சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதுப்பொலிவுடன் கூடிய ஹூண்டாய் ஆரா-இன் திரைவிலகியது; முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது.

tarun ஆல் ஜனவரி 12, 2023 05:22 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
22 Views

இந்த கச்சிதமான துணை செடான் வாகனத்தில் வெளிப்புறத்தோற்றம் புதிய அம்சங்களோடு ஜொலிக்கிறது

  • மேம்படுத்தப்பட்ட ஆரா சற்றே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் ஒரு புதிய முன்புறத் தோற்றத்தை பெறுகிறது: பக்கவாட்டிலும் பின்புறத்தோற்றத்திலும் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

  • உட்புறத்தில் ஒரு வெளிர் சாம்பல் நிற அப்ஹோல்ஸ்ட்ரியைத் தவிர வேறு எந்த ஒரு மாற்றமுமில்லாமல் அதே தோற்றத்தைக் கொண்டிருக்கிறது.

  • இதில் காலடி விளக்குகள், ஒரு அனலாக் கருவித் தொகுப்பு, USB C டைப் ஃபாஸ்ட் சார்ஜர், ஆட்டோ முகப்பு விளக்குகள் ஆகியவை கூடுதலாக அமைந்திருக்கிறது.

  • இப்போது வழக்கமான நான்கு ஏர் பேக்குகள் அமையப்பெற்றிருக்கும்; மேலும் ஆறு ஏர்பேக்குகளின் விருப்பத்தேர்வு, ESC ஹில் ஸ்டார்ட் அஸ்சிஸ்ட் மற்றும் டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு ஆகியவையும் கிடைக்கும்.

  • அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG என்ஜின்களைக் கொண்டுள்ளது.

அத்துடன் சேர்த்து புதுப்பொலிவுடன் கிராண்ட் i10 நியோஸ், மேம்படுத்தப்பட்ட ஆரா செடானையும் ஹூண்டாய் அறிமுகப்படுத்துகிறது. ரூ. 11,000 -க்கு அதிகாரப்பூர்வமான முன்பதிவுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மற்றும் அதற்கான விலை விரைவிலேயே அறிவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேம்படுத்தப்பட்ட கவர்ச்சிகரமான வெளிப்புறத் தோற்றம்

மேம்படுத்தப்பட்ட பொலிவான முன்புறத் தோற்றத்துடன் கூடிய ஆரா, அதன் புதிய கிரில் அமைப்பு, பம்பர் மற்றும் LED DRL வடிவமைப்புடன் அதன் முந்தைய பொலிவூட்டப்பட்ட பதிப்பை விட குறிப்பிடத் தகுந்த வகையில் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அதற்கு ஒரு ஸ்போர்டியர் தோற்றத்தையும் அளிக்கின்றன. அதுவே அதன் சிறப்பு. அதன் பக்கவாட்டுத் தோற்றம் மற்றும் பின்புற அமைப்பு எந்த ஒரு மாற்றமுமில்லாமல் அமைந்திருக்கிறது.

உள்ளமைப்பில் புதியது என்ன?

ஒரு புதிய வெளிர் சாம்பல் நிற அப்ஹோல்ஸ்ட்ரியை தவிர வேறு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் உட்புற டியூயல் டோன் தோற்றம் அப்படியே அமைந்திருக்கிறது.

புதிய சாதனங்கள் கூடுதலாக அமைந்துள்ளது!

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, மேம்படுத்தப்பட்ட ஆராவில் காலடி விளக்குகள், 3.5 இன்ஞ் MID உடன் ஒரு அனலாக் கருவித் தொகுப்பு, (புதுப்பித்தலுக்கு முந்தைய CNG மற்றும் மேக்னா பதிப்புக்களில் அமைந்துள்ளன) USB C டைப் ஃபாஸ்ட் சார்ஜர், ஆட்டோ முகப்பு விளக்குகள் ஆகியவை அமையப்பெற்றிருக்கின்றன. 8-இன்ஞ் தொடு திரை அமைப்பு, (ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே) வயர்லெஸ் சார்ஜர், க்ரூய்ஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப், மற்றும் ஆட்டோமேட்டிக் AC போன்ற வழக்கமான சிறப்பம்சங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

மேலும் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள்

புதுப்பொலிவுடன் கூடிய ஹூண்டாய் ஆரா வழக்கம்போல் நான்கு ஏர் பேக்குகளைக் கொண்டுள்ள அதே சமயம் மேம்பட்ட சிறப்புக் கூறுகளுடன் கூடிய SX(O) பதிப்புக்களில் ஆறு ஏர் பேக்குகள் அமைந்திருக்கின்றன. அவற்றைத் தவிர, கூடுதலாக அமையப் பெற்ற ஒரு பின்புற பார்க்கிங் காமிரா மற்றும் ISOFIX சீட் ஆங்க்கரேஜஸ்களுடன், ESC (எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்), ஹில் ஸ்டார்ட் அஸ்சிஸ்ட், மற்றும் டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு ஆகியவையும் அமைந்திருக்கின்றன.

ஏதாவது இயந்திர இயக்கமுறை மாற்றங்கள் உள்ளனவா?

எதுவுமில்லை. மேம்படுத்தப்பட்ட ஆரா அதன் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG என்ஜின்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 83PS மற்றும் 113 Nm தரமதிப்பீட்டை பெற்றிருக்கிறது மற்றும் ஐந்து படிநிலை கைவினை வேகம் மற்றும் AMT வேகக் கடத்தி வசதிகளின் விருப்பத்தேர்வைக் கொண்டுள்ளன. வழக்கமான ஐந்து படிநிலை கைவினை வேக அமைப்பைக் கொண்ட இந்த CNG ஒரு டாப்பில் 69PS மற்றும் 95Nm -ஐ எட்டும் என்று அறிவிக்கிறது. இதன் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இப்போதைக்கு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எதிர்பார்க்கப்படும் விலைகள் மற்றும் போட்டியாளர்கள்

இந்த புதிய மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஆரா இதற்கு முந்தைய மாடலுக்கு மேலாக ரூ. 6.20 இலட்சத்திலிருந்து 8.97 இலட்சம் வரை ( எக்ஸ் ஷோ ரூம் டெல்லி) சிறப்பு விலைக்கான தகுதியைப் பெறும். இது ஹோண்டா அமேஸ் மற்றும் டாட்டா டைகோர் ஆகியவற்றுக்கு போட்டியாகத் திகழும்.

மேலும் படிக்கவும்: ஹூண்டாய் ஆரா AMT

Share via

Write your Comment on Hyundai ஆரா

மேலும் ஆராயுங்கள் on ஹூண்டாய் ஆரா

ஹூண்டாய் ஆரா

4.4201 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி22 கிமீ / கிலோ
பெட்ரோல்17 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.1.70 - 2.69 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.6.54 - 9.11 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.12.28 - 16.65 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை