• English
  • Login / Register

குளோபல்-ஸ்பெக் வெர்ஷனுடன் ஒப்பிடும்போது இந்தியா-ஸ்பெக் 2024 Nissan X-Trail கார் தவறவிட்ட 7 விஷயங்கள்

published on ஆகஸ்ட் 05, 2024 05:33 pm by dipan for நிசான் எக்ஸ்-டிரையல்

  • 31 Views
  • ஒரு கருத்தை எழுதுக

12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற குளோபல்-ஸ்பெக் மாடலில் வழங்கப்படும் சில முக்கிய வசதிகள் இந்தியா-ஸ்பெக் X-டிரெயில் காரில் கொடுக்கப்படவில்லை.

நிஸான் X-டிரெயில் பத்தாண்டுகளுக்கு பிறகு இப்போது இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் நான்காவது தலைமுறை அவதாரத்தில் ரூ. 49.92 லட்சம் (அறிமுக X-ஷோரூம் பான்-இந்தியா) விலையில் இது விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மாடல் காரில் சில அடிப்படை விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் குளோபல் பதிப்பில் காணப்படும் பல பிரீமியம் வசதிகள் இதில் கொடுக்கப்படவில்லை. இந்தியா-ஸ்பெக் X-டிரெயில் ஆனது அதன் குளோபல் காருடன் ஒப்பிடும்போது எதையெல்லாம் தவறவிடுகிறது என்பதைப் பாருங்கள்:

12.3 இன்ச் டச் ஸ்கிரீன்

The global-spec Nissan X-Trail gets a 12.3-inch touchscreen

குளோபல்-ஸ்பெக் X-டிரெயில் ஆனது 12.3-இன்ச் டச் ஸ்கிரீனை பெறுகிறது. ஆனால் இந்திய மாடல் 8-இன்ச் யூனிட் உடன் மட்டுமே வருகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே தவிர, பெரும்பாலான கனெக்டட் கார் வசதிகள் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இரண்டு மாடல்களும் ஒரே 12.3-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேவை பகிர்ந்து கொள்கின்றன.

ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே

2024 Nissan X-Trail does not get a heads-up display in India

உலகளவில் விற்கப்படும் நிஸான் X-டிரெயில் ஆனது வேகம் மற்றும் நேவிகேஷன் போன்ற முக்கியமான தகவல்களைக் காட்டும் வண்ணமயமான ஹெட்ஸ்-அப் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இருப்பினும் இந்த வசதி இந்திய மாடலில் இல்லை.

ADAS

குளோபல் மாடலில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன்-கீப்பிங் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகளுடன் விரிவான அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பைப் பெறுகிறது. இத்தகைய ADAS வசதிகள் இந்தியா-ஸ்பெக் மாடலில் இல்லை.

மேலும் படிக்க: Nissan X-Trail ரிவ்யூ: மிகவும் தாமதமாக வந்துள்ளதா ?

இ-பவர் இன்ஜின் மற்றும் AWD டிரைவ்டிரெய்ன்

Global-spec Nissan X-Trail gets two more engine options than the India-spec model

குளோபல் மாடலில் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

விவரங்கள்

நிஸான் X-டிரெயில்

இன்ஜின்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

இ பவர் சக்தி (ஹைபிரிட்)

டிரைவ்டிரெய்ன்

FWD*

FWD*

AWD*

பவர்

163 PS

204 PS

213 PS

டார்க்

300 Nm

300 Nm

525 Nm வரை

மணிக்கு 0-100 கி.மீ

9.6 வினாடிகள்

8 வினாடிகள்

7 வினாடிகள்

*FWD = ஃபிரன்ட் வீல் டிரைவ் ; AWD = ஆல்-வீல் டிரைவ்

இந்தியா-ஸ்பெக் மாடல் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் ஃபிரன்ட்-வீல் டிரைவ் உடன் மட்டுமே வழங்கப்படுகிறது, இது வெவ்வேறு நிலப்பரப்புகளுக்கு குறைவான பல்துறை திறன் கொண்டது.

மேலும் படிக்க: 2024 Nissan X-Trail: காரில் கிடைக்கும் அனைத்து வசதிகளின் விவரங்கள்

10-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம்

இந்தியா-ஸ்பெக் X-டிரெயில் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் வருகிறது. அதே நேரத்தில் குளோபல் மாடலில் அதிக பிரீமியமான 10-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டத்துடன் உள்ளது.

லெதர் சீட் அப்ஹோல்ஸ்டரி

Global-spec Nissan X-Trail gets leather seats

குளோபல்-ஸ்பெக் நிஸான் X-டிரெயில் இருக்கைகளில் அதிக பிரீமியம்-ஃபீலிங் லெதர் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா-ஸ்பெக் மாடலில் இருக்கைகள் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகின்றன. மேலும் ஸ்டீயரிங் மட்டும் லெதர் ஃபினிஷ் கொண்டுள்ளது. 

எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள்

குளோபல் X-டிரெயில் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இந்தியா-ஸ்பெக் மாடலில் மேனுவலாக சரி செய்து கொள்ளக்கூடிய இருக்கைகள் மட்டுமே உள்ளன மற்றும் வென்டிலேஷன் வசதிகள் இல்லை.

இந்தியா-ஸ்பெக் நிஸான் X-டிரெயிலில் இந்த வசதிகளில் எதை நீங்கள் விரும்புவீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில்  உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: நிஸான் X-டிரெயில் ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Nissan எக்ஸ்-டிரையல்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • M ஜி Majestor
    M ஜி Majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience