Honda Amaze குளோபல் NCAP க்ராஷ் டெஸ்ட் விவரங்கள் ஒப்பீடு: பழையது மற்றும் புதியது
published on ஏப்ரல் 24, 2024 06:02 pm by shreyash for ஹோண்டா அமெஸ்
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சோதனையின் போது ஹோண்டா அமேஸ் 4 நட்சத்திரங்களைப் பெற்றது. ஆனால் சமீபத்திய கிராஷ் டெஸ்ட் சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (AOP) 2 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது. அதற்கான காரணம் என்பது இங்கே…
குளோபல் NCAP அமைப்பால் நடத்தப்பட்ட கடைசித் தொகுதி கார் கிராஷ் டெஸ்ட்களில் சமீபத்திய இந்தியா-ஸ்பெக் ஹோண்டா அமேஸ் காரும் ஒன்றாக இருந்தது. கிராஷ் டெஸ்ட்களின் முடிவுகள் வெளிவந்துள்ளன ஆனால் அமேஸ் கார் அவ்வளவு சிறப்பான மதிப்பெண்கள் எதையும் பெறவில்லை. சப்-4 மீட்டர் செடான் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (AOP) 2 நட்சத்திரங்களையும், குழந்தைகளின் பாதுகாப்பில் (COP) பூஜ்ஜிய நட்சத்திரங்களையும் மட்டுமே பெற்றுள்ளது. முன்னதாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் அமேஸ் 2019 ஆம் ஆண்டில் குளோபல் NCAP ஆல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட போது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களைப் பெற்றது. 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான ஹோண்டா அமேஸின் கிராஷ் டெஸ்ட் முடிவுகளை இங்கே ஒப்பிடுவோம்.
ஒவ்வொரு கிராஷ் டெஸ்ட் விவரங்களையும் பார்க்கும் முன் பல ஆண்டுகளாக ஹோண்டா அமேஸ் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
ஹோண்டா அமேஸ்: அப்போது மற்றும் இப்போது
2013 ஆண்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் கொண்ட ஹோண்டா அமேஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் டூயல் முன் ஏர்பேக்குகள் மற்றும் ABS உடன் EBD போன்ற பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் இரண்டாம் தலைமுறை அமேஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பிற சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த அமேஸ் 2019 ஆம் ஆண்டில் குளோபல் NCAP ஆல் கிராஷ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (AOP) 4 நட்சத்திரங்களையும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் (COP) 1 நட்சத்திரத்தையும் பெற்றது. டூயல் முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, மற்றும் ISOFIX குழந்தை இருக்கைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை அதே ஆண்டில் தரநிலையாக பெற்றது.
2021 ஆம் ஆண்டில், சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களைக் கொண்ட இரண்டாம் தலைமுறை அமேஸ் ஒரு ஃபேஸ்லிஃப்டைப் பெற்றது, இது இன்றும் விற்பனையில் உள்ளது. அதன் பாதுகாப்பு கிட்டில் இப்போது இரட்டை முன் ஏர்பேக்குகள், ABS உடன் EBD மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் ஒரு சீட்பெல்ட் ரிமைண்டர் ஆகியவை ஸ்டாண்டர்டாக உள்ளன.
மேலும் பார்க்க: 2024 ஸ்விஃப்ட் JNCAP ஆல் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது: நாங்கள் கற்றுக்கொண்ட 3 விஷயங்கள்
குளோபல் NCAP சோதனை விதிமுறைகள் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளன
முன்னதாக இந்திய கார்களுக்கான குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் ஆனது முன் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஒட்டுமொத்த கட்டமைப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. இது முன் ஆஃப்செட் தடுப்பு விபத்து சோதனைகளை மட்டுமே நடத்தியது மற்றும் சோதிக்கப்பட்ட மாதிரி இரண்டு வகைகளில் மதிப்பிடப்பட்டது: பெரியவர்களுக்கான பாதுகாப்பு (17 புள்ளிகளில்) மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு (49 புள்ளிகளில்).
2022 ஆண்டில் குளோபல் NCAP அதன் மதிப்பீட்டு விதிமுறைகளை மேம்படுத்தியது. இப்போது அது முன்பக்க ஆஃப்செட் சோதனையை மட்டும் செய்கிறது ஆனால் அதன் பாதுகாப்பு மதிப்பீடுகளில் பக்க சைடு இம்பாக்ட், சைடு போல் இம்பாக்ட் மற்றும் பாதசாரி பாதுகாப்பு சோதனைகளை உள்ளடக்கியது. கூடுதலாக மாடலுக்கு அதிக 5-நட்சத்திர மதிப்பீட்டை எட்டுவதற்கு எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), 6 ஏர்பேக்ஸ் மற்றும் ISOFIX போன்ற இன்னும் பல பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது இப்போது 34 புள்ளிகள் அளவில் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்கான மதிப்பெண்களை ஒதுக்குகிறது.
ஹோண்டா அமேஸ் குளோபல் NCAP மதிப்பெண்கள்: ஒப்பீடு
அளவீடுகள் |
2019 |
2024 |
பெரியவர்களுக்கான |
4-நட்சத்திரம் (14.08 / 17) |
2-நட்சத்திரம் (27.85 / 34) |
குழந்தைகளுக்கான பாதுகாப்பு |
1-நட்சத்திரம் (8.16 / 49) |
0-நட்சத்திரம் (8.58 / 49) |
பெரியவர்களுக்கான பாதுகாப்பு
2019
ஹோண்டா அமேஸின் இரண்டு பதிப்புகளும் டிரைவர் மற்றும் முன்பக்க பயணிகளுக்கு தலை மற்றும் கழுத்துக்கு 'நல்ல' விதமாக பாதுகாப்பை அளித்தன. ஹோண்டா அமேஸின் இரண்டு பதிப்புகளிலும் மார்புக்கான பாதுகாப்பு 'போதுமானதாக' இருந்தது. அதே சமயம் அமேஸின் இரண்டு பதிப்புகளிலும் டிரைவர் மற்றும் முன் பயணிகளின் முழங்கால்கள் 'விளிம்பு' நிலை பாதுகாப்பைக் மட்டுமே காட்டின.
2024
அமேஸின் 2019 மற்றும் 2024 பதிப்புகளில் பாடி ஷெல் இன்டெகிரேஷன் மற்றும் ஃபுட்வெல் பகுதி நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமேஸ் மோசமான AOP பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று 2024 பதிப்பில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் சைடு கர்ட்டெயின் ஏர்பேக்குகள் இல்லாதது ஆகும். சமீபத்திய குளோபல் NCAP நெறிமுறையின்படி அனைத்து கட்டாய பாதுகாப்பு வசதிகளாகும்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு
2019 பதிப்பில் முன்னோக்கி இருக்கக்கூடிய சைல்டு சைல்டு ISOFIX -ஐ பயன்படுத்தி 3 வயது குழந்தை டம்மி வைக்கப்பட்டது. இது தாக்கத்தின் போது அதிகப்படியான முன்னோக்கி நகர்வதைத் தடுத்தது. ஆனால் மீள் எழுச்சியில் தலை வெளிப்பட்டது மற்றும் மார்பு அதிக சுமைகளை அனுபவித்தது. 18 மாத குழந்தைக்கு, குழந்தை இருக்கைகள் பின்புறமாக பொருத்தப்பட்டுள்ளன. தாக்கத்தின் போது ஆர்ம்ரெஸ்ட் திறந்தது இதனால் சைல்டு ரீஸ்ட்ரெயின் அமைப்பில் சுழன்றதா டம்மியின் தலை வெளிப்பட்டது.
2024 பதிப்பில் முன்னோக்கி இருக்கக்கூடிய சைல்டு சைல்டு இருக்கைகள் 3 வயது குழந்தைக்கான டம்மி ISOFIX ஆங்கரேஜ்களை பயன்படுத்தி வைக்கப்பட்டது. அதிகப்படியான தலை சேதம் காணப்படவில்லை என்றாலும் தலை வாகனத்தின் உள் பகுதிகளுடன் தொடர்பு கொண்டது. 18 மாத குழந்தையின் விஷயத்தில் பின்புறமாக வைக்கக்கூடிய சைல்டு சீட் பாதுகாப்பை வழங்கவோ அல்லது வெளியேற்றத்தைத் தடுக்கவோ முடியவில்லை இதன் விளைவாக இந்த சோதனையில் பூஜ்ஜிய புள்ளிகள் கிடைத்தன.
மேலும் பார்க்க: பார்க்க: கோடை காலத்தில் உங்கள் கார் ஏசியில் சிறப்பான குளிர்ச்சியை பெறுவது எப்படி
முக்கிய விவரங்கள்
குளோபல் என்சிஏபி சோதனை நெறிமுறைகளின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் கடுமையான பாதுகாப்பு மதிப்பெண் தரநிலைகளின்படி ஹோண்டா அமேஸ் குறைந்த பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெற்றது. இது போன்ற குறைபாடுகள் எதிர்காலத்தில் மாற்றிமைக்கப்படக்கூடும் ஆனால் ஒரு என்ட்ரி-லெவல் ஹோண்டா செடானில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மிகவும் பலவீனமாக உள்ளது. எப்படி இருந்தாலும் இரண்டு சோதனைகளிலும் ஹோண்டா அமேஸின் பாடிஷெல் நிலையானதாக மதிப்பிடப்பட்டது மற்றும் மேலும் லோடிங்குகளை தாங்கும் திறன் கொண்டது என்பது இந்த ஒப்பீட்டில் இருந்து நாம் தெரிந்து கொள்ளக்கூடிய அமேஸின் சாதகமான விஷயமாகும்.
விலை & போட்டியாளர்கள்
ஹோண்டா அமேஸின் விலை ரூ.7.20 லட்சத்தில் இருந்து ரூ.9.96 லட்சம் வரை உள்ளது (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). மாருதி சுஸூகி டிசையர், ஹூண்டாய் ஆரா, மற்றும் டாடா டிகோர் போன்ற கார்களுடன் போட்டியிடுகின்றது.
மேலும் படிக்க: ஹோண்டா அமேஸ் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful