புதிய வசதிகள் மற்றும் ADAS உடன் Kia Sonet ஃபேஸ்லிப்ட் வெளியிடப்பட்டது. விலை ரூ.7.99 லட்சத்தில் தொடங்குகிறது
published on ஜனவரி 12, 2024 06:51 pm by rohit for க்யா சோனெட்
- 357 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபேஸ்லிப்டட் சோனெட் ஏழு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line .
-
2020 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சப்-4m எஸ்யூவி -க்கான முதல் பெரிய அப்டேட் இதுவாகும்.
-
எஸ்யூவி இப்போது புதுப்பிக்கப்பட்ட முன்பக்கம், கனெக்டட் டெயில்லேம்ப்கள் மற்றும் புதிய அலாய் வீல்களை கொண்டுள்ளது.
-
புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே தவிர கேபின் வடிவமைப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை.
-
360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
-
மூன்று இன்ஜின் மற்றும் நான்கு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது; டீசல்-MT மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
-
விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.15.69 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
2023 டிசம்பரில் ஃபேஸ்லிஃப்ட் கியா சோனெட் இந்தியாவில் அறிமுகமானது. கியா இப்போது அதன் முழு வேரியன்ட் வாரியான விலை பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது.
புதிய சோனெட்டின் விலை
வேரியன்ட் |
1.2-லிட்டர் N.A. பெட்ரோல் MT |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் iMT |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT |
1.5 லிட்டர் டீசல் MT |
1.5 லிட்டர் டீசல் iMT |
1.5 லிட்டர் டீசல் AT |
HTE |
ரூ.7.99 லட்சம் |
– |
– |
ரூ.9.79 லட்சம் |
– |
– |
HTK |
ரூ.8.79 லட்சம் |
– |
– |
ரூ.10.39 லட்சம் |
– |
– |
HTK+ |
ரூ.9.90 லட்சம் |
ரூ.10.49 லட்சம் |
– |
ரூ.11.39 லட்சம் |
– |
– |
HTX |
– |
ரூ.11.49 லட்சம் |
ரூ.12.29 லட்சம் |
ரூ.11.99 லட்சம் |
ரூ.12.60 லட்சம் |
ரூ.12.99 லட்சம் |
HTX+ |
– |
ரூ.13.39 லட்சம் |
– |
ரூ.13.69 லட்சம் |
ரூ.14.39 லட்சம் |
– |
GTX+ |
– |
– |
ரூ.14.50 லட்சம் |
– |
– |
ரூ.15.50 லட்சம் |
X-Line |
– |
– |
ரூ.14.69 லட்சம் |
– |
– |
ரூ.15.69 லட்சம் |
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான அறிமுக விலை ஆகும்
ஃபேஸ்லிஃப்ட் மூலம், சோனெட்டின் ஆரம்ப விலை 20,000 ரூபாய் உயர்ந்துள்ளது. மறுபுறம், அதன் டாப்-ஸ்பெக் வேரியண்ட் ரூ.80,000 வரை விலை உயர்ந்துள்ளது.
வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள்
கியா சோனெட்டின் தோற்றத்தை முன் மற்றும் பின்புறத்தில் சிறிய ஸ்டைலிங் மூலம் மேம்படுத்தியுள்ளது, குறிப்பாக LED DRL -கள் மற்றும் கனெக்டட் டெயில்லேம்ப்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட லைட்டிங் எலமென்ட்கள் மூலம். கேபின் மாற்றங்கள் குறைவாக இருந்தாலும், புதிய வடிவிலான செய்யப்பட்ட கிளைமேட் கன்ட்ரோல் பேனலை தவிர அதன் டேஷ்போர்டு அமைப்பில் பெரிய மாற்றம் இல்லை.
ஏராளமான அம்சங்கள்
கியா சோனெட் காரில் பல்வேஎறு புதிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக மீண்டும் அதன் பிரிவில் சிறப்பான வசதிகள் கொண்ட எஸ்யூவி -களில் ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு) மற்றும் 4-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. பெரிய அப்டேட்டாக 10 லெவல்-1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கவும்: 2024 கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் விமர்சனம்: பழக்கமானது, சிறந்தது, விலை உயர்ந்தது.
பவர்டிரெயின் ?
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கும் நான்கு சப்-4m எஸ்யூவி -களில் இதுவும் ஒன்றாகும். அதன் அனைத்து தொழில்நுட்ப விவரங்களும் இங்கே:
-
1.2-லிட்டர் பெட்ரோல் (83 PS/115 Nm): 5-ஸ்பீடு MT
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (120 PS/172 Nm): 6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT
-
1.5-லிட்டர் டீசல் (116 PS/250 Nm): 6-ஸ்பீடு MT (புதிய), 6-ஸ்பீடு iMT, 6-ஸ்பீடு AT
டீசல்-மேனுவல் காம்போ 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கியாவின் முழு தயாரிப்பு வரிசையிலும் நீக்கப்பட்ட இப்போது பிறகு மீண்டும் திரும்பியுள்ளது.
புதிய சோனெட்டின் போட்டியாளர்கள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சோனெட் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் சப்-4m கிராஸ்ஓவர் எஸ்யூவி மாருதி ஃபிரான்க்ஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: கியா சோனெட் ஆட்டோமெட்டிக்