2023 ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் 5 கார்கள்
published on மார்ச் 28, 2023 04:54 pm by tarun for டொயோட்டா இனோவா கிரிஸ்டா
- 32 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த பட்டியலில் ஒரு EV, புத்தம் புதிய சப் காம்பாக்ட் கிராஸ்ஓவர் மற்றும் இரண்டு புதிய ஃபெர்பாமன்ஸ் கொண்ட கார்கள் உள்ளன.
ஏப்ரல் மாதத்தில் நிறைய கார்கள் வெளிவராமல் இருக்கலாம், ஆனால் வெளிவரக்கூடியவை அனைத்தும் உற்சாகமான அறிமுகங்கள். மாருதி ஒரு புதிய SUV-கிராஸ் ஓவரைக் கொண்டுவருகிறது, அதே நேரத்தில் MG நிறுவனம் நமக்கு ஏற்றபடி மிகவும் குறைவான விலையில் மின்சார கார்களைக் அறிமுகப்படுத்துகிறது. பட்ஜெட் பிரிவைத் தவிர, எங்களுக்கு தெரிந்து இரண்டு வேகமான மற்றும் விலையுயர்ந்த கார்களும் விற்பனைக்கு வருகின்றன.
2023 ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் அல்லது அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஐந்து கார்கள் இதோ:
மாருதி ஃப்ரான்க்ஸ்
எதிர்பார்க்கப்படும் அறிமுகத் தேதி - ஏப்ரல் மாத தொடக்கத்தில்
எதிர்பார்க்கப்படும் விலை - 8 இலட்சம் ரூபாய் முதல்
மாருதி ஃப்ரான்க்ஸ் ஃப்ரான்க்ஸ் ஏப்ரல் முதல் வாரத்தில் விற்பனைக்கு வர உள்ளது. பலேனோ-அடிப்படையிலான கிராஸ்ஓவர் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் வெளியிடப்பட்டது மற்றும் முன்பதிவு மற்றும் காட்சிக்காக டீலர்ஷிப்களில் ஏற்கனவே கிடைக்கிறது. ஃப்ரான்க்ஸ் ஆனது பலேனோவின் 90PS 1.2-லிட்டர் பெட்ரோல் பிரிவு மற்றும் அற்புதமான 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும். இது ஒன்பது இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், ஆறு ஏர்பேக்குகள், ESC மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பிரெஸ்ஸாவின் அதே சப்காம்பாக்ட் SUV லீக்கில் ஃப்ரான்க்ஸ் நிலைநிறுத்தப்படும், ஆனால் மிகவும் குறைவான விலையில் அது கிடைக்கும். சுமார் ரூ.8 இலட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் அதன் விலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
MG காமெட் EV
எதிர்பார்க்கப்படும் அறிமுகத் தேதி - ஏப்ரல் மத்தியில்
எதிர்பார்க்கப்படும் விலை - 9 இலட்சம் ரூபாய் முதல்
MG -யின் சிறிய இரண்டு-கதவு மின்சார கார்,காமெட் EV, ஏப்ரல் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக், sub-3-மீட்டர் நீளமுள்ளதாக இருக்கும் இது, டாடா நானோவை விட சிறியதாக இருக்கும். இந்தோனேசிய-ஸ்பெக் ஏர் EV, 17.3kWh மற்றும் 26.7kWh பேட்டரி பேக்குகளின் தேர்வைப் பெறுகிறது, இது முறையே 200 மற்றும் 300 கிலோமீட்டர்கள் வரை பயணதூரத்தைக் கொடுக்கலாம். இரண்டு ஆப்ஷன்களும் இந்தியாவிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவரின் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள், ஏசி, டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றுடன் டூயல் 10.25-இன்ச் டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் கொண்டதாக இருக்க கூடும். டாடா டியாகோ EV மற்றும் சிட்ரியோன் eC3 க்கு போட்டியாக, காமெட் EV யின் விலை சுமார் ரூ.9 இலட்சம் முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் டாப்-எண்ட் வேரியன்ட்கள்
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி - ஏப்ரல் இறுதியில்
எதிர்பார்க்கப்படும் விலை - 22 இலட்சம் ரூபாய் முதல்
டொயோட்டா சமீபத்தில் இன்னோவா கிரிஸ்டாவின் பேஸ்-ஸ்பெக் G மற்றும் GX கார்களின் விலைகளை வெளியிட்டது. இருப்பினும், VX மற்றும் ZX கார் வேரியன்ட்களின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, இது ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிஸ்டா இப்போது டீசல்-மேனுவல் காம்பினேஷனுடன் கிடைக்கிறது, அதன் 150PS 2.4-லிட்டர் டீசல் இன்ஜினை ஐந்து-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பயன்படுத்துகிறது. எட்டு இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், பவர்டு டிரைவர் சீட், ஏழு ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றுடன் டாப்-எண்ட் வேரியன்ட் கார் வகைகளுக்கான அம்சப் பட்டியல் தொடரும்.
லம்போர்கினி உருஸ் S
வெளியீட்டு தேதி - ஏப்ரல் 13
ஃபேஸ்லிப்டட் உருஸ், S கார் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகலாம். அதே 666PS 4.4-லிட்டர் ட்வின்-டர்போ V8 ஐப் பயன்படுத்தி, இது சூப்பர் எஸ்யுவியின் செயல்திறன் வேரியன்டைப் போலவே சக்தி வாய்ந்தது மற்றும் விரைவானது. இது வெறும் 3.7 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டிவிடும். உருஸ் S அதன் முன்னோடிகளை விட சற்று வித்தியாசமாகத் தெரிகிறது, கூடுதலான ஆக்ரோஷமான கிரீஸ்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்ப்பர்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பின்புற தோற்றம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அம்சங்களில், ஏர் சஸ்பென்ஷன் மற்றும் டிரைவிங் மோட்கள் முந்தையதைப் போலவே தொடர்கின்றன.
மெர்சிடீஸ் AMG GT S E ஃபெர்பாமன்ஸ்
வெளியீட்டு தேதி - ஏப்ரல் 11
ஜெர்மன் மார்க்கின் முதல் பிளக்-இன்-ஹைப்ரிட் AMG ஏப்ரல் தொடக்கத்தில் இந்தியச் சாலைகளில் ஓடும். இது 639PS மற்றும் 900Nm க்கு டியூன் செய்யப்பட்ட 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 மூலம் இயக்கப்படுகிறது. ICE இன்ஜினுடன் இணைந்து செயல்படும் வகையில் 204PS/320Nm பின்புற ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் உள்ளது. முழு செட் அப்பும் அசாத்தியமான 843PS மற்றும் 1470Nm வரை உள்ள சக்தியைக் வழங்குகின்றன! 6.1kWh பேட்டரி பேக் சிறந்த செயல்திறனை பெற உதவுகிறது மற்றும் குறைந்தபட்சம் 12 கிலோமீட்டர் தூர ரேஞ்சை வழங்குகிறது. நான்கு-கதவு GT கூபே ஸ்போர்ட்ஸ், ஸ்டான்டர்டு பதிப்பை விட ஸ்டைலிங் மாற்றங்களை வழங்குகிறது, உள்ளே மற்றும் வெளியே இரண்டிலும்; அவற்றில் பெரும்பாலானவை PHEV க்கு மட்டுமே பிரத்தியேகமானதாக உள்ளது.
BS6 நிலை 2 இணக்கமான கார்கள்
பல கார் தயாரிப்பாளர்கள் தங்கள் BS6 -இரண்டாம் நிலைக்கு இணக்கமான கார் வரிசைகளை வெளியிட்டுள்ளனர், மஹிந்திரா, நிஸான், ஹோண்டா, MG மற்றும் டொயோட்டா போன்ற சில கார் தயாரிப்பாளர்கள் இன்னும் இந்த பட்டியலில் சேரவில்லை. அறிமுகப்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் RDE -க்கு இணக்கமாக இருக்க வேண்டும்.