• English
  • Login / Register

பாரத் NCAP vs குளோபல் NCAP : ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள்

published on ஆகஸ்ட் 24, 2023 01:49 pm by tarun

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பாரத் NCAP விதிகள் உலகளாவிய NCAP க்கு ஏற்ப உள்ளன; இருந்தாலும், நமது சாலை மற்றும் டிரைவிங் நிலைமைகளின் அடிப்படையில் இந்தியாவிற்கான குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Bharat NCAP vs Global NCAP

பாரத் NCAP -ன் அறிமுகத்தினால் பயணிகளின் பாதுகாப்பில் இந்தியா ஒரு படி முன்னேறியுள்ளது. இப்போது இந்தியாவில் விற்கப்படும் கார்களுக்கு பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்குவதற்காக உள்நாட்டிலேயே கிராஷ் டெஸ்ட் செய்ய முடியும். எவ்வாறாயினும், இந்த மதிப்பீட்டு முறையானது, சாலை சட்டத்திற்கு உட்பட்ட அடிப்படை ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்வதோடு உற்பத்தியாளர்களுக்கு ஒரு தன்னார்வ செயல்முறையாக உள்ளது. பாரத் NCAP 2023 ஆண்டு அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது.

          View this post on Instagram                      

A post shared by CarDekho India (@cardekhoindia)

 இதுவரை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கான கிராஷ்-டெஸ்ட் மதிப்பீடுகள், 'இந்தியாவுக்கான பாதுகாப்பான கார்கள்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக குளோபல் NCAP வழங்கி வருகிறது. இந்தியாவில் விற்கப்படும் புதிய கார்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பகிர்ந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிக மதிப்பீட்டைக் கொண்ட கார்களை வாங்குபவர்களிடையே மாறுவதைக் கவனித்த பிறகு, BNCAP அதன் சொந்த அளவுகோல்களை அமைக்க GNCAP தரநிலைகள் மற்றும் நெறிமுறைகளை பயன்படுத்தியது.

எந்த அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் ஒரே மாதிரியானவை?

NCAP -ன் இரண்டு பதிப்புகளிலும் பின்வரும் சோதனைகள் உள்ளன:

Mahindra Thar frontal impact test

  •  முன்பக்க இம்பாக்ட் முன்புற ஆஃப்செட் தடுப்பு சோதனைகள் மணிக்கு 64 கிமீ/மணி வேகத்தில் நடத்தப்படும். இதன் மூலம், தலை, கழுத்து, மார்பு, இடுப்பு மற்றும் முழங்கால் பகுதிகளில் ஏற்படும் பாதிப்பை மதிப்பீடு செய்யலாம்.

  •  சைடு போல் இம்பாக்ட்: சைடு போல் இம்பாக்ட் சோதனை 29 கிமீ/மணி வேகத்தில் செய்யப்படுகிறது. இந்த சோதனையில் வெற்றிபெற ஒரு காரில் ஆறு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

  •  சைடு பேரியர்: மணிக்கு 50 கிமீ/மணி வேகத்தில், அமர்ந்திருந்த பயணிகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக, காரின் பக்கவாட்டில் ஒரு தடுப்பு மோத வைக்கப்படும்.

  •  எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்; ESC என்பது செயல்படும் பாதுகாப்பு அம்சமாகும், இது டயர்கள் சறுக்குவதை தடுக்கிறது. கார்கள் ஸ்டாண்டர்டாக ESC பொருத்தப்பட்டிருக்க வேண்டும், அதற்கான சோதனையும் உள்ளது.  

  •  பாதசாரிகளுக்கு இணக்கமான முன்புற வடிவமைப்பு: கார்கள் இப்போது பாதசாரிகளுக்கு ஏற்ற பம்பர் மற்றும் பானட் வடிவமைப்பை கொண்டிருக்க வேண்டும், இது விபத்து ஏற்பட்டால் பாதசாரிகளுக்கு குறைந்தபட்ச காயமே ஏற்படும் என்பதை உறுதி செய்யும்.

அனைத்து கார்களும் அதிக பாதுகாப்பு மதிப்பீடுகளுக்கு இந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றிகரமாக தேர்ச்சி பெற வேண்டும்.

முன்புற ஆஃப்செட் சோதனைகள் மணிக்கு 64 கிமீ/மணி வேகத்தில் தொடர்ந்து நடத்தப்படும். சைடு பேரியர் சோதனை மணிக்கு 50கிமீ/மணி வேகத்திலும், சைடு சோதனை மணிக்கு 29கிமீ/மணி வேகத்திலும் செய்யப்படும். GNCAP விதிகளைப் போலவே, பாரத் NCAP ஆனது காரின் கட்டமைப்பு ஒருமைப்பாடு மற்றும் அதன் பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்களையும் கருத்தில் கொள்ளும்.

Hyundai Exter six airbags

3-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற, கார்களில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் முன்புற- வரிசை சீட் பெல்ட் நினைவூட்டல்கள் ஆகியவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்று விடுபட்டால், மதிப்பீட்டில் குறிப்பிட்ட புள்ளிகளைக் கழிக்க முடியும்.

மேலும் படிக்க: சோதனையின் போது தென்பட்ட Kia Sonet Facelift ;2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படலாம்

அதே மதிப்பெண்கள் மற்றும் நட்சத்திர மதிப்பீடுகள்

ஒன்று முதல் ஐந்து வரையிலான மதிப்பெண்களும் அப்படியே இருக்கும். ஒவ்வொரு நட்சத்திர மதிப்பீட்டிற்கும் தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் இதோ:

Global NCAP To Start Crash Tests In India By End Of 2023

 
பயணம் செய்யும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு

 
பயணம் செய்யும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு

 
நட்சத்திர மதிப்பீடு

 
மதிப்பெண்

 
நட்சத்திர மதிப்பீடு

 
மதிப்பெண்

 
5 நட்சத்திரங்கள்

27

 
5 நட்சத்திரங்கள்

41

 
4 நட்சத்திரங்கள்

22

 
4 நட்சத்திரங்கள்

35

 
3 நட்சத்திரங்கள்

16

 
3 நட்சத்திரங்கள்

27

 
2 நட்சத்திரங்கள்

10

 
2 நட்சத்திரங்கள்

18

உலகளாவிய NCAP நடைமுறைகளுக்கு இணங்கும்போது, ​​இறுதி மதிப்பெண்ணைத் தீர்மானிக்கும் நிலையில் தனிப்பட்ட அளவுருக்களுக்கான வெயிட்டேஜ் தொடர்பாகவும் பாரத் NCAP சில இந்தியா-குறிப்பிட்ட மாற்றங்களை காணும்.

என்ன வித்தியாசம் ?

குளோபல் NCAP இன்னும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் NCAP -ஐ விட முன்னணியில் இருப்பதால், இந்த நேரத்தில் பாரத் NCAP -ல்  சேர்க்கப்படாத சில பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளன.

Kia Seltos rear seatbelts

அதிக பாதுகாப்பு மதிப்பீடுகளுக்கான பின்புற இருக்கை பெல்ட் நினைவூட்டல்களுக்கான ஆணை முக்கியமானது. சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்பு இருக்கை பெல்ட் நினைவூட்டல் கட்டாயமாக்கப்படும் என்று கூறியிருந்தார், அதைத் தொடர்ந்து பல உற்பத்தியாளர்கள் தங்கள் கார்களை இந்த அம்சத்துடன் புதுப்பித்துள்ளனர்.

சோதனைகள் பெரும்பாலும் உலகளாவிய NCAP இன் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும், அரசாங்கம் இந்திய டிரைவிங் நிலைமைகள் மற்றும் சாலைகளையும் கணக்கில் எடுத்துள்ளது.

மேலும் படிக்க: டொயோட்டா ரூமியன், மாருதி எர்டிகா அடிப்படையிலான MPV, ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம்

காட்சிப்படுத்தப்படும் மதிப்பீடுகள்

கடைசியாக, பாரத் NCAP சோதனை செய்யப்பட்ட அனைத்து கார்களும் அவற்றின் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மதிப்பீட்டைக் காட்டும் ஸ்டிக்கர்களைக் கொண்டிருக்கும். மாடல், வேரியன்ட் பெயர் மற்றும் சோதனை ஆண்டு ஆகியவை ஸ்டிக்கரில் குறிப்பிடப்படும். PR பொருட்களைப் போலன்றி, BNCAP -லிருந்து நான்கு நட்சத்திரங்களுக்குக் குறைவான மதிப்பெண்களைப் பெற்ற கார்களுக்கும் இந்த ஸ்டிக்கர் பயன்படுத்தப்படலாம்.

இந்த சோதனை நடைமுறைகளை தொடர்ந்து புதுப்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது . க்ராஷ் டெஸ்ட் ஏஜென்சியானது, ரியர் கிராஷ் இம்பாக்ட் பாதுகாப்பு சோதனை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ADAS அம்சங்கள் (லேன் டிபார்ச்சர் எச்சரிக்கை, பிரேக் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங்) ஆகியவற்றை மதிப்பீட்டிற்கு கட்டாயமாக சேர்க்க திட்டமிட்டுள்ளது.

பாரத் NCAP க்ராஷ் டெஸ்ட் மதிப்பீடுகளுக்காக பல உற்பத்தியாளர்கள் ஏற்கனவே வரிசையில் நிற்கின்றனர். இந்த நடவடிக்கை உற்பத்தியாளர்களை பயணிகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த ஊக்குவிக்கும், இதனால் சாலை விபத்து இறப்புகள் குறையவும் வாய்ப்புள்ளது. 2023 அக்டோபர் முதல் நடைமுறைக்கு வந்தவுடன், பல கார்கள் கிராஷ் டெஸ்ட் செய்யப்படுவதை நம்மால் பார்க்க முடியும் என்று நம்புகிறோம்.

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • M ஜி Majestor
    M ஜி Majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience