சன்ரூஃப் உடன் Hyundai Venue S(O) பிளஸ் வேரியன்ட் ரூ.10 லட்சத்துக்கு விற்பனைக்கு வந்துள்ளது
published on ஆகஸ்ட் 02, 2024 06:33 pm by dipan for ஹூண்டாய் வேணு
- 50 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய வேரியன்ட் காரணமாக சன்ரூஃப் கொண்ட வென்யூ எஸ்யூவியானது ரூ. 1.05 லட்சம் விலை குறைவாக கிடைக்கிறது.
-
ஹூண்டாய் இப்போது சன்ரூஃப் உடன் மிட்-ஸ்பெக் S(O) பிளஸ் வேரியன்ட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது முன்பு SX வேரியன்ட்டிற்கு மட்டுமே கிடைத்தது
-
இது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
வரிசையில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
-
இந்த புதிய வேரியன்ட் ஆனது 8-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் மேனுவல் ஏசியின் S(O) வேரியன்ட்டில் உள்ள வசதிகளை கொண்டுள்ளன.
-
6 ஏர்பேக்ஸ், ஒரு TPMS மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
-
ஹூண்டாய் வென்யூவின் விலையானது ரூ.7.94 லட்சம் முதல் ரூ.13.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும்.
ஹூண்டாய் வென்யூ ஆனது ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் சன்ரூஃப் கொண்ட புதிய மிட்-ஸ்பெக் S(O) பிளஸ் வேரியன்ட் உடன் வேரியன்ட் பட்டியல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. S(O) மற்றும் SX வேரியன்ட்டுகளுக்கு இடையே உள்ள இந்த வேரியன்ட் கிடைக்கும். இதனால் சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்ட் ரூ.1.05 லட்சம் வரை குறைவாக இப்போது கிடைக்கும். இருப்பினும் இது மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் நேச்சுரல்-ஆஸ்பிரேட்டட் இன்ஜினுடன் மட்டுமே வருகிறது. இந்த புதிய வேரியன்ட் வழங்கும் அனைத்தையும் இங்கே பார்ப்போம்:
வென்யூ S(O) பிளஸ் வேரியன்ட்டில் புதிதாக என்ன இருக்கிறது?
இப்போது ஹூண்டாய் எஸ்யூவியின் வரிசையில் சன்ரூஃப் கொண்ட ஹூண்டாய் வென்யூ S(O) பிளஸ் மிகவும் குறைவாக விலையில் கிடைக்கிறது. S(O) வேரியன்ட்டில் உள்ள அனைத்தையும் இது பெறுகிறது. ஆனால் இந்த புதிய சேர்க்கையால் முந்தையதை விட ரூ.12,000 மட்டுமே அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆட்டோ-எல்இடி ஹெட்லைட்கள், முன்புறத்தில் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் இணைக்கும் பார் வடிவமைப்புடன் எல்இடி டெயில் லைட் ஆகியவற்றை இது கொண்டிருக்கிறது. S(O) வேரியன்ட்டுடன் வழங்கப்படும் 15-இன்ச் ஸ்டீல் வீல்கள் மற்றும் பாடி கலர்டு எக்ஸ்ட்டீரியர் ரியர்வியூ மிரர்ஸ் (ORVMs) ஆகியவற்றை இது அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
வென்யூ S(O) பிளஸ் வேரியன்ட் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜினுடன் மட்டுமே வருகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 83 PS பவரையும், 114 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். கூடுதலாக வேறு சில வேரியன்ட்களில் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் (120 PS/172 Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS/250 Nm) ஆப்ஷன் கிடைக்கும். டர்போ-பெட்ரோல் யூனிட்டை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆப்ஷனுடன் கிடைக்கும், டீசல் 6-ஸ்பீடு MT உடன் மட்டுமே கிடைக்கிறது.
மேலும் படிக்க: Hyundai Grand i10 Nios கார் இப்போது டூயல் CNG சிலிண்டர்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது
இன்ட்டீரியரில் வழக்கமான இடத்தில் இருந்து வொயிட் மற்றும் பிளாக் தீம் உள்ளது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி, செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, சிங்கிள்-பேன் சன்ரூஃப், உயரத்தை சரி செய்து கொள்ளக்கூடிய ஓட்டுநர் இருக்கை மற்றும் மேனுவல் ஏசி ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் 8 இன்ச் டச் ஸ்கிரீனை இது கொண்டுள்ளது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் போட்டியாளர்கள்
மற்ற வேரியன்ட்களின் விலையானது இந்தப் அப்டேட்டால் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த காரின் விலை விலை ரூ. 7.94 லட்சத்தில் இருந்து ரூ. 13.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை இருக்கும். இந்த எஸ்யூவி -யானது கியா சோனெட், மஹிந்திரா XUV 3XO, டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி ஆகியவற்றுடன் போட்டியிடும். மேலும் சப் -4மீ கிராஸ்ஓவர்களான டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹூண்டாய் வென்யூ ஆன் ரோடு விலை