ரூ. 36.79 லட்சத்தில் மீண் டும் விற்பனைக்கு வந்த Jeep Meridian Limited (O) வேரியன்ட்
ஜீப் meridian க்காக ஜனவரி 10, 2025 11:42 pm அன்று dipan ஆல் திருத்தம் செய்யப்பட்டது
- 80 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜீப், அனைத்து வேரியன்ட்களுக்கும் ஒரு ஆக்ஸசரி பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ஹூட் டீக்கால் மற்றும் புரோகிராம் செய்யக்கூடிய ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை அடங்கும்.
-
லிமிடெட் (O) வேரியன்ட்யின் விலை இப்போது ரூ. 30.79 லட்சம் முதல் ரூ. 36.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.
-
இந்த அப்டேட் மூலமாக மெரிடியனில் AWD ஆப்ஷன் ரூ. 2 லட்சத்தில் விலை குறைவாக கிடைக்கும்.
-
லிமிடெட் (O) -ல் 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 10.2-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகள் உள்ளன.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை உள்ளன.
-
மெரிடியன் 2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் வருகிறது.
-
மற்ற வேரியன்ட்களின் விலை ரூ.24.99 லட்சம் முதல் ரூ.38.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
ஜீப் மெரிடியன் கார் 2024 அக்டோபரில் அப்டேட் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து FWD (ஃபிரன்ட்-வீல் டிரைவ்) மற்றும் AWD (ஆல்-வீல்-டிரைவ்) அமைப்புகளுடன் நான்கு வேரியன்ட்களில் வந்தது. AWD ஆப்ஷன் அதன் அறிமுகத்தின் போது ஃபுல்லி லோடட் ஓவர்லேண்ட் டிரிமுடன் மட்டுமே வழங்கப்பட்டது. இப்போது ஜீப் நிறுவனம் AWD செட்டப்பை கொண்ட லிமிடெட் (O) வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 36.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட் அக்டோபர் 2024 அப்டேட்டுக்கு முன் AWD ஆப்ஷன் உடன் கிடைத்தது.
ஹூட் டீக்கால், சைட் பாடி டீக்கால் மற்றும் புரோகிராம் செய்யக்கூடிய ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மெரிடியனின் அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கும் ஆக்ஸசரி பேக்கை ஜீப் அறிமுகப்படுத்தியுள்ளது.
மெரிடியன் லிமிடெட் (O): பவர்டிரெய்ன்
AWD ஆப்ஷனை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் மெரிடியன் லிமிடெட் (O) ஆனது மெரிடியன் வரிசையில் டாப்-ஸ்பெக் ஓவர்லேண்ட் வேரியன்ட்டிற்கு பிறகு FWD மற்றும் AWD அமைப்புகளை பெறும் இரண்டாவது வேரியன்ட் ஆக மாறியுள்ளது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
2 லிட்டர் டீசல் |
பவர் |
170 PS |
டார்க் |
350 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு மேனுவல் / 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் |
டிரைவ்டிரெய்ன் |
FWD / AWD |
மேலும் படிக்க: பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாகவுள்ள கியா, மஹிந்திரா மற்றும் எம்ஜி கார்களின் விவரங்கள் இங்கே
மெரிடியன் லிமிடெட் (O): வசதிகள் மற்றும் பாதுகாப்பு
ஜீப் மெரிடியன் அதன் அடிப்படை வேரியன்ட்டிலிருந்தே வசதிகளை பெறும் வசதிகள் நிறைந்த கார் ஆகும். ஹையர்-ஸ்பெக் லிமிடெட் (O) டிரிம் 10.2-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 9-ஸ்பீக்கர் ஆல்பைன் ஆடியோ சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜியுடன் வருகிறது. இது 8-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஒரு பவர்டு டெயில்கேட், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் டூயல் ஜோன் ஏசி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றுடன் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது.
மெரிடியன் லிமிடெட் (O): விலை மற்றும் போட்டியாளர்கள்
லிமிடெட் (O) வேரியன்ட் உடன் கிடைக்கும் அனைத்து ஆப்ஷன்களின் விலை விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
விலை |
லிமிடெட் (O) MT FWD |
ரூ.30.79 லட்சம் |
லிமிடெட் (O) AT FWD |
ரூ.34.79 லட்சம் |
லிமிடெட் (O) AT AWD (புதியது) |
ரூ.36.79 லட்சம் |
ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட FWD ஐ விட AWD பதிப்பு ரூ.2 லட்சம் விலை அதிகம். மற்ற வேரியன்ட்களின் விலை விவரங்கள் ரூ.24.99 லட்சம் முதல் ரூ.38.49 லட்சம் வரை உள்ளது.
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
ஜீப் மெரிடியன் ஆனது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், மற்றும் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி -களுக்கு போட்டியாக உள்ளது.