• English
  • Login / Register

மாருதி ஃப்ரான்க்ஸின் பேஸ் கார் வேரியன்ட்டைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை: படங்களில்

published on மே 03, 2023 11:45 am by sonu for மாருதி fronx

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

சிக்மா கார் வேரியன்ட் மிகவும் அடிப்படையானது, ஆனால் வாங்கியதற்கு பின் சில பாகங்களை சேர்த்து இது அலங்கரிக்கப்படலாம்

Maruti Fronx Base Sigma Variant

சமீபத்தில் விற்பனைக்கு வந்த  மாருதி  ஃப்ரான்க்ஸ்  ரூ.7.46 இலட்சம்  முதல் ரூ.13.14 இலட்சம் விலையில் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி ) விற்கப்படும்.  இந்த ஹேட்ச்பேக் க்ராஸ்ஓவர் கார்- சிக்மா, டெல்டா, டெல்டா+, ஜெட்டா மற்றும் ஆல்பா ஆகிய 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது. நீங்கள் நேச்சுரலி  ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின்களை தேர்ந்தெடுக்கலாம், பிந்தையது டெல்டா + வேரியன்ட்யில் மட்டும் கிடைக்கும். பேஸ் கார் வேரியன்ட்பொதுவாக குறிப்பிட்ட பட்ஜெட்டில் உள்ளவர்களை ஈர்க்கிறது, வாங்கிய பின்னர் காரில் பாகங்களையும்  சேர்க்கும் திட்டங்களுடன் வருகிறது.  வருங்காலங்களில் ஃபிராங்க்ஸ் வாங்குபவரும் அதைப் பற்றியே யோசிக்கிறார் என்றால், பேஸ்-ஸ்பெக் சிக்மா வேரியன்ட்டைப் பற்றிய விரிவான பார்வை இங்கே:

முன்பக்கத்தில், LED முகப்பு விளக்குகளுக்கு பதிலாக, ஃப்ராங்க்ஸில் ஹாலோஜன் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் வழங்கப்படுகின்றன. ஸ்கிட் பிளேட், கிரிலில் உள்ள க்ரோம் மற்றும் நேர்த்தியான டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவை டாப்-எண்ட் காரில் காணப்படுவதைப் போலவே உள்ளன. LED DRL கள் கூட இங்கு இல்லை, அவை LED முகப்பு விளக்குகளுடன், மிட்-ஸ்பெக் டெல்டா + காரில் கிடைக்கின்றன.

Maruti Fronx Sigma Variant

பேஸ் காரில்  கவர்களுடன் கூடிய 16 இன்ச் ஸ்டீல் சக்கரங்கள் உள்ளன. இங்கு ஒரு நல்ல சிறப்பம்சம் என்னவென்றால், அனைத்து கார் வேரியன்ட்களும் ஒரே வீல் சைஸைப் பெறுகின்றன.

Maruti Fronx Sigma Variant

பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயிலிங் அனைத்து வேரியன்ட்களுக்கும் தரமானவை. இருப்பினும், பேஸ் சிக்மா கிரேடு, உடல் வண்ண ORVM,, கண்ணாடி பொருத்தப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் புற ஊதா-மௌன்டட் கண்ணாடி ஆகியவற்றை இது கொண்டிருக்கவில்லை.  

மேலும் படிக்கவும்: 6 படங்களில் மாருதி ஃப்ராங்க்ஸ் டெல்டா+ காரின் விவரங்கள்

Maruti Fronx Sigma Variant

பிரஷ் செய்யப்பட்ட சில்வர் கூறுகளுடன் கூடிய டூயல்-டோன் கறுப்பு மற்றும் பழுப்பு உட்புற தீம் அனைத்து கார் வேரியன்ட்களுக்கும் ஸ்டாண்டர்டாக இருக்கிறது, இது அடிப்படை வேரியன்ட்டில் கூட சற்று பிரீமியம் தோற்றமளிக்கிறது. இருப்பினும், உபகரணங்களைப் பொறுத்தவரை, இது மிகவும் அடிப்படையானது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அல்லது டிஎஃப்டி மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே இல்லாததால் ஸ்டீயரிங் வீல் எந்த கட்டுப்பாடுகளையும் பெறவில்லை, ஆனால் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டாப்-எண்ட் ஆல்பா காரைப்போலவே உள்ளது. ஃபேப்ரிக் இருக்கைகள் கூட அனைத்து வேரியன்ட்களுக்கும் ஸ்டாண்டர்டாக கிடைகின்றன.

Maruti Fronx Sigma Variant

ஹையர் வேரியன்ட் கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டுக்கு பதிலாக, பேஸ் கார்களில் சிறிய இடைவெளியுடன் ஒரு பெரிய பிளாஸ்டிக் ஹௌசிங் மட்டுமே உள்ளது. இது சந்தைக்குப் பிந்தைய டச் ஸ்கிரீன் சிஸ்டத்தை பொருத்துவதற்கான வாய்ப்பை உங்களுக்கு அனுமதிக்கிறது. USB சார்ஜிங் சாக்கெட்டுகள் கூட பார்க்க முடியவில்லை, அதே நேரத்தில் நீங்கள் இன்னும் 12V சாக்கெட்டைப் பெறுவீர்கள். இருப்பினும், ஆட்டோமேட்டிக் ஏசி பேஸ் காரிலிருந்து அதே கண்ட்ரோல் பேனலுடன் அப்மார்க்கெட் உணர்வோடு கிடைக்கிறது.

Maruti Fronx Sigma Variant

ஃபிரான்க்ஸ் சிக்மா கார்கீலெஸ் என்ட்ரியைப் பெறுகிறது, ஆனால் புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப், டாப்-எண்ட் ஆல்பா மற்றும் ஜெட்டா வேரியன்ட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. டிராக்ஷன் கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமெட்டிக் ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸடம் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது, இதை வசதிக்கு ஏற்ப ஆஃப் செய்து கொள்ளலாம்.

Maruti Fronx Sigma Variant

முன்பக்க இருக்கைகளின் பின்புறத்தில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இல்லை. இது சென்டர் கன்சோலின் முடிவில் இரண்டு துளைகள் மற்றும் 12 வோல்ட் சாக்கெட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பின்புற பயணிகள் சார்ஜ் போடும் போது தங்கள் தொலைபேசிகளை நிறுத்திவைக்க முடியும். இதற்கிடையில், ரியர் ஏசி வென்ட்கள் ஒன்-அண்டர்-டாப் ஜெட்டா காரிலிருந்து வழங்கப்படுகின்றன.

Maruti Fronx Sigma Variant

சிக்மா வேரியன்ட் ஐந்து-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 90PS, 1.2-லிட்டர், பெட்ரோல்-இன்ஜினைப் பெறுகிறது டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வேரியன்ட்களில் 5 ஸ்பீடு AMT கொண்ட இந்த இன்ஜினை தேர்வு செய்யலாம். மற்றொரு இன்ஜின் 100 PS 1 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் ஆகும், இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஏடி தேர்வுகளைப் பெறுகிறது.

மேலும் படிக்கவும்: மாருதி ஃப்ராங்க்ஸ் விலைகள் Vs டாடா பன்ச் மற்றும் நெக்ஸான் விலைகள் ஒப்பீடு 

ஃபிரான்க்ஸுக்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை, ஆனால் மாருதியின் சொந்த தயாரிப்பு வரிசையில் பலேனோ மற்றும் பிரெஸ்ஸாவுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் சப்காம்பேக்ட் SUV களுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்கவும்: ஃப்ராங்க்ஸ் AMT

was this article helpful ?

Write your Comment on Maruti fronx

1 கருத்தை
1
N
narayan rathi
May 19, 2023, 11:20:10 AM

Milege is missing in manual book

Read More...
    பதில்
    Write a Reply

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • க்யா syros
      க்யா syros
      Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • டாடா சீர்ரா
      டாடா சீர்ரா
      Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • நிசான் பாட்ரோல்
      நிசான் பாட்ரோல்
      Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
      அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • டாடா பன்ச் 2025
      டாடா பன்ச் 2025
      Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • டாடா சீர்ரா ev
      டாடா சீர்ரா ev
      Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    ×
    We need your சிட்டி to customize your experience