Hyundai Grand i10 Nios இப்போது டூயல் CNG சிலிண்டர்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது, விலை 7.75 லட்சம் ஆக நிர்ணயம்
published on ஆகஸ்ட் 05, 2024 05:43 pm by samarth for ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்
- 109 Views
- ஒரு கருத்தை எழுதுக
டூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் சிங்கிள் சிலிண்டர் CNG வேரியன்ட்களை விட விலை ரூ.7,000 கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
-
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸில் டூயல் சிலிண்டர் CNG செட்-அப் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்ற இரண்டு மிட்-ஸ்பெக் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.
-
இந்த ஸ்பிலிட்-சிலிண்டர் CNG டெக்னாலஜியை கொண்ட எக்ஸ்டருக்குப் பிறகு ஹேட்ச்பேக் இரண்டாவது ஹூண்டாய் மாடலாக இது உள்ளது.
-
டூயல் சிலிண்டர் CNG சிஸ்டம் பயணத்தின்போது பெட்ரோல் மற்றும் CNG மோடுகளுக்கு இடையே தடையின்றி மாறிக்கொள்ள டிரைவர்களை அனுமதிக்கிறது.
-
69 PS 1.2 லிட்டர் பெட்ரோல்+CNG பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.
-
கிராண்ட் i10 நியோஸுக்கான விலை ₹5.92 லட்சத்தில் தொடங்கி ₹8.56 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ், ஹூண்டாய் எக்ஸ்டரை தொடர்ந்து புதிய டூயல் சிலிண்டர் CNG ஆப்ஷனை கொண்ட கார் தயாரிப்பாளரின் இந்திய வரிசையில் இரண்டாவது மாடலாக மாறியுள்ளது. இந்த ஸ்பிளிட்-சிலிண்டர் செட்-அப் அதிக பூட் ஸ்பேஸை மற்றும் ஒருங்கிணைந்த எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட் (ECU) உதவியுடன், பயணத்தின்போது பெட்ரோல் மற்றும் CNG மோடுகளுக்கு இடையே எளிதாக மாறுவதற்கு டிரைவரை அனுமதிக்கிறது. இந்த டெக்னாலஜி அதன் இரண்டு மிட்-ஸ்பெக் வேரியன்ட்களான மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸில் கிடைக்கிறது. இந்த இரண்டு வேரியன்ட்களின் விலையை பார்ப்போம்:
வேரியன்ட் வாரியான விலை
வேரியன்ட் |
பழைய விலை (சிங்கிள் CNG சிலிண்டருடன்) |
புதிய விலை (டூயல் CNG சிலிண்டர்களுடன்) |
வித்தியாசம் |
மேக்னா |
ரூ. 7.68 லட்சம் |
ரூ. 7.75 லட்சம் |
+ ரூ. 7000 |
ஸ்போர்ட்ஸ் |
ரூ. 8.23 லட்சம் |
ரூ. 8.30 லட்சம் |
+ ரூ. 7000 |
கிராண்ட் i10 நியோஸில் ஸ்பிலிட்-சிலிண்டர் தொழில்நுட்பத்திற்கு வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ. 7,000 செலுத்த வேண்டும். எக்ஸ்டர் மைக்ரோ-எஸ்யூவி-யின் டூயல் சிலிண்டர் வேரியன்ட்களுக்கும் இதே போன்ற விலை உயர்வைக் பெற்றுள்ளன.
கூடுதலாக கிராண்ட் i10 நியோஸின் CNG வேரியன்ட்களுக்கு 3 ஆண்டு உத்தரவாதத்தை வழங்குகிறது.
CNG பவர்டிரெய்ன்
கிராண்ட் i10 நியோஸ் CNG-யின் பவர்டிரெயினில் எந்த மாற்றமும் இல்லை. டெக்னிக்கலாக அவற்றில் உள்ள மாற்றங்கள் இதோ:
விவரங்கள் |
கிராண்ட் i10 நியோஸ் CNG |
இன்ஜின் |
1.2 லிட்டர் பெட்ரோல்+CNG |
பவர் |
69 PS |
டார்க் |
95 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
வழக்கமான பெட்ரோல் வேரியன்ட் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT ஆப்ஷனுடன் 83 PS 1.2-லிட்டர் பெட்ரோல் இஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
CNG வேரியன்ட் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்களில் வழங்கப்படுவதால் இந்த இரண்டு டிரிம்களின் ஹைலைட்ஸ் இங்கே: ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி, கீலெஸ் என்ட்ரி மற்றும் செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே.
பயணிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்த வேரியன்ட்களில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் விலை ₹5.92 லட்சம் முதல் ₹8.56 லட்சம் வரை உள்ளது (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) மேலும் மாருதி ஸ்விஃப்ட்டுடன் போட்டியிடுகிறது. இது ஹூண்டாய் எக்ஸ்டர் CNG-க்கு விலை குறைவான மாற்றாக இது இருக்கும்.
அனைத்து சமீபத்திய ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கும் கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
மேலும் படிக்க: ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் AMT
0 out of 0 found this helpful