சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதிய ஹூண்டாய் Hyundai Creta E Base வேரியன்ட்டை பற்றிய விவரங்களை 5 படங்கள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்

published on ஜனவரி 19, 2024 04:32 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா

பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் என்பதால், ஹூண்டாய் கிரெட்டா E -யில் மியூசிக் சிஸ்டம் , LED ஹெட்லைட்கள் கொடுக்கப்படவில்லை.

  • ஹூண்டாய் புதிய கிரெட்டாவை 7 வேரியன்ட்களில் வழங்குகிறது.

  • பேஸ்-ஸ்பெக் E வேரியன்ட் -ல் ஆல்-LED லைட்ஸ் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்படவில்லை.

  • 2024 கிரெட்டா E செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் மேனுவல் ஏசியை இருக்கின்றது.

  • பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

  • கிரெட்டா E வேரியன்டின் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.12.45 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).

இந்தியாவில் இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா E காருக்கு இப்போது ஒரு பெரிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, அதன் விலை இப்போது ரூ.11 லட்சத்தில் தொடங்குகின்றன (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). ஹூண்டாய் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -யை 7 வேரியன்ட்களில் வழங்குகிறது: E, EX, S, S (O), SX, SX Tech மற்றும் SX (O). என்ட்ரி-லெவல் E வேரியன்ட்டை தேர்வுசெய்ய நீங்கள் நினைத்திருந்தால், கீழே உள்ள இந்த விரிவான படங்களில் அதைப் பார்க்கலாம்:

வெளிப்புறம்

முன்பக்கத்தில், கிரெட்டா E அதே மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில்லை பெறுகிறது, டார்க் குரோம் இன்செர்ட்கள் மற்றும் டல் கிரே நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெரிய பம்பர் இருக்கின்றது. இது LED DRL அமைப்பில் உள்ள ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களுடன் வருகிறது. இது பேஸ் வேரியன்ட் என்பதால், ஹூண்டாய் LED DRL -கள் வழங்கப்படவில்லை.

பக்கவாட்டில் இருந்து ஒரு பேஸ் வேரியன்ட் என்பதற்கான மிகப் பெரிய அடையாளமாக, முன் ஃபெண்டரில் அமைந்துள்ள டர்ன் இண்டிகேட்டர்கள், குரோமுக்கு பதிலாக பாடி கலரில் டோர் ஹேண்டில்கள் மற்றும் கவர்கள் கொண்ட16-இன்ச் ஸ்டீல் வீல்களை பார்க்க முடிகின்றது. பின்புறத்தைப் பொறுத்தவரையில், 2024 ஹூண்டாய் கிரெட்டா E வேரியன்ட் -ல் LED டெயில்லைட்கள் இல்லாவிட்டாலும் கூட, மையத்தில் LED லைட் ஸ்ட்ரிப்பை பெறுகிறது.

உட்புறம்

இது ஒரு பேஸ்-ஸ்பெக் கிரெட்டா என்பதை உட்புறம் மிகவும் தெளிவாக காட்டுகின்றது. இது ஒரு மேனுவல் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் டச் ஸ்கிரீன் அல்லது சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இல்லை. இது ஸ்டீயரிங்கில் உள்ள கன்ட்ரோல்களுடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை கொண்டுள்ளது.

பேஸ்-ஸ்பெக் கிரெட்டா E-யில் உள்ள பாதுகாப்பு கிட் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் அனைத்து பயணிகளுக்குமான3-பாயின்ட் சீட் பெல்ட்களையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டாவின் ஒவ்வொரு வேரியன்ட்களின் விவரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

ஹூண்டாய் கிரெட்டா E பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

115 PS/ 144 Nm 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (N/A) பெட்ரோல் இன்ஜின் அல்லது 116 PS/ 250 Nm 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் எஸ்யூவி -யின் என்ட்ரி-லெவல் E வேரியன்ட்டை ஹூண்டாய் வழங்குகிறது. இரண்டு யூனிட்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும்.

ஹையர் வேரியன்ட்கள் CVT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆப்ஷனுடன் அதே இன்ஜின்களை பெறுகின்றன. ஹூண்டாய் எஸ்யூவி -யில் இருந்து அதிக செயல்திறனை விரும்புவோருக்கு, இது 160 PS/ 253 Nm 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் ஹையர் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

தொடர்புடையது: 2024 ஹூண்டாய் கிரெட்டா Eந்தியாவில் அடுத்த N லைன் மாடலாக இருக்கலாம்

விலை வரம்பு மற்றும் போட்டியாளர்கள்

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா E வேரியன்ட் விலை ரூ. 11 லட்சத்தில் இருந்து ரூ.12.45 லட்சமாகவும், எஸ்யூவியின் ரேஞ்ச்-டாப்பிங் வேரியன்ட்களின் விலை ரூ.20 லட்சமாகவும் உள்ளது. இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ்.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான் இந்தியா) - வுக்கான விலை ஆகும்

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன் ரோடு விலை

r
வெளியிட்டவர்

rohit

  • 295 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹூண்டாய் கிரெட்டா

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை