• English
  • Login / Register

ஃபேஸ்லிஃப்ட் டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரிக்கான பாரத் NCAP பாதுகாப்பு மதிப்பீடு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

டாடா ஹெரியர் க்காக அக்டோபர் 17, 2023 04:04 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 79 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பாதுகாப்பு மேம்பாடுகளின் ஒரு பகுதியாக இரண்டு எஸ்யூவி -களுக்கான கட்டமைப்பை வலுவூட்டும் இடத்தை ஒருங்கிணைத்துள்ளதாக டாடா கூறுகிறது

Tata Harrier and Safari facelifts

டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்  மற்றும் டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்  அறிமுகப்படுத்தப்படும் நிலையில் உள்ளன. நாங்கள் சமீபத்தில் இரண்டு எஸ்யூவி -களையும் ஓட்டிப் பார்த்தோம், அப்டேட்களால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம். இது தொடர்பான மீடியா நிகழ்ச்சியின் போது, புதிய ஹாரியர்-சஃபாரி இரண்டு கார்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் NCAP (புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம்) கிராஷ் டெஸ்ட்களுக்காக அனுப்பப்பட்டதை டாடா நிறுவனம் எங்களிடம் தெரிவித்தது.

என்ன திருத்தப்பட்டது?

ஃபேஸ்லிஃப்ட்டுடன், சைடு போல் இம்பாக்ட் சோதனைக்கான கட்டமைப்பு வலுவூட்டல்களை டாடா ஒருங்கிணைத்துள்ளது, மேலும் எஸ்யூவி -கள் முன்பக்க ஆஃப்செட் கிராஷ் சோதனையில் மட்டுமல்ல, முழு முன்பக்க தாக்க விபத்து சோதனையிலும் சிறந்த மதிப்பீடை பெறும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

Tata Harrier facelift airbagsபாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, இரண்டு எஸ்யூவி -களும் இப்போது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றை ஸ்டாண்டர்டாக பெறுகின்றன. அவற்றின் ஹையர் வேரியன்ட்கள் கூடுதல் ஏர்பேக் (டிரைவரின் முழங்காலை பாதுகாப்பதற்காக), 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றை பெறுகின்றன

ஹாரியர் மற்றும் சஃபாரி இரட்டையர்களின் முந்தைய-ஃபேஸ்லிப்ட் பதிப்புகள் குளோபல் NCAP -யால் மதிப்பீடு செய்யப்படாததால், எந்தவிதமான கிராஷ் சோதனைகளிலும் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன சோதனைகள் செய்யப்படும்

பாரத் NCAP -யின் சோதனை வசதியில், பாதுகாப்பு நிர்வாகக் குழு எஸ்யூவி -களை முன்பக்க ஆஃப்செட், பக்க தாக்கம் மற்றும் பக்கவாட்டுத் தாக்கம் போன்ற பல்வேறு சுற்று கிராஷ் சோதனைகள் செய்து பார்க்கும். முன்பக்க ஆஃப்செட் சோதனை 64 கிமீ வேகத்தில் நடத்தப்படும், அதே சமயம் பக்க தாக்கம் மற்றும் பக்கவாட்டுத் தாக்க சோதனைகள் முறையே 50 கிமீ மற்றும் 29 கிமீ வேகத்தில் நடத்தப்படும். சோதனை மதிப்பெண் வாகனத்தின் கட்டமைப்பு ஒருமைப்பாடு மற்றும் சலுகையில் பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்கள் ஆகியவற்றிலும் காரணியாக இருக்கும்.

இந்த சோதனைகளின் அடிப்படையில், பாரத் NCAP கார்களுக்கு கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டை வழங்கும், அவை வயது வந்தோர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு என பிரிக்கப்படும். இந்த அனைத்து நடவடிக்கைகளும் குளோபல் NCAP -யின் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்படுத்தப்பட்டுள்ளன.

Tata Punch at Global NCAP

குளோபல் NCAP -யால் பரிசோதிக்கப்பட்ட கடைசி டாடா கார், 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற பன்ச் வாகனம், ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்களும் பாரத் NCAP சோதனைகளில் 5 நட்சத்திரங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: பாரத் NCAPயில் சோதனையில் நாம் பார்க்க விரும்பும் சிறந்த 7 கார்கள்

ஒரே சோதனை ஆணையம்

ஆகஸ்ட் 2023 -ல் பாரத் NCAP அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது காலத்துக்குள்ளாகவே, குளோபல் NCAP 2024 ஆம் ஆண்டு முதல் இந்தியா சார்ந்த கார்களை சோதனை செய்வதை நிறுத்திவிட்டு, அந்த பொறுப்பானது இனிமேல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவித்தது. பாரத் NCAP - கார் தயாரிப்பாளர்களுக்கான தன்னார்வ அடிப்படையிலான மதிப்பீடாகும் (இப்போதைய நிலவரப்படி) - அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்தாலும், அது சோதனை செய்யப்பட்ட கார்களின் முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை.  ​​சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சரான நிதின் கட்கரி, இந்த தர மதிப்பிட்டை அறிமுகப்படுத்திய நேரத்தில்,  ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட கார்கள் சோதனைக்கு சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியிருந்தார்.

மேலும் படிக்க: பாரத் NCAP எதிராக  குளோபல் NCAP: ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன

டாடாவைத் தவிர, மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகியவை தங்களது சில எஸ்யூவி தயாரிப்புகளை பாரத் NCAP மூலம் கிராஷ்-டெஸ்ட் செய்ய அனுப்பியிருக்கலாம் என தெரிய வருகிறது, இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் எதிர்காலத்தில் நம் நாட்டில் கார் வாங்குபவர்களுக்கு இந்தியா-ஸ்பெக் கார்கள் பாதுகாப்பாகவும் சிறந்ததாகவும் இருப்பதை பாரத் NCAP உறுதி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தொடர்புடையது:  சிறந்த பாதுகாப்பிற்காக, பாரத் NCAP ஏற்கனவே கிராஷ் டெஸ்ட் அளவுருக்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது

மேலும் படிக்க: டாடா ஹாரியர் டீசல்

was this article helpful ?

Write your Comment on Tata ஹெரியர்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்Estimated
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்Estimated
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்Estimated
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்Estimated
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf3
    vinfast vf3
    Rs.10 லட்சம்Estimated
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience