சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பின்புறம் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வரும் 5-door Mahindra Thar

மஹிந்திரா தார் ராக்ஸ் க்காக அக்டோபர் 26, 2023 07:13 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

மஹிந்திராவின் நீளமான தார் கூடுதல் கதவுகள் மற்றும் நீண்ட வீல்பேஸை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கூடுதல் அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும்.

  • நேர்த்தியான லைட் எலமென்ட்களுடன் உறுதியான பின்புறத்தோற்றத்தை பெறுகிறது.

  • புதிய கேபின் தீம் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்ட சில புதிய அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்களை பெற உள்ளது.

  • இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் இந்தக் கார் ரூ. 15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளிவரக்கூடும்.

5-டோர் மஹிந்திரா தார் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக கார் தயாரிப்பு நிறுவனத்தால் விரிவாக சோதிக்கப்பட்டு வருகிறது மற்றும் ஆஃப்-ரோடரின் புதிய ஸ்பை ஷாட்டுகள் அடிக்கடி ஆன்லைனில் வெளிவருகின்றன. அதன் சமீபத்திய பார்வையில், முன்பக்கத் தோற்றம் புதிய LED ஹெட்லேம்ப் மற்றும் DRL அமைப்புடன் காணப்பட்டது, அதன் பின்புறப் தோற்றம் மீண்டும் விரிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. பெரிய மஹிந்திரா தார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ உங்களுக்காக:

பெரிய வடிவம்

ஒரு ஆஃப்-ரோடராக இருப்பதால், 3-டோர் மஹிந்திரா தார் எப்பொழுதும் முரட்டுத்தனமாகவும், உறுதியானதாகவும் தோற்றமளிக்கிறது, மேலும் அதன் 5-டோர் வெர்சன் இதை உச்சநிலைக்கு கொண்டு செல்லும். ஸ்டாண்டர்ட் 3-டோருடன் ஒப்பிடும்போது, ​​பின்புற தோற்றத்தில் வித்தியாசமான நேர்த்தியான LED டெயில் விளக்குகள் உள்ளன, மேலும் உற்பத்தி நிலையிலிருந்து தயாரான 5-ஸ்போக் அலாய் வீல்களும் இங்கே காணப்படுகின்றன.

அதன் பக்கவாட்டுத் தோற்றம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒரே மாதிரியாக இருக்கும், ஆனால் நீண்ட வீல்பேஸ் மற்றும் இரண்டு கூடுதல் கதவுகளுடன் இருக்கும். 6-ஸ்லாட் கிரில் மற்றும் வட்ட வடிவ LED லைட்டிங் அமைப்புடன் முகப்புத்தோற்றம் அதிக வலுவானது. மேலும், இந்த பதிப்பு சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் வரும்.

பெரிய தார் காரின் உட்புறம்

மஹிந்திரா வெளிப்புறத்தில் மட்டும் மாற்றங்களைச் செய்யாமல் உட்புறத்திலும் மாற்றங்களைச் செய்யும். சமீபத்திய ஸ்பை ஷாட்டுகளில் ஒன்று சென்டர் கன்சோலில் பெரிய டச் ஸ்கிரீன் இருப்பதை வெளிப்படுத்தியது, மேலும் கேபின் தீம் புதியதாக இருப்பதையும் காட்டுகிறது.

மேலும் படிக்க: டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டைவிட மஹிந்திரா XUV700 வழங்கும் 5 விஷயங்கள்

அதன் அம்சங்கள் பட்டியலைப் பொறுத்தவரை, பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் சன்ரூஃப் தவிர, இது டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பின்புற ஏசி வென்ட்களையும் பெறலாம். பயணிகளின் பாதுகாப்பிற்காக, மஹிந்திரா நிறுவனம் அதிகபட்சம் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS , எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றை வழங்குகிறது.

ஆற்றலைத் தருவது எது?

தாரை இயக்க, மஹிந்திரா அதன் 3-டோர் வெர்சனில் காணப்படும் 2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்க முடியும். இந்த இன்ஜின்கள் பெரும்பாலும் ஹையர் லெவல் ட்யூனிங்கில் இருக்கும் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வழங்கப்படலாம். ஸ்டான்டர்டு தார் போலவே, 5-டோர் வெர்சனும் பின்புற வீல் டிரைவ் (RWD) மற்றும் 4-வீல் டிரைவ் (4WD) அமைப்புகளுடன் வழங்கப்படலாம்.

மேலும் காணவும்: புதிய அலாய் வீல்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில்லேம்ப்கள் உடன் மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது

அறிமுகம், விலை போட்டியாளர்கள்

5-டோர் மஹிந்திரா தாருக்கான குறிப்பிட்ட வெளியீட்டு தேதி எதுவும் இல்லை, ஆனால் இது 2024 மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது 3-டோர் வெர்சனை விட ப்ரீமியம் பெறும் மற்றும் அதன் எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலை ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). அது மாருதி ஜிம்னி மற்றும் 5-டோர் ஃபோர்ஸ் குர்க்கா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள: தார் ஆட்டோமேட்டிக்

Share via

Write your Comment on Mahindra தார் ROXX

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை