• English
  • Login / Register

டீசல் இன்ஜினோடு மார்க்கெட்டை கலக்கும் ஹூண்டாய் வென்யூ, கிரெட்டா, அல்கஸார் மற்றும் டுக்ஸான் கார்கள்

published on செப் 08, 2023 02:31 pm by tarun for ஹூண்டாய் வேணு

  • 31 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டீசல் கார்களை விரும்புபவர்கள் தொடர்ந்து குறைந்து வந்தாலும், ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்யூவி வரிசையில் டீசல் மாடல்களை வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வழங்குகிறது.

Hyundai Venue, Creta, Alcazar, and Tucson Still Going Strong On Diesel

  • ஹூண்டாய் இந்தியா தலைமை இயக்கு அலுவலர், தருண் கார்க், தங்கள் நிறுவனத்தின் டீசல் கார்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

  • வென்யூ -வின் விற்பனையில் 21 சதவீதம் டீசல் மாடலை வாங்குபவர்களாக உள்ளனர், அதே சமயம் கிரெட்டாவில் அது 42 சதவீதமாக உள்ளது.

  • பெரும்பான்மையான வாடிக்கையாளார்கள் அல்கஸார் மற்றும் டுக்ஸான் கார்களின் டீசல் வேரியன்ட்களையே விரும்புகிறார்கள்

  • வென்யூ, கிரெட்டா மற்றும் அல்கஸார் ஆகியவை அதே 1.5-லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகின்றன, அதே சமயம் டியூசன் 2-லிட்டர் யூனிட்டை பெறுகிறது.

  • ஹூண்டாய் எதிர்காலத்தில் மின் வாகனங்களுடன் (EV) அதிக டீசல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மாசு உமிழ்வு விதிமுறைகள் கடுமையாகி வருவதால், கார் உற்பத்தியாளர்கள் தாங்கள் டீசல் இன்ஜின்களில் இருந்து மெதுவாக விலகி வருகின்றனர். இருப்பினும், ஹோண்டாய் அதன் பெரிய கார்களுக்கு டீசல் ஆப்ஷனை வழங்குவதில் பிடிவாதமாக உள்ளது, அதாவது, எஸ்யூவிகளுக்கு, அது இன்னும் வலுவான கிராக்கி இருப்பதை உணர்த்துகிறது.

ஹூண்டாய் இந்தியாவின் தலைமை இயக்கு அலுவலர், தருண் கார்க், சமீபத்திய அறிக்கையில்,  வென்யூ, கிரெட்டா, அல்கஸார் மற்றும் டுக்ஸான் ஆகிய மாடல்களுக்கு இடையே பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளார்.

 

மாடல்

 

டீசல் விற்பனை

 

பெட்ரோல் விற்பனை

 

ஹூண்டாய் வென்யூ

 

21 சதவீதம்

 

79 சதவீதம்

 

ஹூண்டாய் கிரெட்டா

 

42 சதவீதம்

 

58 சதவீதம்

 

ஹூண்டாய் அல்கஸார்

 

66 சதவீதம்

 

34 சதவீதம்

 

ஹூண்டாய் டுக்ஸான்

 

61 சதவீதம்

 

39 சதவீதம்

பெரிய எஸ்யூவிகளில் டீசல் இன்ஜின் இருப்பது இன்னும் மக்களிடையே வரவேற்பு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. வலுவான ஆரம்ப டார்க்  மற்றும் டீசல் காரின் கூடுதல் மைலேஜ் திறன் ஆகியவை அடிக்கடி நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் வாடிக்கையார்களையும் மற்றும் தங்கள் எஸ்யூவி -களில் சாலையை தாண்டி கரடுமுரடான பாதைகளில் செல்பவர்களையும் இது ஈர்க்கிறது.

டீசல் சார்ந்த கார்களை வாங்குபவர்களைக் கொண்ட எஸ்யூவிகள் ஹூண்டாய்க்கு வால்யூம் டிரைவர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தேவை விகிதத்தில் கூட, அதே அறிக்கையின்படி பிராண்டின் விற்பனையில் டீசல் மாடல்கள் 20 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.

மேலும் படிக்க: சப்-4m எஸ்யூவி -யில் இப்படி ஒரு வசதியா... அசத்தும் Hyundai Venue

டீசல் கார்களை வழங்கும் இதர போட்டியாளர்கள்

ஹூண்டாய் வென்யூ -வை பொறுத்தவரை, டாடா நெக்ஸான், கியா சோனெட் மற்றும் மஹிந்திரா XUV300 ஆகியவை சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் டீசல் மோட்டார் தேர்வை வழங்குகின்றனஆனால் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் (அடிப்படையில் தோற்றத்திற்கு எதிராக இருக்கும் அதே கார்கள்) காம்பாக்ட் எஸ்யூவி களத்தில் டீசல் ஆப்ஷனின் ஏகபோக உரிமையை கொண்டுள்ளன.

ஹூண்டாய் அல்கஸார் மற்றும் ஹூண்டாய் டுக்ஸான் போன்ற பெரிய எஸ்யூவி -களுக்கு, டீசல் வேரியன்ட்களுக்கு அதிகமான கிராக்கி உள்ளது. டீசல் வேரியன்ட்களுக்கான காத்திருப்பு காலம் பெட்ரோலை விட அதிகமாக உள்ளது என்று அறிக்கை மேலும் கூறுகிறது, இது டீசல் கார்களுக்கான வலுவான கிராக்கியை வெளிப்படுத்துகிறது.

ஹூண்டாய் டீசல் இன்ஜின்கள்

 

மாடல்கள் 

 

வென்யூ, கிரெட்டா, மற்றும் அல்கஸார்

 

டுக்ஸான்

 இன்ஜின்

 

1.5-லிட்டர் டீசல்

 

2-லிட்டர் டீசல்

 

பவர்

115PS

186PS

 

டார்க்

250Nm

416Nm

வென்யூ டீசல்-மேனுவல் காம்பினேஷனை மட்டுமே பெறுகிறது, கிரெட்டா மற்றும் அல்கஸார் ஒரு ஆட்டோமெட்டிக் தேர்வையும் பெறுகின்றன. ஹூண்டாய் மூன்று மாடல்களுக்கும் ஒரே இன்ஜினை பயன்படுத்துவதால், அவற்றை எளிதாக அப்டேட் செய்ய முடியும்.

Hyundai Venue, Creta, Alcazar, and Tucson Still Going Strong On Diesel

மேலும் படிக்க: க்ரெட்டா இவி இந்தியாவிற்கான ஹூண்டாயின் முதல் வெகுஜன சந்தை எலக்ட்ரிக் காராக இருக்க முடியுமா?

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் i20 ஹேட்ச்பேக்குகள் போன்ற சிறிய கார்களில் டீசல் ஆப்ஷனை நிறுத்த வேண்டிய நிலை இருக்கும் போது, ஹூண்டாய் மேலும் டீசல் கார்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், உள்ளூர் உற்பத்திக்கான பெரிய முதலீடுகளுடன் தூய்மையான மாடல்கள் மற்றும் மின்சார வாகனங்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கும், சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது .

ஆதாரம்

மேலும் படிக்க: வென்யூ ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Hyundai வேணு

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience