Honda Elevate மிட்-ஸ்பெக் V வேரியன்ட்டை 6 படங்களில் விரிவாக இங்கே பார்க்கலாம்
published on ஆகஸ்ட் 31, 2023 05:18 pm by shreyash for ஹோண்டா எலிவேட்
- 43 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா எலிவேட்டின் மிட்-ஸ்பெக் V டிரிம் காம்பாக்ட் எஸ்யூவி -யின் என்ட்ரி-லெவல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ஆகும்.
ஹோண்டா எலிவேட் காம்பாக்ட் எஸ்யூவி -களின் போரில் நுழைய தயாராக உள்ளது, மேலும் அதன் முன்பதிவுகள் ஏற்கனவே ரூ. 5,000க்கு தொடங்கிவிட்டன. ஹோண்டா செப்டம்பர் 4 ஆம் தேதி இதன் விலையை அறிவிக்கும். அதற்கு முன்னதாக, யூனிட்கள் ஏற்கனவே ஹோண்டா டீலர்ஷிப்களுக்கு வந்துவிட்டன.
எலிவேட் நான்கு டிரிம்களில் கிடைக்கும் என்றாலும், இந்தக் கதையில், எலிவேட்டின் ஒரு பேஸ்க்கு-மேல் நிலையில் உள்ள V டிரிம்களை ஆறு படங்களில் விவரித்துள்ளோம்.
முகப்புத் தோற்றத்துடன் ஆரம்பிக்கலாம். இந்த மிட்-ஸ்பெக் V கார் ஒரு குரோம் பட்டை மூலம் இணைக்கப்பட்ட LED ஹெட்லைட்களைக் கொண்டுள்ளது. டாப்-எண்ட் வகையில் உள்ள அதே அற்புதமான கிரில்லைக் கொண்டிருந்தாலும், இது ஃபாக் லேம்புகளைப் பெறாது. எஸ்யூவியின் முன்பக்கத்தில் வேறு எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிகிறது.
தோற்றத்தில், எலிவேட்டின் இந்த குறிப்பிட்ட வேரியன்ட் அலாய் சக்கரங்களைக் கொண்டிருக்கவில்லை, அதற்குப் பதிலாக 16-இன்ச் ஸ்டீல் வீல்களில் பிளாஸ்டிக் கவர்களுடன் இருக்கிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க குறைபாடு ரூஃப் ரெயில்கள். இருப்பினும், இது இன்னும் ORVM-மவுண்டட் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் பாடி கலர்டு கதவு கைப்பிடிகளைப் பெறுகிறது. மாறாக, டாப்-ஸ்பெக் எலிவேட் வேரியன்ட் குரோம் கதவு கைப்பிடிகள் மற்றும் டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
பின்புறத்தில் இருந்து, எலிவேட்டின் V வேரியன்ட்கார் LED டெயில் லேம்புகள் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனாவுடன் வருகிறது, ஆனால் பின்புற வைப்பர் இல்லை.
இதையும் படியுங்கள்: Honda Elevate எதிர்பார்க்கப்படும் விலை: போட்டியாளர்களை விட குறைவாக கிடைக்குமா?
டாப்-ஸ்பெக் எலிவேட்டின் பிரெளவுன் உட்புறத்திற்கு மாற்றாக, ஹோண்டா எஸ்யூவியின் V வேரியன்ட் கார் கருப்பு மற்றும் பீஜ் தீம் கொண்டுள்ளது. இது 8-இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது, இது ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களில் வழங்கப்படும் யூனிட்டை விட சிறியது. இருப்பினும், இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஹையர் வேரியன்ட்களில் காணப்படும் 7-இன்ச் செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளேவுக்கு மாறாக, மையத்தில் ஒரு சிறிய MID உடன் மிகவும் அடிப்படையான அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுகிறது.
பின்புற AC வென்ட்கள், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கட்டுப்பாடுகள், டூயல் ஏர்பேக்குகள் மற்றும் ரியர்வியூ கேமரா கொண்ட ஆட்டோமெட்டிக் ACஆகியவை போர்டில் உள்ள மற்ற அம்சங்களாகும். சிங்கிள்-பேன் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற அம்சங்கள் அனைத்தும் ஹையர் எண்ட் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
பவர்டிரெயின்கள் விவரம்
ஹோண்டா எலிவேட், சிட்டியின் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 121PS மற்றும் 145Nm ஐ உருவாக்குகிறது மேலும் 6 வேக மேனுவல் அல்லது CVT உடன் இணைக்கப்படும். இதன் மைலேஜை பொறுத்தவரையில் மேனுவலுக்கு 15.31கிமீ/லி மற்றும் CVTக்கு 16.92கிமீ/லி தருகின்றன.
எதிர்பார்க்கப்படும் விலை
ஆகவே இவைதான் ஹோண்டா எலிவேட் மிட்-ஸ்பெக் V வேரியன்ட்டின் ஆறு முதன்மையான விவரங்கள். இதன்எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11 லட்சம் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இது ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
0 out of 0 found this helpful