• English
    • Login / Register

    எம்ஜி காமெட் EV இன் உட்புறத்தைப் பற்றிய முழு பார்வை உங்களுக்காக இங்கே

    tarun ஆல் ஏப்ரல் 13, 2023 05:52 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    35 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    சிறிய நகரத்துக்கு ஏற்றபடி இருக்கும் இரண்டு-கதவு EV வினோதமான ஸ்டைலிங் மற்றும் பிரீமியம் அம்சங்களைக் கொண்டிருக்கும்.

    MG Comet EV

    • சமீபத்திய டீஸர் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவர் டிஸ்ப்ளேக்கான டூயல் ஃப்ளோட்டிங் 10.25-இன்ச் டிஸ்ப்ளேகளைக் காட்டுகிறது.  

    • சுழலும் கைப்பிடிகள் மற்றும் ஈகோ/ஸ்போர்ட்ஸ் மோட்களுக்கான சுவிட்ச் ஆகியவையும் டீசரில் காட்டப்பட்டுள்ளன. 

    • 17.3kWh மற்றும் 26.7kWh பேட்டரி பேக்குகளுடன் எதிர்பார்க்கப்படுகிறது, இது 300 கிமீ வரை ரேஞ்சை வழங்குகிறது. 

    • விலை ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். 

    காமெட் EV -யின் மற்றொரு டீஸரை அதன் அறிமுகத்திற்கு முன்னரே எம்ஜி வெளியிட்டுள்ளது. சமீபத்திய படம் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் டேஷ்போர்டை முழுமையாகக் காட்டுகிறது. அது  சிட்ரோன் eC3 மற்றும் டாடா டியாகோ EV க்கு போட்டியாக நிற்கிறது.

    MG Comet EV
    சமீபத்திய டீஸர் டூயல் ஃபுளோட்டிங் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் காட்டுகிறது, இது வெவ்வேறு விட்ஜெட்கள் மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய பக்கங்களைப் பெறுகிறது. ஏசி வென்ட்களைக் கொண்ட டாஷ்போர்டில் பிரஷ் செய்யப்பட்ட சில்வர் பாகத்தைக் காணலாம். இது ரோட்டரி டயல்களுடன் கூடிய மேனுவல் ஏசி, ஸ்டீயரிங் வீலுக்கான டெலஸ்கோபிக் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடுகளுக்கு இடையில் மாறுவதற்கான டாகிள் பட்டன், ஆகியவை பளபளப்பான கறுப்பு ஹௌசிங்கில் இடம்பெறும்.

    மேலும் படிக்க: இந்தியாவில் வரவிருக்கும் எலக்ட்ரிக் கார்கள்

    காமெட் EV இல் உள்ள மற்ற அம்சங்களில் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள், இரட்டை முன்புற ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவை அடங்கும். இது அதிரடியான வடிவமைப்புடன் இரண்டு கதவு கொண்ட சிறிய ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும், ஆனால் நான்கு பேர் வரை அமரக்கூடியதாக இருக்கும். 

    Air EV Indonesia

    காமெட் EV இன் இந்தோனேசிய-ஸ்பெக் பதிப்பு,  a.k.a,வூலிங் ஏர், 17.3kWh மற்றும் 26.7kWh பேட்டரி பேக்குகளின் தேர்வைப் பெறுகிறது. சிறிய பேட்டரி பேக் 200 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது மற்றும் பெரியது 300 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது. இந்தியாவிற்கான எம்ஜி-பேட்ஜ் செய்யப்பட்ட மைக்ரோ EV-க்கு எந்த பேட்டரி ஆப்ஷனைக் கொடுக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். காமெட்டை இயக்குவது 40PS பின்-அச்சு பொருத்தப்பட்ட ஒற்றை மோட்டாராக இருக்க வேண்டும்.
    மேலும் படிக்க: 2023 ஆம் ஆண்டின் Q2இல் அறிமுகமாகும் என   எதிர்பார்க்கப்படும் முதல் 10 கார்கள் இதோ

    இந்த ஏப்ரலின் பிற்பகுதியில் முழு வெளியீடு மற்றும் விலை பற்றிய அறிவிப்பு இருக்கலாம் மற்றும் காமெட்டின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது. 

    was this article helpful ?

    Write your Comment on M g காமெட் இவி

    மேலும் ஆராயுங்கள் on எம்ஜி காமெட் இவி

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience