Mahindra Thar Roxx: ADAS மற்ற ும் பாதுகாப்பு விவரங்கள்
published on ஆகஸ்ட் 30, 2024 05:00 pm by rohit for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 78 Views
- ஒரு கருத்தை எழுதுக
பிரீமியம் பாதுகாப்பு வசதிகளுடன் வரக்கூடிய முதல் பட்ஜெட் மார்கெட் ஆஃப்ரோடர் தார் ரோக்ஸ் ஆகும், இது தார் காரில் முதல் முறையாக இந்த வசதி வருகிறது.
மஹிந்திரா தார் ரோக்ஸ் அறிமுகத்திற்கு முன்னும் பின்னும் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்புகளை அது உருவாக்கியுள்ளது, புதிதாக கார் வாங்குவோர் மற்றும் கார் ஆர்வலர்களின் கவனத்தை இது பெருமளவில் ஈர்த்துள்ளது. அதன் பல பிரீமியம் வசதிகளில், மஹிந்திரா முதல் முறையாக தார் கார்களின் வரிசையில் லெவல்-2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்மை (ADAS) அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தவொரு வெகுஜன-சந்தை ஆஃப்-ரோடரும் இந்த மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வரக்கூடிய முதல் நிகழ்வையும் இது குறிக்கிறது. எஸ்யூவி-யை ஓட்டுவதற்கும் அதன் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்மை (ADAS) சாலைகளில் ஓட்டி சோதிப்பதற்கான வாய்ப்பு சமீபத்தில் எங்களுக்கு கிடைத்தது. டெஸ்ட் டிரைவ் செய்த பிறகு நாங்கள் கவனித்த விவரங்கள் இதோ:
நாங்கள் ஓட்டிய அனுபவம்
எஸ்யூவி-யில் பயணித்த குறுகிய காலத்திற்குள் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட், லேன்-டிபார்ச்சர் வார்னிங் மற்றும் டிராபிக் சைன் ரெகக்னிஷன் போன்ற பல நடைமுறையான அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் சோதித்த ADAS வசதிகளைப் பற்றிய எங்கள் மதிப்பீடு இதோ:
-
அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் - இந்த அம்சம் குறைவான ட்ராஃபிக் உள்ள சாலையின் அகலமான, திறந்தவெளியில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், வழக்கமான நெடுஞ்சாலைகளில், அதன் எதிர்வினை திடீரென இழுப்பது போன்று நீங்கள் உணரலாம், இதனால் கார் தேவையானதை விட அடிக்கடி பிரேக் செய்ய முடியும் (நீங்கள் வழக்கமாக ஆக்சிலரேட்டரைத் தணித்து, காரைக் கரையேற்ற அனுமதிக்கும் சூழ்நிலைகளில் கூட). இந்த அடிக்கடி பிரேக்கிங் செய்வது எரிச்சலூட்டும் மற்றும் உங்கள் பிரேக் லைட்கள் ஒளிரும் போது உங்களுக்குப் பின்னால் வரும் வாகன டிரைவர்களையும் எரிச்சலூட்டலாம்.
-
ட்ராஃபிக் சைன் ரெகக்னிஷன் - இது திறம்பட செயல்படும் போது, டிரைவரின் டிஸ்பிளேயில் டிராஃபிக் சிக்னல்கள் அடிக்கடி அடுத்தடுத்து காட்டுகிறது இதன் காரணமாக சாலைகளில் கவனம் செலுத்துவது கஷ்டமாக இருப்பதால் அவற்றை ஆஃப் செய்ய வழிவகுத்தது.
-
லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் லேன்-டிபார்ச்சர் வார்னிங் - இந்த வசதிகள் நீண்ட பயணங்களில் மிகவும் உதவியாக இருக்கும், ஆனால் அவை மோசமாகக் குறிக்கப்பட்ட அல்லது குறிக்கப்படாத சாலைகளில் குழப்பமடையலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் அவற்றை அணைப்பது நல்லது.
-
ஆட்டோ-எமர்ஜென்சி பிரேக்கிங்- அவசரகால சூழ்நிலைகளில் பிரேக்கிங் செய்வதற்கான அதன் முக்கிய பணியைத் தவிர, தேவைப்படும் போது ஷார்ட்-பிரேக்கிங் நோக்கங்களுக்கும் இது செயல்பட தொடங்கும். முந்திச் செல்வதற்கான இடைவெளிகள் மிகப் பெரியதாக இல்லாத நெடுஞ்சாலைகளில் டிரக்கர்களுக்கு இடையில் முந்திச் செல்லும்போது இது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
-
ஹை-பீம் அசிஸ்ட் - இந்த அம்சம் தானாக ஹை-பீமில் இருந்து லோ-பீமிற்கு மாறுகிறது, இது வரவிருக்கும் டிராஃபிக்கைக் கண்டறியும் போது, மற்ற டிரைவர்களுக்கு கண்ணை கூசுவதைத் தடுக்க உதவுகிறது. தார் ராக்ஸ்ஸுடனான எங்களின் பயணத்தின் போது, ஹை-பீம் உதவி மிகவும் திறம்பட செயல்பட்டதைக் கண்டறிந்தோம்.
தொடர்புடையவை: 5 டோர் Mahindra Thar Roxx: புதிய ஆஃப்ரோடரில் நாம் பார்க்க விரும்பும் 10 விஷயங்கள்
காரில் உள்ள கூடுதல் பாதுகாப்பு வசதிகள்
ADAS உடன் கூடுதலாக, மஹிந்திரா தார் ரோக்ஸ் 6 ஏர் பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் ஃப்ரன்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ரெய்ன்-சென்சிங் வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
மஹிந்திரா தார் ரோக்ஸ் இன்ஜின் ஆப்ஷன்கள்
விவரங்கள் |
2 லிட்டர் டர்போ பெட்ரோல் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
177 PS வரை |
175 PS வரை |
டார்க் |
380 Nm வரை |
370 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் AT |
6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் AT |
டிரைவ்டிரெய்ன் |
RWD* |
RWD, 4WD^ |
*RWD - ரியர்-வீல்-டிரைவ், ^4WD – 4-வீல்-டிரைவ்
மேலும் பார்க்க: 5 டோர் Mahindra Thar Roxx மற்றும் 3 டோர் Mahindra Thar: கார்தேக்கோ இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் எந்த தாரை தேர்வு செய்கிறார்கள்?
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை ரூ. 12.99 லட்சம் முதல் ரூ. 20.49 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). டீசல் 4x4 வேரியன்ட்களுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மஹிந்திரா தார் ரோக்ஸ் ஃபோர்ஸ் கூர்கா 5-டோருடன் போட்டியிடுகிறது மற்றும் மாருதி ஜிம்னியுடன் ஒப்பிடும்போது பெரிய ஆப்ஷனை வழங்குகிறது. ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி-களுக்கு எதிராகவும் இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ரோக்ஸ் ஆன் ரோடு விலை