2024 Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்
Published On ஜனவரி 19, 2024 By nabeel for ஹூண்டாய் கிரெட்டா
- 1 View
- Write a comment
இந்த அப்டேட்கள் கிரெட்டாவை மேம்படுத்தியுள்ளன, அவை இந்த காரை தேர்ந்தெடுக்க உதவுகின்றனவா .?
2024 ஹூண்டாய் கிரெட்டா -வின் விலை ரூ. 12-22 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் கியா செல்டோஸ், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலிவேட், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மாடல்களுடன் போட்டியிடும். ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவை இதற்கான மாற்றாக இருக்கின்றன. டாடா ஹாரியர், MG ஹெக்டர் மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவற்றின் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களும் இதேபோன்ற விலை வரம்பில் இருப்பதால் அவற்றையும் நாம் கருத்தில் கொள்ளலாம்.
தோற்றம்
ஹூண்டாய் கிரெட்டாவின் வடிவமைப்பை முழுமையாக அப்டேட் செய்துள்ளது, புதிய மற்றும் தனித்துவமான தோற்றத்தை இதற்கு அளித்துள்ளது. புதிய பானட், துல்லியமான லைன்கள் மற்றும் பெரிய கிரில் ஆகியவற்றுடன் ஒரு கம்பீரமான டார்க் குரோம் ஃபினிஷ் கொண்ட முன்பக்கம் மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. டேடைம் ரன்னிங் லைட்ஸ் மற்றும் சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவை காருக்கு நவீன தோற்றத்த்தை கொடுக்கின்றன.
பக்கவாட்டில் காரை பார்க்கும் போது கிரெட்டாவின் சிக்னேச்சர் சில்வர் டிரிம் முன்பு இருந்த மாடலில் உள்ளதை போலவே உள்ளது, அதே சமயம் டாப்-எண்ட் மாடலில் உள்ள 17-இன்ச் அலாய் வீல்கள் புதிய வடிவமைப்பைப் காட்டுகின்றன. பின்புறம், முன்பு வித்தியாசமாக இருந்தது, இப்போது பெரிய, கனெக்டட் டெயில் லேம்புடன் கூடிய சிறப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
உட்புறம்
புதிய டாஷ்போர்டு வடிவமைப்பில் இடம் இரண்டு பிரிவுகளாக நேர்த்தியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில் பெரிய அளவில் மாற்றமில்லை, அதே சமயம் மேல் பகுதி ஒரு முழுமையாக புதிய வடிவமைப்பை பெறுகிறது, மேலும் உயர்தர தோற்றத்தை அளிக்கிறது. டாஷ்போர்டில் இப்போது மென்மையான, ரப்பர் போன்ற அமைப்பு மற்றும் ஆஃப்-வொயிட், கிரே மற்றும் காப்பர் நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. அப்ஹோல்ஸ்டரில் கொடுக்கப்பட்டுள்ள மியூட்டட் கிரே-வொயிட் தீம், பிரீமியம் உணர்வை கொடுக்கின்றது.
சாய்ந்த பின் இருக்கைகள் மற்றும் கப்ஹோல்டர்களுடன் கூடிய சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் போன்ற புதிய வசதிகளுடன், உட்புறத்தில் உள்ள இடம் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் இருப்பவர்களுக்கு வசதியாக உள்ளது.
அம்சங்கள்
கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப், 8 வழி இயங்கும் டிரைவர் இருக்கை, லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, முன் இருக்கை வென்டிலேட்டட், வயர்லெஸ் சார்ஜர், 10.25" டச் ஸ்க்ரீன், 8-ஸ்பீக்கர் போன்ற முக்கிய எலமென்ட்களை உள்ளடக்கிய கிரெட்டாவின் அம்சங்கள் பட்டியலில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப். 10.25 "டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இதையும் பார்க்கவும்: ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் கிரெட்டாவின் ஒவ்வொரு வேரியன்ட்டின் விவரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன
பாதுகாப்பு
ஹூண்டாய் கிரெட்டாவின் கட்டமைப்பில் மேம்பட்ட உயர் வலிமை கொண்ட இரும்பை பயன்படுத்துவதன் மூலம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டான பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்,எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை அடங்கும். இந்த காரின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்கள் லெவல் 2 ADAS செயல்பாட்டை கொண்டுள்ளன, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங், ரியர் கிராஸ்-டிராஃபிக் அலெர்ட் /சேஃப் எக்சிஸ்ட் வார்னிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் போன்ற அம்சங்கள் இதில் அடங்கும்.
பூட் ஸ்பேஸ்
பூட் ஸ்பேஸ் அதன் 433-லிட்டர் கொள்ளளவை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளது, பெரிதாக மற்றும் அகலமாகவும் உள்ளது. ஒரு பெரிய ட்ராலி பைகளை விட பல சிறிய தள்ளுவண்டி பைகளுக்கு ஏற்றதாக இருக்கும். தேவைப்பட்டால் 60:40 ஸ்பிளிட் செயல்பாடு கூடுதல் லக்கேஜ் வைப்பதற்கான இடத்தை கொடுக்கின்றது.
இயந்திரம் மற்றும் செயல்திறன்
ஹூண்டாய் கிரெட்டாவிற்கு மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை கொடுக்கின்றது: 1.5 லிட்டர் பெட்ரோல் (மேனுவல் அல்லது CVT உடன் கிடைக்கும்), 1.5 லிட்டர் டீசல் (மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் உடன் வழங்கப்படுகிறது), மற்றும் புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் (DCT உடன் மட்டுமே கிடைக்கும்).
1.5 லிட்டர் பெட்ரோல்
வெர்னா, செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்த இன்ஜின், அதன் மென்மையான செயல்திறன், எளிதான ஓட்டுநர் அனுபவம் மற்றும் நல்ல மைலேஜ் ஆகியவற்றிற்காக பிரபலமானதாக உள்ளது. அவ்வப்போது நெடுஞ்சாலை பயணங்களுடன் நகரப் பயணத்துக்கும் ஏற்றது. மிகவும் வசதியான ஓட்டுநர் அனுபவத்திற்காக CVT பதிப்புயே நாங்கள் பரிந்துரைப்போம். நிதானமான டிரைவிங் செய்பவர்களுக்கு இது ஏற்றது; ஆனால் நெடுஞ்சாலையில் கார்களை முந்துவதற்கு திட்டமிடல் தேவை. எதிர்பார்க்கப்படும் மைலேஜ்: நகரத்தில் 12-14 கிமீ/லி, நெடுஞ்சாலையில் 16-18 கிமீ/லி.
1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்
இது ஸ்போர்ட்டியர் ஆப்ஷன், டிரைவிங்கில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். உடனடி ரெஸ்பான்ஸ் செய்கின்றது, குறிப்பாக ஸ்போர்ட் மோடில் ஓட்டுவத்ற்கு விரைவாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றது. வாகனம் ஓட்டுவதை ரசிப்பவர்களுக்கும் உற்சாகமான செயல்திறனை விரும்புபவர்களுக்கும் மிகவும் பொருத்தமானது. கனரக நகர போக்குவரத்தில் இதன் மைலேஜ் குறைவாகவே உள்ளது, சராசரியாக 9-11 கிமீ/லி; நெடுஞ்சாலைகளில் ஓரளவு கூடுதலாக கொடுக்கின்றது, சராசரியாக 15-17 கிமீ/லி.
1.5 லிட்டர் டீசல்
இது ஆல்-ரவுண்டராகவே பார்க்கப்படுகின்றது, மென்மையான செயல்திறன், ஆற்றல் மற்றும் மைலேஜ் ஆகியவற்றை ஆகியவற்றை சமநிலையோடு வழங்குகின்றது. மேனுவல் பதிப்பில் கூட இலகுவான மற்றும் யூகிக்கக்கூடிய அளவிலேயே கிளட்ச் உள்ளது, இது ஓட்டுவதை எளிதாக்குகிறது. மென்மையான ஓட்டுநர் அனுபவத்திற்காக ஆட்டோமெட்டிக் எடிஷன் பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதல் செலவை ஈடுசெய்ய உதவும் ஆகவே இது நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். எதிர்பார்க்கப்படும் மைலேஜ் : நகரத்தில் 12-14 கிமீ/லி, நெடுஞ்சாலையில் 18-20 கிமீ/லி.
சவாரி மற்றும் கையாளுதல்
சீரற்ற சாலைகளில் இருந்து வரும் அதிர்ச்சிகளை திறம்பட சமாளிக்கும் ஹூண்டாயின் நன்கு டியூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷனுக்கு நன்றி. கிரெட்டா பயணத்திற்கு வசதியான வாகனமாக உள்ளது. மிதமான வேகத்தில் கூட, கரடுமுரடான பரப்புகளில் கார் குறைந்தபட்ச பாடி மூவ்மென்ட்களை கொண்டிருக்கின்றது. இருப்பினும், இல்லாத சாலைகளில் ஊர்ந்து செல்லும் வேகத்தில் சில பக்கவாட்டு அசைவுகளை கவனிக்க முடியும். நெடுஞ்சாலைகளில், மென்மையான சாலைகளில் 100 கிமீ வேகத்தில் கிரெட்டா ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நிலைத்தன்மையையும் அமைதியையும் கொண்டுள்ளது.
ஸ்டீரியங் இலகுவானது மற்றும் ரெஸ்பான்ஸிவ் ஆக உள்ளது, இது நகரத்தில் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் பொருத்தமானது. இது ஒரு நல்ல சமநிலையைத் கொண்டுள்ளது, நெடுஞ்சாலை பயணங்களுக்கு போதுமான எடையை வழங்குகிறது. திருப்பங்களில செல்லும்போது, கிரெட்டா நடுநிலையாகவும், யூகிக்கக்கூடியதாகவும் இருக்கும். சில இடங்களில் எதிர்பார்க்கப்படாத பாடி ரோல் ஏற்பட்டாலும் கூட இது பதட்டத்தை கொடுப்பதில்லை. ஒட்டுமொத்தமாக, கிரெட்டா நகரம் மற்றும் நெடுஞ்சாலையில் வசதியான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஓட்டுநர் அனுபவத்தை கொடுக்கின்றது.
தீர்ப்பு
கிரெட்டா இன்னமும் ஒரு குடும்பத்துக்கான சிறந்த காராகவே தொடர்கிறது, இது போதுமான இடவசதி மற்றும் விரிவான அம்சங்களுடன் நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் சிறப்பான வசதிகளின் தொகுப்பை வழங்குகிறது. ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் விதிவிலக்கானதாக இல்லாவிட்டாலும், கிரெட்டா பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்குகிறது. மேலும் சமீபத்திய அப்டேட்டால் விலை உயர்வு இருந்த போதிலும் அதைக் கருத்தில் கொள்வதற்கான காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்றாகவே மாறியுள்ளன.