எம்ஜி காமெட் EV -ன் பேட்டரி, ரேஞ்ச் மற்றும் அம்சங்களின் விவரங்கள் ஏப்ரல் 19 -ம் தேதியன்று வெளியாகின்றன.
published on ஏப்ரல் 12, 2023 05:18 pm by tarun for எம்ஜி comet ev
- 19 Views
- ஒரு கருத் தை எழுதுக
டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 க்கு போட்டியாக உள்ள காமெட் EV -யின் விலை சுமார் ரூ.10 லட்சம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எம்ஜி காமெட் EV என்பது இரண்டு கதவுகள், நான்கு இருக்கைகள் கொண்ட மின்சார ஹேட்ச்பேக் ஆகும்.
-
டூயல் 10.25 -இன்ச் டிஸ்ப்ளே ஸ்கீரீன்கள், இரட்டை முன்புற ஏர்பேக்குகள், ஆட்டோ ஏசி மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை இடம்பெறும்.
-
17.3kWh மற்றும் 26.7kWh பேட்டரி பேக்குகளுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இது 300 கிமீ வரை ரேஞ்சை வழங்குகிறது.
-
சுமார் ரூ.9 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் விலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி அதன் சிறிய EV ஐ பற்றிய தகவலை ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று வெளியிட உள்ளது , அதன் அறிமுகம் பின்னர் இருக்கும். காமெட் EV இன் முதல் டீசரை கார் தயாரிப்பாளர் வெளியிட்டிருக்கிறார், வீடியோ அதன் உட்புறத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.
எம்ஜி காமெட் EV ஆனது டாடா நானோவை விடவும் சிறிய நீளத்துடன் சிறிய ஃபுட்பிரிண்டுடன் உள்ளது. இது இரண்டு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் என்றாலும், நான்கு பேர் வரை இருக்கை வசதி இருக்கும். EV ஆனது உள்ளேயும் வெளியேயும் உற்சாகமான ஸ்டைலிங்கைக் கொண்டிருக்கும், மேலும் ஃப்ளாஷி வீல்கள் மற்றும் நேர்த்தியான எல்இடி டிஆர்எல் ஸ்ட்ரிப் போன்ற பல நவீன செட் அப்புகளுடனும் இருக்கும்.
மேலும் படிக்க: எம்ஜி காமெட் EV யைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
காமெட் EV இன் சமீபத்திய டீஸர் இரட்டை 10.25- இன்ச் டிஸ்பிளே (டச் ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் ஓட்டுனர் டிஸ்பிளே), தானியங்கி ஏசி மற்றும் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகளைக் காட்டுகிறது. இரட்டை முன்புற ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இது இந்தோனேசிய சந்தையில் வூலிங் அல்மாஸ் EV என்ற பெயரில் விற்கப்படுகிறது, அங்கு இது 17.3kWh மற்றும் 26.7kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களைப் பெறுகிறது. சிறிய பேட்டரி பேக் 200 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது மற்றும் பெரியது 300 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது. இதில் எந்த பேட்டரி பேக் காமெட்டை இயக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பேட்டரி 40PS வரை செயல்திறனை வழங்கும் மோட்டார் மூலம், பின்புற சக்கர டிரைவ் டிரெய்னுக்கு ஆற்றலை வழங்கும்.
மேலும் படிக்க: இந்தியாவில் வரவிருக்கும் எலக்ட்ரிக் கார்கள்
சிட்ரோன் eC3 மற்றும் டாடா டியாகோ EV
EVக்கு போட்டியாக இருக்கும் சிறிய நகர்ப்புற EV -யான எம்ஜி காமெட்டின் விலை ரூ.9 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. .
0 out of 0 found this helpful