2024 Hyundai Creta இந்தியாவில் அடுத்த N லைன் மாடலாக வெளியாகவுள்ளதா ?
published on ஜனவரி 18, 2024 05:51 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா
- 300 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய கிரெட்டா டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மீண்டும் கொண்டு வந்துள்ளது. ஆனால் வடிவமைப்பு மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் சில விஷயங்கள் கொடுக்கப்படவில்லை என்பதால் அவற்றை இந்த எஸ்யூவி -யின் N லைன் எடிஷனுக்கு ஹூண்டாய் நிறுவனம் ஒதுக்கி வைத்திருக்கலாம் என தெரிகின்றது.
2024 ஹூண்டாய் கிரெட்டா செயல்திறன் அடிப்படையில் பார்க்கப்போனால் இந்த பிரிவில் முன்னணியில் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் அனைத்து புதிய அம்சங்களுடன், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காம்பாக்ட் எஸ்யூவி இப்போது 160 PS 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் பெறுகிறது. இருப்பினும், அதன் உடன்பிறப்பான கியா செல்டோஸ் போல இல்லாமல், ஹூண்டாய் கிரெட்டா டர்போ-பெட்ரோல் பதிப்பின் தோற்றத்தில் பெரிதாக எந்த வித வேறுபாடுகளையும் வழங்கவில்லை மற்றும் டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் அத்துடன் மேல் வேரியன்ட் உடன் மட்டுமே வருகின்றது. இருப்பினும், கிரெட்டா N லைன் வடிவில் உள்ள இந்த பவர்டிரெய்னுக்கு ஹூண்டாய் அதிக வேரியன்ட்களை கொடுக்க வாய்ப்புள்ளது என்றே நாங்கள் நினைக்கிறோம்.
அப்படி நினைப்பதற்கான காரணம் என்ன ?
-
ஆர்வலர்களுக்கான மேனுவல் ஆப்ஷன்.
ஹூண்டாய் வெர்னாவின் டர்போ-மேனுவல் காம்போ படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
கிரெட்டா N லைன் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என நினைப்பதற்காக சில காரணங்கள் உள்ளன. மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவின் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 7-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வெர்னா மற்றும் அல்கஸார் ஆகியவை இதே இன்ஜினில் 6-ஸ்பீடு மேனுவல் ஆப்ஷனை பெறுகின்றன. ஆகவேதான் இந்த ஆப்ஷன்கள் கிரெட்டா N லைனுடன் பிரத்தியேகமாக வழங்கப்படலாம் என்று நினைக்கிறோம்.
-
இலகுவாக அணுகக்கூடியது
கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், ஹூண்டாய் தற்போது டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜினை ஃபுல்லி லோடட் SX (O) வேரியண்டில் மட்டுமே விற்பனை செய்து வருகிறது, இதன் விலை ரூ.20 லட்சம். வென்யூ மற்றும் வென்யூ N லைன் கார்களில் காணப்படுவது போல், கிரெட்டா N லைன், எஸ்யூவியின் பல வேரியன்ட்களுடன் அதே பவர்டிரெய்னை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
-
வடிவமைப்பில் உள்ள வித்தியாசம்
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டா டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் வழங்கப்பட்டபோது, அது கேபின் மற்றும் எக்ஸாஸ்ட் நிறங்களால் வேறுபடுத்தப்பட்டது. இருப்பினும், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவின் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்டிலிருந்து இந்த வித்தியாசத்தை பார்க்க முடியவில்லை. கிரெட்டா N லைன் ஸ்டாண்டர்டான மாடலில் சில ஸ்டைலிங் அப்டேட்களை கொண்டிருக்க வாய்ப்புள்ளது, இதில் ‘N லைன்’ பேட்ஜ்கள், பிரேக் காலிப்பர்களுடன் கூடிய ஸ்போர்ட்டியர் தோற்றமுடைய அலாய் வீல்கள், பிளாக்-அவுட் கேபின் மற்றும் டூயல் எக்ஸாஸ்ட் டிப்ஸ் ஆகியவை அடங்கும்.
-
கிரெட்டா N லைன் சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ளது
பிரேசில்-ஸ்பெக் ஹூண்டாய் கிரெட்டா N லைன் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
கடைசியாக, ஹூண்டாய் ஏற்கனவே கிரெட்டா எஸ்யூவி -யை வெளிநாட்டு சந்தைகளில் அதன் N லைன் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டா N லைன் தற்போது சில தென் அமெரிக்க சந்தைகளில் விற்கப்படுகிறது (இந்திய-ஸ்பெக் அவதாரத்தில் இல்லாவிட்டாலும்), ஆகவே ஹூண்டாய் இறுதியாக எஸ்யூவி -யின் ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட ஒரு புதிய காரை நமக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதையும் பார்க்கவும்: ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் vs கியா செல்டோஸ்: மைலேஜ் ஒப்பீடு
பவர்டிரெய்ன் விவரங்கள்
2024 ஹூண்டாய் கிரெட்டா N லைன் அதே 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (160 PS/ 253 Nm) ஸ்டாண்டர்டான மாடலாக பெறும், 6-ஸ்பீடு MT மற்றும் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) இரண்டையும் பெறலாம். ஹூண்டாய் மேலும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஸ்டாண்டர்டான கிரெட்டாவை வழங்குகிறது, அதன் விவரங்களை எங்கள் விரிவான வெளியீட்டு கட்டுரையில் நீங்கள் காணலாம். N லைன் பதிப்பில், வழக்கமான கிரெட்டாவிலிருந்து மேலும் வேறுபடுத்துவதற்கு, கூடுதலான ஷார்ப்பான கையாளுதலுக்கான சற்றே வித்தியாசமான சஸ்பென்ஷன் செட்டப்பையும் இது பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை
ஹூண்டாய் கிரெட்டா N லைன் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம், இதன் விலை சுமார் ரூ. 17.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ் GTX+ மற்றும் எக்ஸ்-லைன் ஆகிய கார்கள் இதன் நேரடி போட்டியாளர்களாக இருக்கும். அதே சமயம் இது ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற கார்களுக்கு ஸ்போர்ட்டியர் தோற்றமுடைய மாற்றாக இருக்கும்
மேலும் படிக்க: கிரெட்டா டீசல்
0 out of 0 found this helpful