• English
    • Login / Register

    2023 மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான 15 கார் பிராண்டுகளை பாருங்கள்

    டாடா நிக்சன் 2020-2023 க்காக ஏப்ரல் 12, 2023 08:05 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 49 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    பட்டியலில் உள்ள அனைத்து கார்களிலும், அறுபது சதவீத கார்கள் மாருதி பேட்ஜைக் கொண்டுள்ளன

    Check Out The 15 Highest-selling Cars In March 2023

    மாருதி எப்போதும் விற்பனையின் அடிப்படையில் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, மேலும் 2023 மார்ச் மாதத்திலும் அது தொடர்கிறது. மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான 15 கார்களில், ஒன்பது மாடல்கள் மாருதியிலிருந்து வந்தவை, டாடா மற்றும் ஹூண்டாய் பிராண்டுகளின் மாடல்களுக்கு சிறிதளவு இடத்தையே தருகிறது . இந்தப் பட்டியலில் உள்ள சில மாடல்கள் ஆண்டுக்கு  (YoY) விற்பனையில் இழப்பை எதிர்கொண்டாலும், அவற்றில் பெரும்பாலானவை வளர்ச்சியைக் கண்டன.

    மேலும் படிக்க: 2023 மார்ச் மாதத்தில்  மிகவும் பிரபலமான இந்த 10 கார் பிராண்டுகள் 

    2023 மாதத்தில் அதிகமாக விற்பனையாகும் 15 கார்கள் எவ்வாறு செயல்பட்டன என்பது பற்றிய விவரம் இங்கே:


    மாடல்கள்


    2023 மார்ச்


    2022 மார்ச்


    2023 பிப்ரவரி 


    மாருதி ஸ்விஃப்ட்

    17,559

    13,623

    18,412


    மாருதி வேகன் R

    17,305

    24,634

    16,889


    மாருதி பிரெஸ்ஸா

    16,227

    12,439

    15,787


    மாருதி பலேனோ

    16,168

    14,520

    18,592


    டாடா நெக்ஸான்

    14,769

    14,315

    13,914


    ஹூண்டாய் க்ரெட்டா

    14,026

    10,532

    10,421

    Maruti Dzire
    மாருதி டிஸையர்

    13,394

    18,623

    16,798


    மாருதி இகோ

    11,995

    9,221

    11,352


    டாடா பன்ச்

    10,894

    10,526

    11,169


    மாருதி கிராண்ட் விட்டாரா

    10,045

    -

    9,183


    ஹூண்டாய் வென்யூ

    10,024

    9,220

    9,997


    மஹிந்திரா பொலேரோ

    9,546

    6,924

    9,782


    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்

    9,304

    9,687

    9,635


    மாருதி ஆல்டோ

    9,139

    7,621

    18,114


    மாருதி எர்டிகா

    9,028

    7,888

    6,472

    டேக் அவேஸ்

    • 17,500 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி, மாருதி ஸ்விஃப்ட் பலேனோவை முந்தி முதலிடத்தை பிடித்தது.  2022 மார்ச் மாதத்துடன்  ஒப்பிடும்போது, அதன் விற்பனை 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

    Maruti Swift

    • வேகன் R 2023 மார்ச் மாதத்தில், 17,300 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து ஸ்விஃப்ட்டை நெருக்கமாகப் பின்தொடர்ந்தது. முந்தைய ஆண்டை விட அதன் விற்பனை 30 சதவீதம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

    • வேகன் R ஐத் தொடர்ந்து பிரெஸ்ஸா மற்றும் பலேனோ மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில்  16,000 முதல் 16,300 யூனிட்டுகளின் விற்பனையுடன் உள்ளன.  2023 பிப்ரவரி உடன் ஒப்பிடும்போது ப்ரெஸ்ஸா மூன்று இடங்கள் உயர்ந்தாலும், மறுபுறம் பலேனோ முதலிடத்தை இழந்தது.

    Maruti Brezza
    Maruti Baleno

    • டாடா நெக்ஸான் 2023 மார்ச் மாதத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது, 14,700 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையானது,  2023 பிப்ரவரி மாதத்தில் ஏழாவது இடத்தில் இருந்து உயர்ந்தது. நெக்ஸான் EV பிரைம் மற்றும் நெக்ஸான் EV மேக்ஸ் இன் விற்பனையையும் இந்த விற்பனை புள்ளிவிரங்கள் உள்ளடக்கியுள்ளன.

    Tata Nexon

    • 14,000 -யூனிட் விற்பனைக் குறியைத் தாண்டிய மற்றொரு கார்ஹூண்டாய் க்ரெட்டா, இது 33 சதவீத  ஆண்டு விற்பனை வளர்ச்சியைக் கண்டது.

    Hyundai Creta

    • மாருதி டிஸையர் 2023 மார்ச் மாதத்தில் 13,400 யூனிட்டுகளுக்குக் குறைவான விற்பனையுடன் மாத விற்பனை (MoM) மற்றும் YOY விற்பனை இரண்டிலும் நஷ்டத்தைக் கண்டது.

    • மாருதி இகோ 2023 பிப்ரவரி மாதத்தில்  இருந்த அதே தரவரிசையில் இருந்தது, ஆனால் அதன் ஆண்டு விற்பனையில் 30 சதவீதம் வளர்ச்சியைக் கண்டது.

    • டாடா பன்ச் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் மாருதியின் கிராண்ட் விட்டாரா 2023 மார்ச் மாதத்தில்  முறையே 10,894 மற்றும் 10,045 யூனிட் விற்பனையுடன் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    Tata Punch
    Maruti Grand Vitara

    Hyundai Venue

    • முதல் 15 கார்களின் பட்டியலில் நுழைந்த மஹிந்திராவின் ஒரே மாடல் பொலேரோ 9,500 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகிறது.

    Mahindra Bolero

    • ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்-இன் விற்பனை அதன் MoM மற்றும் YoY புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது 9,000 யூனிட் தோராயமாக நிலையானதாக இதன் விற்பனை உள்ளது.

    Hyundai Grand i10 Nios

    • ஆல்டோ மற்றும் எர்டிகா ஆகிய இரண்டு மாருதி கார்கள் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்தன. எர்டிகா முந்தைய மாதத்தை விட வளர்ச்சியைக் கண்டாலும், ஆல்டோவின் விற்பனை 50 சதவீதத்திற்கு அருகில் சரிந்து, அதை 14வது இடத்திற்குக் கொண்டு வந்தது.

    மேலும் படிக்க: 2023 ஆம் ஆண்டின் Q2இல் அறிமுகமாகும் என   எதிர்பார்க்கப்படும் முதல் 10 கார்கள் இதோ

    மேலும் படிக்கவும்: நெக்ஸான் AMT

    was this article helpful ?

    Write your Comment on Tata நிக்சன் 2020-2023

    explore similar கார்கள்

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience