Nissan X-Trail ரிவ்யூ: மிகவும் தாமதமாக வந்துள்ளதா ?
Published On ஜூலை 25, 2024 By arun for நிசான் எக்ஸ்-டிரையல்
- 1 View
- Write a comment
எக்ஸ்-டிரெயில் மிகவும் விரும்பத்தக்கதுதான் என்றாலும் கூட அதிலுள்ள சில குறைபாடுகள் ஏற்றுக்கொள்ளவே முடியாததாக இருக்கலாம்.
நிஸான் எக்ஸ்-டிரெயில் நடுத்தர அளவிலான பிரிவில் 7 இருக்கைகள் கொண்ட சொகுசு எஸ்யூவி ஆகும். 2020 ஆண்டில் உலகளவில் அறிமுகமான எஸ்யூவி இப்போது அதன் நான்காவது தலைமுறை கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் எக்ஸ்-டிரெயில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் மோசமான விற்பனையின் காரணமாக 2014 ஆண்டில் விற்பனை நிறுத்தப்பட்டது.
நிஸான் எக்ஸ்-டிரெயிலின் போட்டியாளர்களாக ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவை இருக்கின்றன. மேலும் இதேபோன்ற பட்ஜெட்டில் எம்ஜி குளோஸ்டர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற பெரிய எஸ்யூவி -களையும் நீங்கள் பரிசீலிக்கலாம். மாற்றாக நீங்கள் குறைவாக செலவு செய்ய விரும்பினால் போன்ற ஆப்ஷன்கள் மஹிந்திரா XUV700 மற்றும் டாடா சஃபாரி (நேரடி போட்டியாளர்கள் இல்லையென்றாலும்) கணிசமாக குறைந்த பணத்திற்கு கிடைக்கும்.
இந்திய சந்தையைப் பொறுத்தவரை X-டிரெயில் என்பது முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட எஸ்யூவி -யாக இருக்கும். இது ஜப்பானில் உருவாக்கப்பட்டது. புதிய எக்ஸ்-டிரெயிலை நீங்கள் கவனத்தில் வைக்க வேண்டுமா?
வெளிப்புறம்
இது முற்றிலும் தனித்துவமானது மற்றும் நாம் பார்க்கும் வழக்கமான கார்களில் இருந்து வேறுபட்டது என்பதால் நிஸான் எக்ஸ்-டிரெயில் சாலையில் செல்லும் போது சிலரது கவனத்தை ஈர்க்கும் என்பது உறுதி. வடிவமைப்பை பொறுத்தவரையில் நிஸான் கடினமான தோற்றமுடைய எஸ்யூவி -யை நவீன அர்பன் பாணியுடன் மிக்ஸ் செய்ய முயற்சித்துள்ளது. இங்கே ஷார்ப்பான கட்ஸ் அல்லது ஃபோல்டுகள் எதுவும் இல்லை. மேலும் X-டிரெயிலின் வடிவமைப்பு பல வருடங்கள் கழித்து பார்த்தாலும் கூட புத்தம் புதியதாக இருக்கும்.
முன்பக்கத்திலிருந்து பெரிய கிரில் மற்றும் ஸ்பிலிட் ஹெட்லேம்ப்கள் கவனத்தை ஈர்க்கின்றன. வித்தியாசமாக உள்ள LED டேடைம் ரன்னிங் லைட்ஸ் மற்றும் ஆல் LED ஹெட்லேம்ப்களை பெற்றாலும் இண்டிகேட்டர்களில் ஹாலோஜன் லைட்களே கொடுக்கப்பட்டுள்ளன. நிஸான் இங்கே ஹாலோஜன் லைட்களை தவிர்த்திருக்க்கலாம்.
பக்கவாட்டு தோற்றம் எக்ஸ்-டிரெயிலின் அளவை முழுமையாகக் காட்டுகிறது. இது கிட்டத்தட்ட 4.7 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் பெரிய 20-இன்ச் அலாய் வீல்கள் உறுதியான தோற்றத்தை காட்டுகின்றன.
ஸ்மோக்டு டெயில் லைட்ஸில் சில LED எலமென்ட்களுடன் பின்புறம் மிகவும் எளிமையாக வைக்கப்பட்டுள்ளது. இங்கேயும் இண்டிகேட்டர்களுக்கு நிஸான் வித்தியாசமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாலோஜன் லைட்களையே கொடுத்துள்ளது.
X-டிரெயில் 3 கலர்களில் கிடைக்கிறது: பேர்ல் ஒயிட், ஷாம்பெயின் சில்வர் மற்றும் டயமண்ட் பிளாக். X-டிரெயில் வொயிட் ஷேடில் அதன் அளவு மற்றும் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது சிறப்பாகத் தெரிகிறது.
உட்புறம்
நிஸான் எக்ஸ்-டிரெயிலின் ஒரு நேர்மறையான விஷயம் என்னவென்றால் இதன் கதவுகளை குறிப்பிடத்தக்க 85 டிகிரி வரை திறக்க முடியும். இது எஸ்யூவி -யின் உள்ளே மற்றும் வெளியே செல்வதை மிகவும் எளிதாக்குகிறது. எக்ஸ்-டிரெயிலுக்குள் நீங்கள் ஏற கடுமையாக முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை - இது குடும்பத்தில் உள்ள பெரியவர்களால் பாராட்டப்படும்.
கேபினின் எளிய வடிவமைப்பு மற்றும் பிளாக்-பெய்ஜ் வண்ண தீம் இனிமையானதாக உணர்கிறது. தரத்தைப் பொறுத்தவரை எக்ஸ்-டிரெயில் அதிலிருந்து எதிர்பார்க்கப்படுவதைத் துல்லியமாக வழங்குகிறது. டாஷ்போர்டு மற்றும் கிராஷ் பேடின் மேல் பாதியில் சாஃப்ட்-டச் மெட்டீரியல்களின் தாராளமான பயன்பாடு உள்ளது. கிளைமேட் கன்ட்ரோல்களுக்கான பட்டன்கள் மற்றும் சுவிட்சுகள் பவர் ஜன்னல்கள் மற்றும் ஸ்டால்க்ஸ் ஆகியவை நன்றாக கட்டமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் செலவை குறைப்பதற்கான மற்றொரு சந்தர்ப்பத்தில் நிஸான் இருக்கைகள் மற்றும் டோர் பேட்களில் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியை கொடுத்துள்ளது. கிரே கலர் சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. மற்றும் X-டிரெயில் வழங்கும் பிரீமியம் அனுபவத்துடன் சரியாகப் பொருந்தவில்லை. அதிர்ஷ்டவசமாக இருக்கைகள் வசதியானவை மற்றும் பெரிய பிரேம்களுக்கு இடமளிக்கின்றன.
இரண்டாவது வரிசையில் போதுமான இடம் உள்ளது. 6 அடி உயர ஓட்டுநருக்குப் பின்னால் ஆறு அடி இருப்பவர் வசதியாக இருப்பார். மூன்று பேர் வசதியாக உட்காருவதற்கு போதுமான அகலம் உள்ளது மேலும் பரந்த சன்ரூஃப் இருந்தாலும் போதுமான ஹெட்ரூம் உள்ளது. இருப்பினும் இருக்கையுடன் ஒப்பிடும்போது தரை மிகவும் உயரமாகத் தோன்றுவதால் தொடையின் கீழ் ஆதரவு சற்று குறைவாகவே இருந்தது போல தோன்றியது.
நீங்கள் பின் இருக்கையை முன்னோக்கி/பின்னோக்கி ஸ்லைடு செய்யலாம். மற்றும் அதன் சாய்வையும் சரிசெய்யலாம். இதன் மூலம் மூன்றாவது வரிசையில் தங்குபவர்கள்/சாமான்களுக்கு எளிதாக இடம் கொடுக்கலாம். எக்ஸ்-டிரெயிலில் கேப்டன் இருக்கை ஆப்ஷன் இல்லை. இருப்பினும் இரண்டாவது வரிசை 40:20:40 என பிரிவதால் கேப்டன் இருக்கை உணர்விற்காக நடு இருக்கையை தனித்தனியாக மடிக்கலாம். வசிப்பவர்கள் ஏசி வென்ட்கள் மற்றும் சார்ஜிங் போர்ட்கள் கிடைக்கும். ஆனால் சன் ப்ளைண்ட்கள் கொடுக்கப்படவில்லை.
மூன்றாவது வரிசையைப் பொருத்தவரை இது குழந்தைகளுக்கு அல்லது சில நேரங்களில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்றது. சிறிய பயணங்களுக்கு கூட பெரியவர்களுக்கு கிடைக்கும் இடம் போதுமானதாக இல்லை. விஷயங்களை மோசமாக்குவது என்னவென்றால் இரண்டாவது வரிசையில் ஒரு டச் டம்பிள் ஃபங்ஷன் இல்லை. மேலும் கதவுக்கும் இரண்டாவது வரிசைக்கும் இடையே உள்ள இடைவெளி மூன்றாவது வரிசைக்குள் நுழைவதற்கு மிகவும் தடைபட்டது போல இருக்கிறது.
நடைமுறையின் அடிப்படையில் எக்ஸ்-டிரெயில் உங்களுக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. அனைத்து கதவுகளிலும் நல்ல அளவிலான பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன முன்பக்கத்தில் மையப் பகுதியில் ஃபோன் பிளேட், கப்ஹோல்டர்கள் கீழே ஒரு அலமாரி மற்றும் ஆர்ம்ரெஸ்டின் கீழ் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. பின்புறத்தில் உள்ள சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் இரண்டு கப் ஹோல்டர்கள் மற்றும் ஒரு ஃபோன் ஹோல்டரை பெறுகின்றன. அதேசமயம் மூன்றாவது வரிசையில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கென தனிப்பட்ட ஸ்டோரேஜ் கிடைக்கும்.
பூட் ஸ்பேஸ்
நீங்கள் X-டிரெயில் காரை 7 இருக்கைகளாக பயன்படுத்தினால் பூட் பகுதியில் எந்த இடமும் மிச்சம் இருக்காது. நீங்கள் ஒரு கேபின் அளவிலான டிராலி பையில் (அல்லது இரண்டு) அல்லது ஒரு ஜோடி டஃபிள் பைகளை அடக்கி வைக்கலாம். மூன்றாவது வரிசையை 50:50 ஸ்பிளிட் அல்லது முழுவதுமாக மடிக்கலாம். இது உங்களுக்கு நிறைய லக்கேஜ் இடத்தை வழங்குகிறது. 5-6 கேபின் அளவிலான டிராலி பேக்குகளை நீங்கள் எளிதாக இங்கு வைக்கலாம். எக்ஸ்-டிரெயிலை 5 இருக்கைகளாகப் பயன்படுத்தும் போது லக்கேஜ் அட்டையையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பூட் தளத்தின் கீழ் இதைச் வைத்துக் கொள்வதற்கென ஒரு பிரத்யேக இடம் உள்ளது.
வசதிகள்
நிஸான் எக்ஸ்-டிரெயில் ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இந்த பிரிவில் உள்ள வாகனத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அடிப்படை வசதிகளை இது உள்ளடக்கியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேறு எதுவும் கிடைக்காது.
பனோரமிக் சன்ரூஃப் டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் வயர்லெஸ் சார்ஜிங் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் வைப்பர்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை ஹைலைட்ஸ் ஆக இருக்கின்றன.
வசதிகள் |
குறிப்புகள் |
12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே |
ரெசொல்யூஷன் மற்றும் தெளிவு ஆகிய விஷயங்கள் எதிர்பார்த்தது போல் உயர் தரத்தில் உள்ளன. டிஸ்பிளேயில் இரண்டு வித்தியாசமான காட்சிகள் உள்ளன. ஆனால் டிரைவ் மோடுகளின் அடிப்படையில் மாறக்கூடிய தீம்கள் அல்லது தோற்றங்கள் எதுவும் இல்லை. |
8 இன்ச் டச் ஸ்கிரீன் |
மிகவும் சிறியதாகத் தோன்றுகிறது. மற்றும் பயன்படுத்துவதற்கு சற்று மெதுவாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வயர்டு (டைப்-ஏ மற்றும் டைப்-சி போர்ட்கள் இரண்டும் வழியாக) வசதி கிடைக்கும். உலகளாவிய மாடல்களில் 12.3” டச் ஸ்கிரீன் உள்ளது. |
6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் |
இந்த செட்டப் அடிப்படையானது . நீங்கள் உயர்தர ஆடியோவை விரும்பினால் வெளியிடத்தில் சவுண்ட் சிஸ்டத்தை அப்டேட் செய்வது ஒன்றே வழி . உலகளாவிய மாடல்களில் BOSE பிராண்டட் 10-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. |
360° கேமரா |
கேமராவின் ரெசொல்யூஷன் மற்றும் தெளிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. ரியர் வியூ கேமரா ஃபீடில் டைனமிக் நேவிகேஷன்கள் உள்ளன. லேன் சேஞ்ச் கேமரா வழங்கப்படவில்லை மற்றும் தனிப்பட்ட இடது/வலது/முன் காட்சிகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. 360° காட்சியானது மேல் 'பேர்டு-ஐ' வியூ -க்கு மட்டுமே. |
அதன் பிரிவில் நிஸான் எக்ஸ்-டிரெயில் சில விடுபட்ட வசதிகளைக் கொண்டுள்ளது:
லெதர் அப்ஹோல்ஸ்டரி |
பவர்டு முன் இருக்கைகள் |
சீட் வென்டிலேஷன் |
பவர்டு டெயில்கேட் |
பின்புற சன்பிளைண்ட்ஸ் |
மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ஆம்பியன்ட் லைட்ஸ் |
செயல்திறன்
நிஸான் இந்தியா 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினுடன் எக்ஸ்-டிரெயிலை வழங்குகிறது. இந்த இன்ஜின் 163PS பவரையும் 300Nm டார்க்கையும் உருவாக்குகிறது மேலும் முன் சக்கரங்களுக்கும் பவரை கொடுக்கிறது. ஹைப்ரிட் டீசல் அல்லது ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை. ஒரே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் CVT ஆட்டோமேட்டிக் மட்டுமே கிடைக்கும்.
நீங்கள் எதிர்பார்ப்பது போல் எஸ்யூவி வேகமடையும் விதத்தில் உற்சாகமான உணர்வை தரவில்லை. 0-100 கிமீ/மணி வேகத்தை எட்டுவதற்கு இந்த கார் எடுக்கும் நேரம் 9.6 வினாடிகள் என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் வேகமான எஸ்யூவி -யை விரும்பினால் ஃபோக்ஸ்வேகன் டைகுன்/ஸ்கோடா கோடியாக் போன்ற எஸ்யூவி -களை கருத்தில் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வாகனம் தினசரி பயன்பாட்டிற்கு போதுமான பவரை கொண்டுள்ளதாக இருக்கிறது. நிதானமான நகர ஓட்டத்திற்கு குறைந்த வேகத்தில் இன்ஜினின் ரெஸ்பான்ஸ் திருப்திகரமாக உள்ளது. CVT உடன் ஆக்ஸலரேஷன் மென்மையாகவும் தாமதமில்லாமலும் இருக்கும்.
ஹைவே டிரைவ்களுக்கு 100-120கிமீ வேகத்தில் நீங்கள் ஒட்டினால் அதையே X-டிரெயில் விரும்புகிறது. இருப்பினும் நீங்கள் அதைத் தள்ள விரும்பினால் அதன் அதிகபட்ச வேகமான சுமார் 200 கி.மீ வேகத்தை எட்டுவதற்கு காருக்கு எந்த தயக்கமும் இருக்காது. இங்கே எக்ஸ்-டிரெயிலின் சிவிடி வழக்கமான ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸை பிரதிபலிக்கிறது மற்றும் டிரைவை மேலும் உற்சாகப்படுத்தும் முயற்சியில் ரெட்லைனில் 'அப்ஷிஃப்ட்' செய்கிறது.
சவுண்ட் இன்சுலேஷன் தனித்து தெரிகிறது. வெளிப்புற சூழலில் இருந்து வரும் சத்தம் அதிர்வு மற்றும் கடுமை ஆகியவை கேபினுக்குள் அரிதாகவே உள்ளே கேட்கக்கூடியதாகவே இருக்கிறது.
சவாரி தரம் மற்றும் வசதி
பெரிய 20-இன்ச் சக்கரங்களுடன் X-டிரெயிலின் சவாரி வசதி சமரசம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். அதிர்ஷ்டவசமாக அது அப்படி இல்லை. சஸ்பென்ஷன் உறுதியானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடினமானதாக நிலையில் இல்லை.
குறைந்த வேக சவாரி மிகவும் நன்றாக உள்ளது மற்றும் நீங்கள் தொந்தரவாக உணர மாட்டீர்கள். கேபினுக்குள்ளும் இது சுற்றித் தள்ளாது. இதேபோல் அதிவேக நிலைத்தன்மை என்பது எஸ்யூவி -யின் இந்த அளவு மற்றும் உயரத்தில் இருந்து நீங்கள் விரும்புவது ஆகும். இது உடைந்த மேற்பரப்புகள் மற்றும் குழிகளுக்கு மேல் மட்டுமே உள்ளது திருப்பங்கள் சில லேசான பக்கவாட்டு அசைவுகளில் மட்டுமே சிறிது உணர்வை கொடுப்பதை நீங்கள் உணரலாம்.
இங்கேயும் சஸ்பென்ஷன் அமைதியாக வேலை செய்கிறது. குடும்பத்துடன் நிதானமான சாலைப் பயணங்களில் உங்களுடன் வருவதற்கு நீங்கள் ஒரு எஸ்யூவி -யை தேடுகிறீர்களானால் X-டிரெயில் ஏற்றதாக இருக்கும்.
பாதுகாப்பு
புதிய நிஸான் X-டிரெயில் 2024 காரில் வழக்கமான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன: 7 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. ஒட்டுமொத்த தொகுப்பில் இல்லாதது ADAS இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது. பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், ரியர் கிராஸ் ட்ராஃபிக் அலர்ட் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகள் எக்ஸ்-டிரெயிலின் பாதுகாப்பை அதிகரித்திருக்கும்.
EuroNCAP அமைப்பிலிருந்து X-டிரெயில் முழுமையாக 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. இருப்பினும் சோதனை செய்யப்பட்ட மாதிரி ADAS உடன் இருந்தது என்பதை நினைவில் வைக்கவும்.
தீர்ப்பு
எக்ஸ்-டிரெயில் முழு இறக்குமதியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்பதால் இதன் விலை சுமார் ரூ. 50 லட்சம் ஆக இருக்கலாம். எனவே பணத்திற்கான மதிப்பின் அடிப்படையில் நிஸான் எக்ஸ்-டிரெயிலை நியாயப்படுத்துவது கடினமான விஷயம்தான். லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ADAS போன்ற சில பிரீமியம் வசதிகள் இதை மிகச் சிறப்பான கார் என்பதை சொல்வதை தவிர்க்க வைக்கின்றன.1.5-லிட்டர் பெட்ரோல் மோட்டாரின் செயல்திறன் எந்த வகையிலும் உற்சாகமாக இல்லை ஆனால் போதுமானதாக இருக்கிறது. இது ஒரு திடமான வடிவமைப்பு, இரண்டாவது வரிசை இடம் மற்றும் சவாரி வசதிக்கான அடிப்படை விஷயங்களை பெற்றுள்ளது. மேலும் இது நம்பகமான ஜப்பானிய இன்ஜினியரிங் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை இதன் கூடுதல் பலமாக பார்க்க முடியும்.