Mahindra Thar Roxx டீலர்ஷிப்களுக்கு வந்துவிட்டது
published on செப் 13, 2024 05:24 pm by anonymous for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 65 Views
- ஒரு கருத்தை எழுதுக
கூடுதல் டோர்கள் மட்டுமல்லாமல், தார் ராக்ஸ் அப்டேட் செய்யப்பட்ட ஸ்டைலிங் மற்றும் 3-டோர் மாடலுடன் ஒப்பிடும்போது மிகவும் நவீன கேபினை பெற்றுள்ளது.
-
எஸ்யூவி-க்கான டெஸ்ட் டிரைவ்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்க உள்ளது.
-
முன்பதிவுகள் அக்டோபர் 3 ஆம் தேதி திறக்கப்படும், டெலிவரிகள் 2024 தசரா முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எஸ்யூவி ஆறு விதமான டிரிம்களில் கிடைக்கிறது மற்றும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது.
-
இது ரியர்-வீல் டிரைவ் மற்றும் ஃபோர்-வீல் டிரைவர்ட்ரைன் ஆப்ஷன்களில் வருகிறது.
-
ரியர்-வீல் டிரைவ் வேரியன்ட்களுக்கான விலை ரூ. 12.99 லட்சம் முதல் ரூ.20.49 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும்.
-
ஃபோர்-வீல் டிரைவ் வேரியன்ட்களுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த மாதம் 5-டோர் மஹிந்திரா தார் ராக்ஸ் ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) என்ற அறிமுக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 5-டோர் கொண்ட ஆஃப்-ரோடர் இப்போது டீலர்ஷிப்களுக்கு வந்துவிட்டது, டெஸ்ட் டிரைவ்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தார் ராக்ஸிற்கான முன்பதிவுகள் அக்டோபர் 3, 2024-இல் திறக்கப்படும், மேலும் டெலிவரிகள் அக்டோபர் 12 ஆம் தேதி (2024 தசரா பண்டிகையின் போது) தொடங்கும். டீலர்ஷிப்பைப் பார்வையிடும் முன், தார் ராக்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ.
மேலே உள்ள படங்களில், காட்சிப்படுத்தப்பட்ட மாடல் தார் ராக்ஸின் டாப்-ஸ்பெக் AX7L வேரியன்ட் என்பதை நாம் காணலாம். இதில் 19-இன்ச் அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா சிஸ்டம் மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற சிறப்பம்சங்கள் இருப்பது நமக்கு தெரிய வருகிறது. கூடுதலாக, இது டூயல்-டோன் கருப்பு மற்றும் வெள்ளை கேபினை லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகிறது, அத்துடன் பவர்டு டிரைவர் சீட் மற்றும் காற்றோட்டமான முன் சீட்கள் போன்ற கூடுதல் வசதிகளையும் இது பெறுகிறது.
5-டோர் தார் முழுவதும் ஏராளமான சாஃப்ட்-டச் எலமென்ட்களுடன் கூடிய உயர்தர கேபினை கொண்டுள்ளது, இது ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற பெரிதும் விரும்பத்தக்க அம்சங்களுடன் வருகிறது.
கூடுதலாக, இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் கீலெஸ் என்ட்ரி போன்ற சிறப்பம்சங்களைப் பெறுகிறது.
பயணிகளின் பாதுகாப்பிற்காக தார் ராக்ஸ் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றுடன் வருகிறது.
மஹிந்திரா தார் ராக்ஸை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது: 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின். இரண்டு பவர்டிரெய்ன்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆப்ஷன்களுக்கான விரிவான இன்ஜின் விவரக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா தார் ராக்ஸ் இன்ஜின் ஆப்ஷன்கள் |
||
இன்ஜின் |
2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் |
2.2 லிட்டர் டீசல் இன்ஜின் |
பவர் |
162 PS (MT)/ 177 PS (AT) |
152 PS (MT மற்றும் AT)/ 175 PS (4X4 AT) வரை |
டார்க் |
330 Nm (MT)/380 Nm (AT) |
330 Nm (MT and AT)/ Up to 370 Nm (4X4 AT) |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீட் MT/6-ஸ்பீட் AT |
6-ஸ்பீட் MT/6-ஸ்பீட் AT |
டிரைவ்டிரெய்ன் |
ரியர்-வீல்-டிரைவ் |
ரியர்-வீல்-டிரைவ்/4-வீல்-டிரைவ் |
ஃபோர்-வீல் டிரைவ் வேரியன்ட்களுக்கான விலையை மஹிந்திரா இன்னும் அறிவிக்கவில்லை. ரியர்-வீல் டிரைவ் தார் ராக்ஸ் ரூ. 12.99 லட்சம் முதல் ரூ. 20.49 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஃபோர்ஸ் குர்கா 5-டோருடன் போட்டியிடுகிறது மற்றும் மாருதி சுஸுகி ஜிம்னிக்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும்.
புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: Mahindra Thar ROXX-இன் ஆன் ரோடு விலை