• English
  • Login / Register

ஹூண்டாய் நிறுவனம் டாடா-பன்ச் எஸ்யூவியின் போட்டி காரான எக்ஸ்டரை அறிமுகப்படுத்துகிறது மேலும் முன்பதிவுகளையும் தொடங்குகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர் க்காக மே 09, 2023 05:05 pm அன்று tarun ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 27 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய மைக்ரோ எஸ்யூவி யின் இன்ஜின் ஆப்ஷன்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜூன் மாத இறுதிக்குள் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hyundai Exter

  • ஹூண்டாய் எக்ஸ்டர், வென்யு காருக்கு கீழே நிலைநிறுத்தப்படும்.

  • EX, S, SX, SX (O) மற்றும் SX (O) கனெக்ட் ஆகிய ஐந்து ட்ரிம்களில் கிடைக்கும்.

  • 6 சிங்கிள்-டோன் மற்றும் 3 டூயல்-டோன் வெளிப்புற வண்ண விருப்பங்கள் இதில் அடங்கும்.

  • அதன் 83PS 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஆற்றல் அளிக்கப்பட்டு , ஐந்து-வேக மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • சுமார் ரூ.6 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் விலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் தனது வரவிருக்கும் மைக்ரோ எஸ்யூவியான எக்ஸ்டரின் வெளிப்புற தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம், எக்ஸ்ட்டருக்கான முன்பதிவு இப்போது ரூ 11,000 டோக்கன் தொகைக்கு திறக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குள் அதன் விலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

Hyundai Exter

ஹூண்டாய் எக்ஸ்டர் ஒரு உறுதியான மற்றும் முக்கிய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. வலுவான பானெட், நேரான  முன்புற முகம்  மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகியவை அதற்கு சிறப்பான தோற்றத்தைக் கொடுக்கின்றன. முன்பக்க கிரில் தனித்துவமானது மற்றும் இந்தியாவில் எந்த ஹூண்டாய் காரிலும் காணப்படவில்லை. சதுர ஹெட்லேம்ப் கவரிங் மற்றும் பம்பரில் புரொஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் எச் வடிவ LED DRL போன்ற சில வடிவமைப்புகளும் இங்கே காணப்படுகின்றன.

ஒரு எஸ்யூவிக்கு இந்த முன்பக்கத் தோற்றம் போதுமானதாக இருக்காது என யோசித்தால் , அதன் பக்கவாட்டுத் தோற்றத்தைப்  பாருங்கள். நீட்டிய சக்கர வளைவுகள், பாடி கிளாடிங், வலுவான ஷோல்டர் லைன்கள்  மற்றும் ரூஃப் ரெயில்கள் போன்றவை எஸ்யூவி தோற்றத்தை உருவாக்க உதவுகின்றன. பின்புறத் தோற்றம்  வெளியிடப்படவில்லை, ஆனால் வெளியில் சோதனையின் போது தென்பட்டது, மேலும் இது H வடிவ கூறுகள் மற்றும் பாடி கிளாடிங்-ஒருங்கிணைந்த பம்பர் ஆகியவற்றுடன் அதே நேரான வடிவத்தை பெறும்.

மேலும் படிக்கவும்: அனைத்து ஹூண்டாய் கார்களுக்கும்  சிறிய ஆனால் முக்கியமான பாதுகாப்பு மேம்படுத்தல் அம்சம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது

ஹூண்டாய்எக்ஸ்டர் கார் 6 மோனோடோன் மற்றும் 3 டூயல் டோன் வெளிப்புற நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யூவி, காஸ்மிக் ப்ளூ மற்றும் ரேஞ்சர் காக்கி விருப்பங்களை (டூயல்-டோன் ஷேடுடன்) பெறும், இது பிராண்ட்டின் தயாரிப்பு வரிசைக்கு முற்றிலும் புதியதாகும்.

Hyundai Exter spied

உட்புறம் மற்றும் அம்ச பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் பிரீமியம் மற்றும் அம்சங்கள் நிறைந்த கேபினை எதிர்பார்க்கலாம். பெரிய டச் ஸ்கிரீன் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ் கன்ட்ரோல் , அதிகபட்சமாக ஆறு ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும்.

ஹூண்டாய் எக்ஸ்டரின் பவர்டிரெயின் விருப்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 83PS மற்றும் 114PS ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இது இயக்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT மூலம் டிரான்ஸ்மிஷன் நடைபெறும். 5 ஸ்பீடு மேனுவல் ஸ்டிக் கொண்ட சிஎன்ஜி ஆப்ஷனும் இதனுடன் கிடைக்கும்.

மேலும் படிக்கவும்: ஹூண்டாய் வெர்னா டர்போ DCT  Vs ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் வோல்க்ஸ்வேகன் வெர்ச்சுஸ் 1.5 DSG: நிஜ உலக எரிபொருள் செயல்திறன் ஒப்பீடு

ஹூண்டாய் எக்ஸ்டர் EX, S, SX, SX (O), and SX (O) கனெக்ட் ஆகிய ஐந்து டிரிம்களில் கிடைக்கும். சுமார் ரூ.6 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் விலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர்  மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும் போது டாடா பன்ச் மற்றும் சிட்ரோன்  C3 உடனும் போட்டியிடும்.

was this article helpful ?

Write your Comment on Hyundai எக்ஸ்டர்

1 கருத்தை
1
S
sanjeev
May 11, 2023, 5:38:50 PM

Available in CNG?

Read More...
    பதில்
    Write a Reply

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • டாடா சீர்ரா
      டாடா சீர்ரா
      Rs.10.50 லட்சம்Estimated
      செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • நிசான் பாட்ரோல்
      நிசான் பாட்ரோல்
      Rs.2 சிஆர்Estimated
      அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • எம்ஜி majestor
      எம்ஜி majestor
      Rs.46 லட்சம்Estimated
      ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • டாடா harrier ev
      டாடா harrier ev
      Rs.30 லட்சம்Estimated
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • vinfast vf3
      vinfast vf3
      Rs.10 லட்சம்Estimated
      பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
    ×
    We need your சிட்டி to customize your experience