சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

முதல் ஸ்பை ஷாட்களின்படி ஃபேஸ்லிப்டட் டாடா சஃபாரியின் கேபின் வலுவாக சீரமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது

published on ஜூன் 21, 2023 03:39 pm by ansh for டாடா சாஃபாரி

கர்வ்- கான்செப்டினால் ஈர்க்கப்பட்ட புதிய சென்டர் கன்சோல் -ஐ ஃபேஸ்லிப்டட் டாடா சஃபாரி பெறும்.

  • 2024 தொடக்கத்தில் அதன் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அவின்யா மற்றும் கர்வ்-கான்செப்டிலிருந்து புதிய ஸ்டியரிங் வீலைப் பெறுகிறது.

  • வெளியே செல்லும் மாடலில் இருந்து 2லிட்டர் டீசல் இன்ஜினை பெறும் மற்றும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும் பெறும்.

  • விலை ரூ. 16 லட்சத்தில் (எக்ஸ் ஷோ ரூம்) இருந்து நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்லிப்டட் டாடா சஃபாரியின் மறுவடிவமைக்கப்பட்ட வெளிப்புறத்தின் பலதரப்பட்ட காட்சிகளுக்குப் பிறகு சமீபத்திய காட்சி புதிய 19 இன்ச் அலாய் வீல்களை வெளிப்படுத்துகிறது, எஸ்யூவி -யின் உட்புறத்தில் முதல் முறையாக நம்மை நோக்கி என்ன வர உள்ளது என்பதை அது காட்சிப்படுத்தி உள்ளது. வலுவாக வடிவமைக்கப்பட்ட கேபினுடன் ஃபேஸ்லிப்டட் சஃபாரி வரும் மற்றும் உளவுக் படங்கள் என்ன கூறுகின்றன என்பதை இதோ காணலாம்.

ஒரு புதிய கேபின்

உளவுப் படங்களின்படி, ஃபேஸ்லிப்டட் டாடா எஸ்யூவி,10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் முழுமையாக மறுவடிவமைக்கபட்ட மைய கன்சோலைப் பெறுகிறது அது தற்போதைய இட்டரேசனிலும் கிடைக்கிறது. கர்வ் -காரில் உள்ளது போல ஹாப்டிக் கன்ட்ரோல்கள் போன்ற கிளைமெட் கன்ட்ரோலுக்கான புதிய செட்அப்பை அது பெறும், மற்றும் மைய AC வென்டுகளும் மறுவடிவமைக்கப்பட்டுள்ளதைப் போன்று தோன்றுகின்றன.

டாடா அவின்யா கான்செப்டிலிருந்து ஈர்க்கப்பட்ட 4-ஸ்போக் ஸ்டியரிங் விலையும் உளவுக் படக் காட்சிகள் காட்டுகின்றன அது மத்தியில் டிஸ்பிளேயைப் பெறும் மற்றும் வீலுக்கு முன்னர் பேடில் ஷிஃப்டர்களையும் நீங்கள் காணலாம். ஃபேஸ்லிப்டட் டாடா நெக்ஸானின் சோதனையிலும் இந்த ஸ்டியரிங் வீல் காணப்பட்டது. இருந்தாலும், புதுப்பிக்கப்பட நெக்ஸானில் உள்ளதைப் போன்று அல்லாமல், இது கூடுதல் செயல்பாடு உடையதாக இருக்கலாம். அதாவது பேக்லிட் டாடா லோகோவைத் தவிர சில பயண தகவல்களையும் இது காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் EV மேக்ஸ் -இல் உள்ளதைப் போன்று டிஸ்பிளே உள்ள டிரைவ் மோடு செலக்ட்ரை அது பெறுகிறது, மற்றும் புதியதாக கியர் நாபையும் பெறுகிறது. மேலும், டேஷ்போர்டு உள்ளிட்ட ஒட்டுமொத்த வடிவமைப்பிலும் சில மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம் அது ஃபேஸ்லிப்டட் சஃபாரிக்கு கூடுதல் ப்ரீமியம் கேபின் தோற்றத்தை வழங்கும்.

பவர்டிரெயினில் மாற்றங்கள்

தற்போதைய மாடலிலிருந்து 2-லிட்டர் டீசல் இன்ஜினை ஃபேஸ்லிப்டட் சஃபாரி தக்கவைத்துக்கொள்ளும். இந்தப் பிரவு 170PS மற்றும் 350Nmஐ உருவாக்கும் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்: 0-100 KMPH விரைவு ஓட்டத்தில் இந்த 10 கார்களைவிட டாடா டியாகோ EV மிகவும் விரைவாகப் பயணித்தது

2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட எஸ்யூவி, டாடாவின் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் (170PS/280Nm) பெறும். ஸ்டியரிங் வீல் மீதுள்ள பேடில் ஷிப்டர்களின் இருப்பினால் பரிந்துரைக்கப்பட்ட DCT உடன் இந்த இன்ஜின் வரக்கூடும்.

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

இந்த ஃபேஸ்லிப்ட் உடன், சஃபாரி கார் டிஜிட்டர் டிரைவர்ஸ் டிஸ்பிளே, வென்டிலேட்டட் முன்புற மற்றும் நடு வரிசை இருக்கைகள்(6- இருக்கைகள்), பவர்டு டிரைவர் சீட்டுகள், ஆம்பியன்ட் லைட்டிங்குடன் அகலமான சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பல அம்சங்களைப் பெறுகிறது.

மேலும் காணவும்: டாடா பன்ச் CNG உறை இல்லாமல் சோதனை செய்யப்பட்டது, விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பாதுகாப்பைப் பொருத்தவரை, அது நிலையானதாக ஆறு ஏர்பேகுகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்(ESP), டயர் பிரஸர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஃபார்வர்டு-கொலிஷன் வார்னிங், பிளைன்ட்-ஸ்பாட் மானிட்டரிங், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் ரியர் கிராஸ்-டிராஃபிக் அலர்ட் போன்ற தற்போதைய வெர்ஷனில் இருந்து பெறப்பட்ட ADAS சூட் ஆகியவற்றுடன் வரக்கூடும்.

மேலும் படிக்கவும்: டாடா அல்ட்ரோஸ் ​​CNG மதிப்பீட்டின் 5 டேக்அவேஸ்

இந்த பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள முக்கிய அம்சம் லேன் கீப் அசிஸ்ட் ஆகும் அது தற்போது சஃபாரி மறுறம் ஹேரியரில் வழங்கப்படுவதில்லை. ஃபேஸ்லிப்டட் மாடலில் டாடா இந்த அம்சத்தை சேர்க்கலாம் அதற்கு பொருந்துவதற்காக கார் தயாரிப்பு நிறுவனம் பவர் ஸ்டீயரிங் எலக்ட்ரானிக்கை உருவாக்கலாம்.

அறிமுகம், விலை போட்டியாளர்கள்

டாடா, ஃபேஸ்லிப்டட் டாடா சஃபாரியின் ஆரம்ப விலையாக ரூ.16 லட்சத்தை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கலாம் மற்றும் அடுத்த வருட தொடக்கத்தில் அதனை அறிமுகப்படுத்தக்கூடும். அறிமுகப்படுத்திய உடன் அது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா XUV700 மற்றும் ஹூண்டாய் அல்காஸர் ஆகியவற்றுடன் போட்டியைத் தொடரும்.

படங்களின் ஆதாரம்

a
வெளியிட்டவர்

ansh

  • 2079 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா சாஃபாரி

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை