Hyundai Creta ஃபேஸ்லிப்ட் ரூ. 11 லட்சம் தொடக்க விலையில் வெளியானது.. கூடுதலான வசதிகள் மற்றும் சக்திவாய்ந்த டர்போ இன்ஜினை பெறுகிறது
modified on ஜனவரி 16, 2024 06:14 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா
- 154 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் கிரெட்டா மிரட்டலான தோற்றத்தில் இருக்கிறது மற்றும் ADAS மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற நவீன தொழில்நுட்பங்களை பெறுகின்றது.
-
இந்த கார் 7 வேரியன்ட்களில் கிடைக்கிறது: E, EX, S, S (O), SX, SX Tech மற்றும் SX (O).
-
கனெக்டட் லைட்டிங் அமைப்புகளுடன் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் நிறைய விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன.
-
புதிய டாஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேவை கொடுக்கப்பட்டுள்ளது.
-
புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனலுடன் டூயல் ஜோன் ஏசி -யை பெறுகிறது.
-
1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் நிறுத்தப்படவுள்ள மாடலில் இருந்து தக்க வைக்கப்பட்டுள்ளன; இப்போது வெர்னாவின் 1.5-லிட்டர் டர்போ யூனிட்டும் இதில் கிடைக்கிறது.
-
விலை இப்போது ரூ.11 லட்சத்திலிருந்து தொடங்குகின்றது (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் விற்பனைக்கு வந்த இரண்டாம் தலைமுறை கிரெட்டாவை, 2024 மாடல் ஆண்டிற்கான ஃபேஸ்லிஃப்டை அப்டேட் உடன் ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டா உள்ளேயும் வெளியேயும் ஒரு புதிய வடிவமைப்பை பெறுகிறது. மேலும் பல கூடுதல் அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை இப்போது ரூ. 11 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).
2024 ஹூண்டாய் கிரெட்டா விலை விவரங்கள்
வேரியன்ட் |
1.5-லி பெட்ரோல் MT |
1.5-லி பெட்ரோல் CVT |
1.5-லி Turbo-பெட்ரோல் DCT |
1.5-லி டீசல் MT |
1.5-லி டீசல் AT |
E |
ரூ. 11 லட்சம் |
– |
– |
ரூ. 12.45 லட்சம் |
– |
EX |
ரூ. 12.18 லட்சம் |
– |
– |
ரூ. 13.68 லட்சம் |
– |
S |
ரூ. 13.39 லட்சம் |
– |
– |
ரூ. 14.89 லட்சம் |
– |
S (O) |
ரூ. 14.32 லட்சம் |
ரூ. 15.82 லட்சம் |
– |
ரூ. 15.82 லட்சம் |
ரூ. 17.32 லட்சம் |
SX |
ரூ. 15.27 லட்சம்* |
– |
– |
– |
– |
SX Tech |
ரூ. 15.95 லட்சம்* |
ரூ. 17.45 லட்சம்* |
– |
ரூ. 17.45 லட்சம்* |
– |
SX (O) |
ரூ. 17.24 லட்சம்* |
ரூ. 18.70 லட்சம்* |
ரூ. 20 லட்சம்* |
ரூ. 18.74 லட்சம்* |
ரூ. 20 லட்சம்* |
*டூயல்-டோன் ஆப்ஷனிலும் கிடைக்கும்
இதற்கு முன்பு இருந்த மாடலுடன் ஒப்பிடும் போது, இந்த எஸ்யூவி -யின் தொடக்க விலை ரூ.13,000 வரை உயர்ந்துள்ளது, மேலும் டாப்-ஸ்பெக் வேரியன்ட் விலை ரூ.1 லட்சம் உயர்ந்துள்ளது.
வெளியில் என்ன மாறியுள்ளது?
ஃபேஸ்லிஃப்ட்டுடன், 2024 ஹூண்டாய் கிரெட்டா மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை பெற்றுள்ளது. புதிய வடிவிலான கிரில், நீண்ட LED DRL ஸ்டிரிப் மற்றும் புதிய LED ஹெட்லைட்களுடன் கூடிய முன்பக்கம் ஆகியவற்றை புதிய அப்டேட்களாக பார்க்க முடிகின்றது. கீழ் பகுதியில் இப்போது மிகவும் பெரிய சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளது.
எஸ்யூவி -யின் பக்கவாட்டு தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை, தெரிய வரும் ஒரே மாற்றம் புதிய அலாய் வீல்கள் மட்டுமே. பின்புறத்தில், புதுப்பிக்கப்பட்ட கிரெட்டா முன்பக்கத்தின் இன்வெர்டட் L வடிவ வடிவமைப்பைப் பிரதிபலிக்கும் கனெக்டட் LED டெயில் லைட்களை கொண்டுள்ளது. பம்பரும் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இப்போது பெரிய சில்வர் ஸ்கிட் பிளேட்டை கொடுக்கப்பட்டுள்ளது.
கேபினில் மாற்றங்கள் மற்றும் கூடுதலான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன
2024 கிரெட்டாவின் உட்புறம் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது, டூயல் இன்டெகிரேட்ட 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காகவும் இருக்கும். பயணிகள்-பக்க உள்ள டாஷ்போர்டின் மேல் பகுதியில் இப்போது பியானோ பிளாக் பேனல் உள்ளது, மேலும் அதன் கீழே ஆம்பியன்ட் லைட்களுடன் ஓபன் ஸ்டோரேஜ் உள்ளது.
புதிய 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே தவிர, கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் -டில் புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல், 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) டூயல் ஜோன் ஏசி -யும் வழங்கப்பட்டுள்ளது. இது அதன் பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அப்படியே இருக்கின்றன, மேலும் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
நிறைய பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் உள்ளன
ஹூண்டாய் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவை பல இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது, அதன் விவரங்கள் கீழே உள்ளன:
விவரம் |
1.5 லிட்டர் பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
115 PS |
160 PS |
116 PS |
டார்க் |
144 Nm |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, CVT |
7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 6-ஸ்பீடு MT மற்றும் 7-ஸ்பீடு DCT இரண்டையும் பெறும் புதிய வெர்னாவை போலல்லாமல், அதே இன்ஜின் எஸ்யூவி -யில் DCT கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும்.
இதையும் பார்க்கவும்: ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளன
போட்டியாளர்கள்
ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் கிரெட்டா கியா செல்டோஸ்,மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான் இந்தியா) -வுக்கான விலை ஆகும்
மேலும் படிக்க: கிரெட்டா ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful