சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதிதாக Mahindra Thar Roxx காரை வாங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்

மஹிந்திரா தார் ராக்ஸ் க்காக மார்ச் 17, 2025 07:26 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஜான் ஆபிரகாமின் தார் ராக்ஸ் கறுப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது கஸ்டமைஸ்டு கார் என்பதால் சி-பில்லர் மற்றும் உள்ளே உள்ள முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்கள் இரண்டிலும் கறுப்பு நிற பேட்ஜ்கள் மற்றும் 'JA' மோனிகர் கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் மிகவும் பிரபலமான ஆஃப்-ரோடு எஸ்யூவிகளில் ஒன்றாக மஹிந்திரா தார் ராக்ஸ் உள்ளது. இது தற்போது பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் தற்போது கஸ்டமைஸ்டு தார் ராக்ஸ் காரை டெலிவரி எடுத்துள்ளார். 2024 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தார் ராக்ஸ் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் ஜான் ஆபிரகாம் கலந்து கொண்டிருந்தார்.

ஜானின் தார் ராக்ஸில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

ஜான் ஆபிரகாமுக்கு வழங்கப்பட்ட யூனிட் அவருக்காக பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வெளிப்புற பேட்ஜ்களும் கறுப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சி-பில்லரில் ஒரு சிறப்பு ‘JA’ மோனிகர் ( ஜான் ஆபிரகாம்) என்ற எழுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இது முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்களிலும் உள்ளது. டேஷ்போர்டில் 'ஜான் ஆபிரகாமுக்காக தயாரிக்கப்பட்டது' என்ற தனித்துவமான பேட்ஜ் ஒன்றும் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைசேஷன்கள் தவிர மீதமுள்ள விவரங்கள் உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரியாக உள்ளன. இது டீசல் 4WD (ஃபோர்-வீல்-டிரைவ்) வேரியன்ட் என்பதால் கேபினில் மோச்சா பிரவுன் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜானிடம் இருக்கும் கார்கள்

ஜான் ஆபிரகாம் அதிகமாக பைக்குகளை விரும்புபவர் என்றாலும் கூட அவரது கார்களில் சேகரிப்பில் பிரபலமான நிஸான் ஜிடி-ஆர் மற்றும் இசுஸு வி-கிராஸ் பிக்கப் உள்ளிட்ட கார்கள் உள்ளன.

தார் ராக்ஸ் பற்றிய கூடுதல் விவரங்கள்

மஹிந்திரா தார் ராக்ஸ் காரை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது:

இன்ஜின்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

2.2 லிட்டர் டீசல்

பவர்

162 PS (MT)/ 177 PS (AT)

152 PS (MT)/ 175 PS வரை (AT)

டார்க்

330 Nm (MT)/ 380 Nm (AT)

330 Nm (MT)/ 370 Nm வரை (AT)

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT^

6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT

டிரைவ் டைப்

RWD^

RWD^/ 4WD

^RWD - ரியர் வீல் டிரைவ்

4WD - 4-வீல் டிரைவ்

இது டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே), ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்புக்காக ஸ்டாண்டர்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மற்றும் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை மற்றும் போட்டியாளர்கள்

மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை ரூ.12.99 லட்சம் முதல் ரூ.23.09 லட்சம் வரை உள்ளது. மேலும் 4-வீல் டிரைவ் வேரியன்ட்களின் விலை ரூ.19.09 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இது ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் மற்றும் மாருதி ஜிம்னி ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா -வுக்கானவை ஆகும்

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Mahindra தார் ROXX

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.2.84 - 3.12 சிஆர்*
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை