eC3 கார் மூலமாக இந்தியாவில் தனது EV பலத்தை காட்டுவதற்கு தயாரான சிட்ரோன்
modified on மார்ச் 01, 2023 07:08 pm by rohit for citroen ec3
- 43 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த காருக்கு 29.2kWh பேட்டரி பேக் ஆற்றலைக் கொடுக்கிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 km தூரம் வரை செல்லும் என ARAI -யால் சான்றளிக்கப்பட்டுள்ளது.
-
இது இரண்டு வகையான டிரிம்களில் வருகிறது: லிவ் மற்றும் ஃபீல் .
-
விலை ரூ.11.50 லட்சம் முதல் ரூ.12.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் அறிமுக விலை) வரை இருக்கும்.
-
57PS மற்றும் 143Nm உருவாக்கும் ஒற்றை மின்சார மோட்டார் இதில் இருக்கிறது.
-
10 இன்ச் டச் ஸ்க்ரீன், டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகிய வசதிகள் இதில் இருக்கின்றன.
-
இது அதன் ICE வெர்ஷனை விட ரூ. 5.5 லட்சம் விலை அதிகமானது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தைக்கான வளர்ச்சியானது விரைவாக இருந்து வருகிறது. மேலும் வெவ்வேறு கார் தயாரிப்பாளர்கள் பல்வேறு விலைகளில் மின்சார கார்களை வழங்குகிறார்கள். சிட்ரோன் இப்போது eC3 என்று அழைக்கப்படும் என்ட்ரி லெவல் காரான C3-ன் ஆல்-எலக்ட்ரிக் வெர்ஷனுடன் பட்டியலில் இணைந்திருக்கிறது. இது இரண்டு வகையான டிரிம்களில் கிடைக்கிறது: லிவ் மற்றும் ஃபீல்.
மேலும் படிக்க: eC3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் மூலம் ஃப்ளீட் சந்தையில் சிட்ரோன் நுழைகிறது
வேரியண்ட் |
விலைகள் (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) |
---|---|
லிவ் |
ரூ. 11.50 இலட்சம் |
ஃபீல் |
ரூ. 12.13 இலட்சம் |
ஃபீல் வைப் பேக் |
ரூ. 12.28 இலட்சம் |
ஃபீல் டுயல் டோன் வைப் பேக் |
ரூ. 12.43 இலட்சம் |
டாடா டியாகோ EV-இன் என்ட்ரி லெவல் லாங்-ரேஞ்ச் வேரியண்ட்டுடன் ஒப்பிடும்போது, சிட்ரோன் eC3 -யின் ஆரம்ப விலையானது ரூ. 1.31 லட்சம் அதிகம். இதற்கிடையே, என்ட்ரி லெவல் eC3 மற்றும் கம்பஸ்டன் இன்ஜின் C3 ஆகியவற்றுக்கு இடையே ரூ.5.5 லட்சத்திற்கும் மேல் விலை கூடுதலாக உள்ளது. சிட்ரோன் eC3-க்கான டெலிவரிகளை கூடிய விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சிட்ரோன் வாடிக்கையாளர்களுக்கு தொழிற்சாலையில் இருந்து காரை நேரடியாக வாங்கி அவர்களின் வீட்டு வாசலில் டெலிவரி செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
ரேஞ்ச், பவர் மற்றும் சார்ஜிங்
சிட்ரோன் eC3-யில் 29.2kWh பேட்டரி பேக்கைப் பொருத்தியுள்ளது, அத்துடன் ARAI மூலமாகச் சான்றளிக்கப்பட்ட 320km ரேஞ்சைக் கொண்டுள்ளது. எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் ஃப்ரண்ட் வீல் டிரைவுடன் (57PS/143Nm) சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டாருடன் வருகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 107 kmph. இதில் இரண்டு சார்ஜிங் ஆப்ஷன்கள் இருக்கின்றன: 15A சாக்கெட் சார்ஜர், 10 மணிநேரம் 30 நிமிடங்களில் 0 முதல் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும், மேலும் 57 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய DC ஃபாஸ்ட் சார்ஜர்.
அத்தியாவசியமானவை
போன்ற அத்தியாவசிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, கனெக்டட் கார் டெக் மற்றும் நான்கு ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டமுடன் கூடிய 10-இன்ச் டச்ஸ்க்ரீன் யூனிட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் வாடிக்கையாளர்களுக்கு சிட்ரோனின் கனெக்டட் டெக் ஃபியூச்சர்களை பெறும் வகையில் ஏழு ஆண்டு சந்தாவும் கிடைக்கும். அதன் ICE வெர்ஷனுடன் ஒப்பிட்டால் இதில் கூடுதல் அம்சங்கள் எதுவும் இல்லை.
உத்தரவாதப் பாதுகாப்பு
eC3-இன் பேட்டரி ஏழு ஆண்டுகள் அல்லது 1.4 லட்சம் km என்ற உத்தரவாதத்தைப் பெறுகிறது, இது டாடா வழங்கும் வழக்கமான எட்டு ஆண்டுகள் மற்றும் 1.6 லட்சம் கி.மீ EV பேட்டரி கவரேஜை விட குறைவானதாகும். இதற்கிடையில், எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஐந்து ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கி.மீ மற்றும் வாகனத்துக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 1.25 லட்சம் km உத்தரவாதத்தைக் கொடுக்கிறது சிட்ரோன். eC3-க்கு ஏழு ஆண்டுகள் அல்லது இரண்டு லட்சம் கிமீ வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் சிட்ரோன் வழங்கியுள்ளது.
இதன் போட்டியாளர்கள் யார் என பார்க்கலாம்
இது டாடா டியாகோ EV மற்றும் டிகோர் EV -ஐ போட்டியாளராகச் சந்திக்கும் அதே வேளையில், டாடா நெக்ஸான் EV பிரைம்/மேக்ஸ் மற்றும் மஹிந்திரா XUV400 போன்றவையும் குறைவான விலையில் கிடைக்கும் ஆப்ஷனாகவும் இருக்கிறது. பிரெஞ்சு கார் தயாரிப்பாளரான சிட்ரோன் eC3-ஐ டாடாவின் டிகோர் EV எக்ஸ்பிரஸ்-T -ஐ எதிர்கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
Read More on : eC3 Automatic
மேலும் வாசிக்கவும் : eC3 ஆட்டோமேடிக்
0 out of 0 found this helpful