• English
  • Login / Register

ஸ்பை போட்டோவில் மீண்டும் ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் , இந்த முறை பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன

published on மார்ச் 09, 2023 07:22 pm by rohit for டாடா நிக்சன்

  • 49 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த புதுப்பிக்கப்பட்ட SUV, தற்போதைய டிரெண்டான இணைக்கப்பட்ட டெயில்லைட்கள் கொண்ட கார்களின் பட்டியலில் இணையவுள்ளது. 

2024 Tata Nexon spied

  • பெரிதும் மேம்படுத்தப்பட்ட நெக்ஸானை டாடா தயார் செய்து வருகிறது. இந்தக் கார் 2024 இல் எப்போது வேண்டுமானாலும் அறிமுகப்படுத்தப்படலாம். 

  • இது 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்டப்படும் கர்வ் மற்றும் சியாரா EV-இன் ஸ்டைலிங் குறிப்புகளைக் கொண்டிருக்கும்.

  • பெரிய 10.25-இன்ச் டிஸ்ப்ளே உடன் இண்டீரியரிலும் மேக் ஓவர் உள்ளது.

  • டாடா ஹாரியர்/சஃபாரி டுயோவில் சில ADAS அம்சங்களையும் கூட பொருத்த வாய்ப்புள்ளது.

  • புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டைப் பெறலாம்; மாற்றியமைக்கபட்ட டீசல் இன்ஜின் அப்படியே இருக்கும்.

  • விலை ரூ. 8 இலட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்ஸானின்முதல் ஸ்பை ஷாட்களை பிரத்தியேகமாக உங்களுக்கு வழங்கினோம். புதிய மாடல் சமீபத்தில் 2024 இல் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக மீண்டும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

காணப்பட்ட புதிய விவரங்கள்

2024 Tata Nexon spied showing new connected taillights

சமீபத்திய ட்ரெண்டின்படி, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் இணைக்கப்பட்ட டெயில்லைட்களைப் பெறும் என்பதை புதிய டெஸ்ட் மாடல் கார் வெளிப்படுத்துகிறது. தற்போதுள்ள மாடலின் "Y" வடிவத்துக்கு  மாறாக, சப்-4m SUV ஆனது "X-வடிவ" லைட்டிங் பகுதியைப் பெறும். 

சமீபத்திய ஸ்பை புகைப்படம், டாடா SUVயின் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் வடிவமைப்பைப் பற்றிய ஒரு விரைவான தோற்றத்தை நமக்கு வழங்குகிறது. அதன் ப்ரொஃபைலில் வேறு பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டாம். முன்பக்கமாக, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான், LED DRL ஸ்ட்ரிப் கொண்ட டாடா கர்வ் மற்றும் சியரா EV போன்ற ஸ்டைலிங்கைப் பெறும், அதே நேரத்தில் அதன் ஹெட்லைட்கள் பம்பரில் தாழ்வாக வைக்கப்படும்.

மேலும் படிக்க: டாடா 50 லட்சம் பயணிகள் வாகன உற்பத்தி மைல்கல்லை கடந்துள்ளது

கேபினிலும் மேக் ஓவர் இருக்கும்

2024 Tata Nexon cabin spied

முன்பு பார்க்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸானில், புதுப்பிக்கப்பட்ட உட்புறத்தை SUV பெறும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. டாடா அதன் பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் திருத்தப்பட்ட அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் அதை பொருத்த உள்ளது. வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் ஆட்டோ ஏசி போன்ற அம்சங்கள் தக்க வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, புதிய நெக்ஸான் அதன் முந்தைய SUV வாகனங்களான ஹாரியர் மற்றும் சஃபாரியின் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) போன்ற கூடுதல் அம்சங்களுடன் வரலாம்.

ஹூட்டு -க்கு கீழும் பெரிய மாற்றம் இருக்கிறது

New Tata 1.2-litre turbo-petrol engine

புதிய E20-கம்ப்ளையண்ட் 1.2-லிட்டர் TGDi (டர்போ-பெட்ரோல்) எஞ்சினுடன் - 12PS மற்றும் 225Nm - டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) உடன், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸானை டாடா வழங்கும் என எதிர்பார்க்கிறோம். 1.5-லிட்டர் டீசல் யூனிட்டுடன் (110PS/260Nm) தொடரும்போது இது ஆப்ஷனல் CNG கிட்டையும் பெறலாம். மாற்றப்பட்ட  எலக்ட்ரிக் (ப்ரைம் மற்றும் மேக்ஸ்) அதே காஸ்மெடிக் மற்றும் அம்ச புதுப்பிப்புகளையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களுக்கு முன்னதாக EV வடிவத்தில் டாடா ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தலாம்.

மேலும் படிக்க: டாடா தனது 1வது பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதியான Re.Wi.Re ஐ அறிமுகப்படுத்துகிறது.

எதிர்பார்க்கப்படும் விலைகள் மற்றும் போட்டியாளர்கள்

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படலாம். வழக்கமான-4m SUVக்களான ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட் மற்றும் நிசான் மேக்னைட் உள்ளிட்டவைகளுக்கு போட்டியாக தொடரும்.

படங்களின் ஆதாரம்

மேலும் படிக்கவும்: நெக்ஸான் AMT

was this article helpful ?

Write your Comment on Tata நிக்சன்

explore மேலும் on டாடா நிக்சன்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience