Hyundai Creta S(O) வேரியன்ட்டை விரிவாக 8 படங்களில் இங்கே பாருங்கள்
published on பிப்ரவரி 05, 2024 04:48 pm by ansh for ஹூண்டாய் கிரெட்டா
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
மிட்-ஸ்பெக் S(O) வேரியன்ட்களுக்கான விலை ரூ. 14.32 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது, மேலும் இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்.
சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது புத்தம் புதிய வெளிப்புற வடிவமைப்பு, அப்டேட் செய்யப்பட்ட கேபின், புதிய அம்சங்களின் தொகுப்புடன் வருகிறது, மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெய்ன்கள் இரண்டு ஆப்ஷனும் இதில் கிடைக்கும். இது 7 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் மிட்-ஸ்பெக் கிரெட்டாவை வாங்க திட்டமிட்டால், இந்த விரிவான கேலரியில் அதன் S(O) வேரியன்ட்டை பற்றிய விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.
வடிவமைப்பு
முன்பக்கத்தில், இது குரோம் இன்செர்ட்களுடன் கூடிய புதிய பாராமெட்ரிக் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ளது. கிரில்லுக்கு மேலே, கனெக்ட்டட் LED DRL -கள் மற்றும் புதிய ஹெட்லைட்கள் பம்பர்களுடன் இணைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். பம்பர் பிளாக் கலரில் உள்ளது, ஸ்கிட் பிளேட் சில்வர் கலரில் கொடுக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டு தோற்றம் ஃப்ரீ ஃபேஸ்லிப்ட் -க்கு முன்னால் இருந்ததை போலவே உள்ளது. இந்த வேரியன்ட் குரோம் ரூஃப் ரெயில்கள், டோர்களுக்கு அடியில் சில்வர் பிளேட் கொண்ட பிளாக் டோர் கவர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இது சி-பில்லரில் இருந்து தொடங்கி ரூஃப் லைன் முழுவதும் செல்லும் சில்வர் டிஸைன் எலமென்ட்களை தொடர்ந்து வழங்குகிறது.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவில் 17-இன்ச் அலாய் வீல்கள் அனைத்தும் பிளாக் கலரில் நிறத்தில் உள்ளன, இது S(O) வேரியன்ட்டிற்கு மட்டுமே பிரத்தியேகமானது, மேலும் பின்புற தோற்றம் LED டெயில் லைட்டுகளுடன் மற்ற வேரியன்ட்களை போலவே உள்ளது.
கேபின்
கிரெட்டா S(O) இன் உள்ளே, ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் பிளாக் மற்றும் கிரே கேபின் தீம் கிடைக்கும். இது ஒரு பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங், கிளாஸி பிளாக் டச் மற்றும் AC வென்ட்கள், டேஷ்போர்டு, டோர் ஹேண்டில் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றில் குரோம் இன்செர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பின் இருக்கைகள்
இங்கே நீங்கள் இருக்கைகளின் டூயல்-டோன் ஃபினிஷ் பார்க்கலாம். இந்த வேரியன்ட் கப்ஹோல்டர்களுடன் கூடிய ஃபோல்டபிள் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட்டும் உள்ளது.
வசதிகள்
ஹூண்டாய் கிரெட்டா -வின் S(O) வேரியண்ட் பல பிரீமியம் வசதிகளுடன் வருகிறது இதில் 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டூயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் ஆகியவை உள்ளன. நீங்கள் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டிற்குச் சென்றால், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டிரைவ் மோடுகள் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் போன்ற கூடுதல் அம்சங்களும் கிடைக்கும்.
இதையும் பார்க்கவும்: Tata Safari Red Dark vs Tata Safari Dark: படங்களில்
பாதுகாப்பிற்காக, இந்த வேரியன்ட் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), அனைத்து பயணிகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பவர்டிரெய்ன்
கிரெட்டாவின் S(O) வேரியன்ட்டுடன், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (115 PS/144 Nm) மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS/250 Nm) ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ள்ளது. இந்த இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் ஸ்டாண்டர்டாக இணைக்கப்பட்டுள்ளன. ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுக்கு, பெட்ரோல் இன்ஜின் CVT மற்றும் டீசல் யூனிட் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
விலை
ஹூண்டாய் கிரெட்டா S(O) வேரியன்ட்களுக்கான விலை இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களின் அடிப்படையில் ரூ. 14.32 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி ரூ. 17.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது.
மேலும் படிக்க: கிரெட்டா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful