Hyundai Grand i10 Nios சிஎன்ஜி வேரியன்ட்டின் முழுமையான விவரங்கள்
published on ஆகஸ்ட் 27, 2024 04:01 pm by samarth for ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்
- 38 Views
- ஒரு கருத்தை எழுதுக
இங்கே உள்ள விரிவான கேலரியில் அதன் டூயல் சிலிண்டர் CNG செட்டப்பை கொண்ட கிராண்ட் i10 நியோஸ் -ன் ஹையர்-ஸ்பெக் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டை நாங்கள் விவரித்துள்ளோம்.
எக்ஸ்டெர் சிஎன்ஜி -யில் காணப்படுவது போல் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் சிஎன்ஜி கார் சமீபத்தில் ஸ்பிளிட்-சிலிண்டர் அமைப்புடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மிட்-ஸ்பெக் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியன்ட்களில் இது கிடைக்கிறது. இங்கே உள்ள விரிவான கேலரியில் புதிய செட்டப் உடன் வரும் ஹையர்-ஸ்பெக் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டை விரிவாக பார்க்கலாம்.
முன்பக்கம்
இங்கே மேலே உள்ள படத்தில் உள்ள வேரியன்ட் அட்லஸ் ஒயிட் கலரில் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் LED DRL -களுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட்கள் உடன் வருகிறது. ஹூண்டாய் பிராண்டின் லோகோ கிரில்லுக்கு மேலே உள்ளது. சாடின்-குரோம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டு தோற்றம்
பக்கவாட்டில் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் பகட்டான கவர்களுடன் 15-இன்ச் டூயல்-டோன் ஸ்டீல் வீல்களுடன் வருகிறது. ORVM -கள் மற்றும் டோர் ஹேண்டில்கள் பாடி கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. ORVM -களில் டர்ன் இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பக்கவாட்டு ரூஃப் ரெயில்களுக்கு டார்க் கிரே ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஹேட்ச்பேக்கிற்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது.
மேலும் பார்க்க: ஹூண்டாய் எக்ஸ்டெர் டூயல் சிலிண்டர் சிஎன்ஜி வேரியன்ட் படங்களில் விளக்கப்பட்டுள்ளது
பின்புறம்
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் மாடலில் கனெக்டட் LED டெயில் லைட்களுடன் வந்தாலும் கூட மையப் பகுதி ஒளிரவில்லை. இந்த வேரியன்ட்டில் பின்புற டிஃபோகர் உள்ளது. ஆனால் வைப்பர் மற்றும் வாஷர் இல்லை. இது பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் உடன் வருகிறது. டெயில்கேட்டில், 'ஹை-சிஎன்ஜி டியோ' பேட்ஜ் தெரியும் வகையில் உள்ளது இது டூயல் சிலிண்டர் அமைப்பு காரில் இருப்பதை காட்டுகிறது..
பூட் ஸ்பேஸ் மற்றும் சிஎன்ஜி கிட்
பூட் பகுதியில் உள்ள புதிய CNG செட்டப் இரட்டை சிலிண்டர்கள் தரைக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளன. ஆகவே முழு பூட் பகுதியையும் பயன்படுத்தும் வகையில் கூடுதல் லக்கேஜ் இடம் கிடைக்கிறது. இந்த வடிவமைப்பு போதுமான பூட் பகுதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது, வார இறுதி பயணத்திற்கு சாமான்களை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதாக இருக்கிறது. கூடுதலாக இந்த செட்டப் உடன் ஹூண்டாய் ஸ்பேர் வீல் -க்கு பதிலாக பஞ்சர் ரிப்பேர் கிட்டை கொடுத்துள்ளது வழங்குகிறது.
இன்ட்டீரியர்
கேபினுக்குள் முன்பக்கத்தில் இண்டெகிரேட்டட் ஹெட்ரெஸ்ட்கள் உடன் பெய்ஜ் கலர் சீட்கள் உடன் டூயல்-டோன் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான சமயங்களில் உதவியாக இருக்கும் என்பதற்காக ஹூண்டாய் நிறுவனம் முன் பயணிகள் இருக்கைக்கு கீழே தீயை அணைக்கும் கருவியை கொடுத்துள்ளது. பின் இருக்கைகளில் இரண்டு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்களும் உள்ளன.
இந்த வேரியன்ட் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
பாதுகாப்புக்காக இது ஆறு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயின்ட் சீட் பெல்ட் ஆகியவற்றைப் பெறுகிறது.
பவர்டிரெய்ன்
கிராண்ட் i10 நியோஸ் -ன் CNG வேரியன்ட்டின் விரிவான பவர்டிரெய்ன் விவரங்கள்கள் இங்கே:
விவரங்கள் |
கிராண்ட் i10 நியோஸ் CNG |
இன்ஜின் |
1.2 லிட்டர் பெட்ரோல்+CNG |
பவர் |
69 PS |
டார்க் |
95 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் -ன் விலை ரூ.8.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆக உள்ளது. மாருதி ஸ்விஃப்ட் உடன் நேரடியாக இது போட்டியிடும். மேலும் ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி காருக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் AMT
0 out of 0 found this helpful