில் இந்தியாவில் அறிமுகமானது. அப்போதிருந்து மெரிடியனின் அப்லேண்ட் மற்றும் X போன்ற சிறப்பு பதிப்புகள் உட்பட பல புதுப்பிப்புகளுக்கு உட்பட்டுள்ளது. ஜீப் இப்போது மெரிடியன் X ஐ கூடுதல் வசதிகளுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 34.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான் இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2024 மெரிடியன் X காரில் புதிதாக என்ன இருக்கிறது
சைட் ஸ்டெப்ஸ் மற்றும் ஒயிட் அண்டர்பாடி லைட்டிங் போன்ற சில ஒப்பனை மாற்றங்களைத் தவிர, மெரிடியன் எக்ஸ் வடிவமைப்பில் ஜீப் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது கிரே ரூஃப், கிரே கலர் பாக்கெட்டுகளுடன் கூடிய அலாய் வீல்கள் மற்றும் சைடு மோல்டிங்குகளையும் பெறுகிறது. இந்த மாற்றங்களைத் தவிர, இது அடிப்படையில் லிமிடெட் (O) வேரியன்ட் போலவே இருக்கிறது.
2024 ஆம் ஆண்டு மெரிடியன் எக்ஸ் பதிப்பானது பின்புற இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஃபுட்வெல் இல்லுமினேஷன், பிரீமியம் கார்பெட் மேட்ஸ், நான்கு ஜன்னல்களுக்கும் சன் ஷேடுகள் மற்றும் ஏர் பியூரிஃபையர் போன்ற வசதிகளைப் பெறுகிறது. மேலும் ஜீப் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.2 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 9-ஸ்பீக்கர் ஆல்பைன் சவுண்ட் சிஸ்டம், டூயல்-ஜோன் ஏசி, 8-வே பவர்டு மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வருகிறது.
இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன. மெரிடியன் எக்ஸ் கூடுதலாக டூயல் கேமரா டேஷ்கேமையும் பெறுகிறது.
அதே டீசல் பவர்டிரெய்ன்
ஜீப் மெரிடியன், ஜீப் காம்பஸில் உள்ள அதே 2-லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 170 PS மற்றும் 350 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மெரிடியன் 4-வீல் டிரைவ் (4WD) டிரைவ் டிரெய்ன் ஆப்ஷனுடன் வருகிறது.
விலை & போட்டியாளர்கள்
ஜீப் மெரிடியன் விலை ரூ. 33.77 லட்சம் முதல் ரூ. 39.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) ஆக உள்ளது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றை போட்டியாளராக எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க: மெரிடியன் டீசல்